விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நோர்வே மேற்கொண்ட முயற்சிகள் இறுதியில் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்களை ஆராய்வதற்கான சர்வதேச கருத்தரங்கு ஒன்று இன்று வெள்ளிக் கிழமை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறவிருக்கின்றது.
இந்தக் கருத்தரங்களின் முக்கிய அம்சமாக நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பான விஷேட ஆவணம் ஒன்றும் இன்று வெளியிடப்படவிருக்கின்றது. நீண்ட ஆய்வுகளை உள்ளடக்கியுள்ள இந்த அறிக்கையில் இதுவரையில் வெளிவராத புதிய தகவல்கள் பல இடம்பெற்றிருக்கும் என ஒஸ்லோ வட்டாரங்கள் தெரிவித்தன.
அபிவிருத்திக் கூட்டுறவுக்கான நோர்வேயின் முகவரமைப்பான நோராட் (NORAD) இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது.
இன்றைய நிகழ்வில் பங்குகொள்வதற்காக கொழும்பு மாநகரசபையின் எதிரணித் தலைவரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகருமான மிலிந்த மொரகொடை அரசாங்கத்தினால் ஒஸ்லோவுக்கு அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மொரகொட விடுதலைப் பலிகளுடனான பேச்சுக்களில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் வெளியிடப்படும் அறிக்கை the Christian Michelsen Institute என்ற அமைப்பினால் School of Oriental and African Studies, University of London ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. 1997 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வரும் வரையிலான காலப்பகுதியில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தொடர்பாக இந்த அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுயாதீனமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமை, போரின் ஆரம்பம், 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தமை உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் என்பவற்றுக்கு நோர்வே வழங்கிய நிதி உதவிகள் தொடர்பான விபரங்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிகளை கடும்போக்கு சிங்களத் தேசியவாதக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவும் இந்தப் பேச்சுக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வேயின் சார்பில் விஷேட தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் றிச்சர்ட் ஆமிரேஜ் உட்பட பல முக்கியஸ்த்தர்கள் ஒஸ்லோவில் இன்று நடைபெறும் நிகழ்வில் பங்குகொள்வார்கள்.
இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் நிலையில் இந்த ஆய்வறிக்கையை நோர்வே வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment