Tuesday, August 30, 2016

மறைந்திருக்கும் அபாயம் என்ன?

காணமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கு பாராளுமன்றம் அங்கீகாரமளித்திருக்கின்றது. இது குறித்த சட்டமூலத்தை சட்டமாக அங்கீகரித்து சபாநாயகர் கரு ஜயசூரியவும் கையொப்பமிட்டுள்ளார். இதன்மூலம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. சர்வதேசத்தின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகச் செய்யப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இதனைப் பார்க்க முடியும். மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான கூட்டு எதிரணி உட்பட இனவாதக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதில் நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதும் வெளிப்படையாகவே தெரிகின்றது. எதிர்ப்புக்கள் கடுமையாகவிருந்த பின்னணியில்தான் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்களைச் செய்வதற்கும் தயாராகவிருப்பதாக அரசாங்கம் அறிவித்தது.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைத்துக்கொள்வது என்பது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உத்தரவாதமளளிக்கப்பட்டிருந்தது. இலங்கையும் இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தமை கவனிக்கத்தக்கது. தீர்மானத்தின் நான்காவது பிரிவில் இது குறித்து திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான அலுவலகம் ஒன்றை அமைத்துக்கொள்வதில் தென்பகுதியிலிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்களைக் கவனத்திற்கொண்டு காலத்தைக் கடத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வந்துள்ளது. இருந்தபோதிலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 12 நாடுகளினால் வெளிப்படுத்தப்பட்ட கடுமையான அழுத்தம் காரணமாகவே இப்போது குறித்த சட்டமூலம் அவசரமாகக்கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டதாக பொது எதிரணியின் முக்கிய பிரமுகராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். "இந்த காணாமல்போனோர் அலுவலகத்தின் பின்னணியில் பாரிய அபாயம் மறைந்திருக்கின்றது" என சிங்கள மக்களை உசுப்பேத்துவதற்கும் பேராசிரியர் முற்பட்டிருக்கின்றார்.

அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான ஆயுதங்களில் ஒன்றாக காணாமல்போனோர் அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது எதிரணி திட்டம் வகுத்துச் செயற்பட முனைந்திருப்பதை பேராசிரியர் பீரிஸின் இந்த அறிவிப்பு புலப்படுத்துகின்றது. பொது எதிரணியைப் பொறுத்தவரையில் சிங்கள - பௌத்த தேசியவாதமே அதன் அச்சாணியாக உள்ளது. அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான பிரதான ஆயுதமாக அதனைத்தான் பொது எதிரணி பயன்படுத்துகின்றது. இதனைவிட அவர்களிடம் வேறு கொள்கைகள் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்தநிலையில் இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் விடயம்தான் 'காணாமல்போனோர் அலுவலகம்'! இந்த விடயத்தை தாம் கையில் எடுப்பதை நியாயப்படுத்தும் வகையில் கொள்கை ரீதியான ஒரு விளக்கத்தைக் கொடுப்பதற்கு பேராசிரியர் பீரிஸ் முற்பட்டிருக்கின்றார். "இதனை வெறுமனே இனவாதக் கண்ணோட்டத்துடன் நாம் பார்க்கவில்லை. இதில் உண்மையிலேயே பல ஆபத்துக்கள் மறைந்திருக்கின்றன" எனக் காட்டிக்கொள்வதற்கு பேராசிரியர் முற்பட்டிருப்பது தெரிகின்றது.

காணமல்போனோர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகளவான அதிகாரங்கள்தான் முதலாவது ஆபத்து என்பது பேராசிரியரின் கருத்து. அதாவது, "இராணுவம் முகாம்கள் உட்பட எந்தவொரு இடத்துக்கும் எந்த வேளையிலும் செல்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதனைவிட வெளிநாட்டு அதிகாரிகளை வரவழைப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் முடியும். உயர் நீதிமன்றத்தினால் கூட தகவலைப் பெற்றுக்கொள்வதற்கு உரிமை இல்லாத முற்றிலும் இரகசியமாக இயங்கக்கூடிய வகையில் இது அமைக்கப்படுகின்றது. நாட்டின் நிறுவன ரீதியான கட்டமைப்புக்கு முற்றிலும் புறம்பான வகையில் செயற்படக்கூடிய தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை இது கொண்டிருக்கின்றது. அலுவலகம் சர்வதேச ரீதியாகவும் போதிய அதிகாரத்தைக் கொண்டுள்ளது. எந்தவொரு நாட்டுடனும் உடன்படிக்கை ஒன்றுக்குள் அலுவலகம் செல்ல முடியும். அலுவலகத்தின் அதிகாரங்களை மறைமுகமாக வெளிநாட்டு அதிகாரிகள் பயன்படுத்த முடியும்" என தன்னுடைய அச்சத்தை பேராசிரியர் பீரிஸ் வெளிப்படுத்துகின்றார்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை எதற்கும் இடமில்லை எனவும், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த மாதத்தில்தான் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்கள். சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்படும் பிரச்சாரஙங்களை முறியடிக்கும் நோக்கத்துடனேயே இந்த அறிவித்தல் அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது தமது பிரச்சாரங்களை முன்னெடுப்பத்கான புதிய களம் ஒன்றை ராஜபக்‌ஷ அணியினருக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. இது அரசாங்கம் எதிர்பார்க்காத ஒன்று அல்ல. சர்வதேச நிர்ப்பந்தங்கள் இந்த சட்டமூலத்தைக் கொண்டுவர வேண்டிய தேவையை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியது எனலாம். அதேவேளையில், சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு செயற்படப்போவதில்லை எனவும், இராணுவத்தைக் காட்டிக்கொடுக்கப்போவதில்லை எனவும் அரசாங்கம் தொடர்ந்தும் தெரிவித்துவருகின்றது. ராஜபக்‌ஷ அணியினரின் பிரச்சாரங்களை முறியடிப்பதற்காக இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

நாட்டின் பிரதான கட்சிகள் முன்னெடுக்கும் இந்தப் பிரச்சாரங்களின் மத்தியில் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன. போர் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டது. இவ்வளவு காலங்களின் பின்னரும், காணாமல்போனவர்கள் பற்றிய உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை. குறைந்தபட்சம் காணாமல்போனவர்கள் அல்லது காணாமல்போகச்செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையைக் கூட துல்லியமாகச் சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை. எழுந்தமானமாக ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொருவிதமான புள்ளிவிபரங்களையே வெளியிடுகின்றார்கள். காணாமல்போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகள் எங்கேயுள்ளார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுடன் வாழ்கின்றார்கள். இந்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதனைவிட காணாமல்போனவர்களின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் சட்த்தின் முன்பாக நிறுத்தப்படுவதும் அவசியம். இது ஒரு மனிதாபிமான செயற்பாடு. உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படுவதில் என்னதான் அபாயம் மறைந்திருக்க முடியும்?

பேராசிரியர் பீரிஸ் போன்ற சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற புத்திஜீவிகள் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதற்காகவும், நீதி நிலைநாட்டப்படுவதற்காகவும் குரல்கொடுப்பதைவிட்டுவிட்டு, குறுகிய இனவாத நோக்குடன் அடுத்த தேர்தலை இலக்குவைத்துச் செயற்படுவதுதான் மிகவும் ஆபத்தானது. காணாமல்போனோர் செயலகத்தில் அபாயம் எதுவும் மறைந்திருக்கவில்லை. பேராசிரியர் பீரிஸ் போன்றவர்களின் இவ்வாறான இனவாத செயற்பாடுகளில்தான் செயற்பாடுகளில்தான் அபாயம் ஒளித்திருக்கின்றது என்பது எமது கருத்து!

ஞாயிறு தினக்குரல்: 2016/08/28

Wednesday, August 24, 2016

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடையுமா?

- சபரி -
இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடுமா? கட்சியின் வருடாந்த மாநாடு செப்டம்பர் 4 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிரடியான திருப்பங்களை கட்சி சந்திக்குமா?

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியடையும் நிலையில் எழுப்பப்படும் பிரதான கேள்வியாக இவைதான் உள்ளன. தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கண்டியிலிருந்து கொழும்புக்கான பாத யாத்திரையை மேற்கொண்ட பின்னணியில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு அணிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்திருகின்றது.  இந்த நிலையில்தான் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வி வருடாந்த மாநாட்டுக்கான தயார்படுத்தல்களில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது.

கடந்த வருடம் (2015) ஜனவரியில் இடம்பெற்ற அதிகார மாற்றத்தையடுத்தே கட்சி பிளவுபடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுத்தான் வந்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழுவினர் தனியதகச் சென்று புதிய கட்சியை அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட போதிலும், கடந்த ஆகஸ்ட் தேர்தலை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துகொண்டுதான் மகிந்த எதிர்கொண்டார். தேர்தலில் தனியாகப் போவது தற்கொலைக்குச்  சமனானதாகிவிடலாம் என அவர் அஞ்சினார்.

அதிரடி நீக்கம்

இப்போது மோதல்கள் தீவிமடைந்து, மகிந்த அணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் முக்கிய அமைப்­பா­ளர்கள் தமது பத­வி­க­ளி­லி­ருந்து கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் அதி­ர­டி­யாக நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ள நிலையில், ராஜபக்‌ஷ அணியினர் தடுமாறிப் போயிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.  கூட்டு எதிர்க்கட்­சி யில் செயற்­பட்­டு­வரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சி யின் முக்கிய அமைப்­பா­ளர்­களே இவ்­வாறு அதி­ர­டி­யாக ஜனாதிப­தி­யினால் நீக்­கப்­பட்­டுள்­ளனர். 40 புதிய அமைப்­பா­ளர்­களும் சுதந்­திரக்கட்­சிக்கு ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். புதிய மாவட்ட அமைப்­பா­ளர்­க­ளாக 24 பேரும் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளாக 16 பேரையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

கூட்டு எதிர் கட்­சியில் செயற்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கெஹே­லிய ரம்­புக்­வெல்ல , பவித்ரா வன்­னி­யா­ராச்சி ,ரோஹித அபே­கு­ண­வர்­தன , சீ.பீ. ரத்­நா­யக்க , மஹிந்த யாபா அபே­வர்­தன, ஜகத் பால­சூ­ரிய , காமினி லொக்­குகே மற்றும் சரத் குமார உள்­ளிட்­ட­வர்­களின் அமைப்­பாளர் பத­விகள் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. எதிர்­வரும் 4 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 65 ஆவது சம்­மே­ளனம் குரு­நாகல் நகரில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்­கான தயார் படுத்­தல்­களில் சுதந்­திர கட்­சியின் ஏற்­பாட்டு குழு­வினர் தீவி­ர­மாக செயற்­பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு மகிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு ஆத­ர­வ­ளித்­து­வரும் 40 பேர் நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ளனர். இதன்மூலம் கட்சியின் உயர் மட்டத்தில் மகிந்த ஆதரவாளர்கள் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

கட்சி இரண்டாகப் பிளவுபட்டிருப்பதை இந்தச் சம்பவம் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தாலும், மகிந்த தரப்பினர் தனியாகப் பிரிந்து செல்வார்களா என்பது இந்தத் தருணம் வரையில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலையடுத்து கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றிக்கொண்ட மைத்திரிபால சிறிசேன, மகிந்தவை ஓரங்கட்டும் வகையிலான செயற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டுவந்திருக்கின்றார். இந்தச் செயற்பாடுகள் மகிந்த அணியினருக்குச் சீற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தாலும், தனியான கட்சி ஒன்றை அமைத்துக்கொண்டு பிரிந்து செல்வதற்கான துணிச்சல் மகிந்த தரப்பினருக்கு ஏற்படவில்லை என்பது உண்மை. தற்போதும், மைத்திரியின் அதிரடி நடவடிக்கை மகிந்தவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ள போதிலும், தனியாகப் பிரிந்து செல்வதற்கான துணிச்சல் அவருக்கு ஏற்படுமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது.

தயங்கும் மகிந்த

"தனிக் கட்சி அமைத்துக்கொண்டு போய்விடுவேன்" என்பதை ஒரு அச்சுறுத்தலுக்காக மகிந்த சொல்லிக்கொண்டாலும், அதற்கு அவர் தயங்குகின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதற்கு இரண்டு மூன்று காரணங்கள் உள்ளன. கட்சியை பிளவுபடுத்தியவர் என்ற பெயரை எடுத்துக்கொள்ள அவர் விரும்பாமலிருக்கலாம். இரண்டாவாக, தனக்கான ஆதரவு எந்தளவுக்கு இருக்கும் என்பதிலுள்ள தயக்கம். தனிக் கட்சியை அமைத்துக்கொண்டு செல்லும் போது தன்னுடைய பலவீனம் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சமும் அவருக்கு உள்ளது. இறுதியாக, தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம். இதனால்தான் மைத்திரியை வழிக்குக் கொண்டுவர அச்சுறுத்தல்களை அவர் விடுத்தாலும், தனியாகச் செல்வதற்குத் தயங்குகிறார் என கருத இடமுண்டு.

மைத்திரியின் அதிரடி நடவடிக்கையையடுத்து மகிந்த ராஜ­பக் ஷவிற்கும் பொது எதிர்க்­கட்சி எம்.பி.க்க ளுக்கும் இடையே புதன்­கி­ழமை இரவு அவ­சர கலந்­து­ரை­யாடல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. மிரி­ஹா­னை­யி­லுள்ள மஹிந்த ராஜபக் ஷவின் இல்­லத்தில் இக்­க­லந்­து­ரை­யாடல் சுமார் 3 மணி நேரம் இடம்­பெற்­றுள்­ளது. இப்­பேச்­சு­வார்த்­தையில் மகிந்­த­வுக்கு ஆத­ர­வான உதய கம்­மன்­பில, விமல் வீர­வன்ச, வாசு­தேவ நாண­யக்­கார, சி.பி. ரத்­நா­யக்க, பவித்ரா வன்­னி­ய­ராச்சி உட்­பட பலர் கலந்­து­கொண்­டுள்­ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அமைப்­பா­ளர்கள் 16 பேர் ஜனா­தி­ப­தி­யினால் நீக்­கப்­பட்ட புதன்­கி­ழமையன்றே மகிந்த ராஜ­பக் ஷவுடனான இந்த அவ­சர சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது. மைத்திரியின் அதிரடிச் செயற்பாடுகள் மகிந்த அணியினருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதையும், இதற்கான பதிலடியாக என்ன செய்வது என்பதில் அவர்கள் குழம்பிப்போயிருப்பதையும், இந்தச் சந்திப்பு வெளிப்படுத்தியது.

இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது காணாமல் போனோர் தொடர்­பாக அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­வது மற்றும் அது தொடர்­பான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட விதம்­போன்ற விட­யங்­களே ஆரா­யப்­பட்­ட­தாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பா­ளர்கள் நீக்கப்பட்டது கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் கருத்துவெளியிடப்பட்டது. மைத்திரியின் அதிரடிக்குப் பதிலடியாக என்ன செய்வது என்பதில் மகிந்த தரப்பு தீர்மானம் எதனையும் மேற்கொள்ள முடியாதவர்களாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. பாதயாத்திரை எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காத நிலையில் மீண்டும் களத்தில் இறங்குவதற்கும் அவர்கள் தயங்குகின்றார்கள். அதனால்தான், காணாமல்போனோர் அலுவலகம் குறித்த பிரச்சினையை முதன்மைப்படுத்துற்கு அவர்கள் வியூகம் வகுப்பதும் தெரிகின்றது.

அதேவேளையில், கட்சியைப் பிளவுபடுத்தும் வகையில் மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக மகிந்த ராஜபக்‌ஷ கடுமையாகச் சாடியிருக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­கவின் கொள்­கை­களை உதா­சீனம் செய்­வ­தாக மைத்திரியின்  செயற்பாடுகள் அமைந்திருப்பதாக ராஜ­பக் ஷ குற்றம் சுமத்­தி­யுள்ளார்.  மைத்திரியின் நட­வ­டிக்­கையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­யினால் கட்­சி யின் உறுப்­பி­னர்கள் கட்­சியை விட்டு வெளி­யேற நேரிடும் எனவும் மகிந்த தெரி­வித்­துள்ளார். மைத்­திரி ­பால சிறி­சேன ஐக்கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­களை ஏற் றுக்கொண்ட போதிலும், பண்­டா­ர­நா­யக்க அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

மைத்திரியின் சீற்றம்

நல்லாட்சி அரசின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, இதற்குப் பதிலளிக்கும் வகையில் கடும் தொனியில் பேசியிருக்கின்றார். வழமையாக மென்மையாக தனது உரைகளை நிகழ்த்தும் மைத்திரி, அன்றைய தினம் கடும் தொனியில் உணர்ச்சிவசப்பட்டவராக தனது உரையை நிகழ்த்திருப்பது கவனிக்கத்தக்கது. "நாட்டை கொள்ளையடித்து மோசடி செய்தவர்களுக்கு மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை" என இங்கு தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவர்கள் புதிய கட்சி உருவாக்கினால் இதுவரை ரகசியமாக பேணிவந்த பல ரகசியங்களை அம்பலப்படுத்தி வீதி வீதியாக சுற்றும் நிலையை உருவாக்கப் போவதாகவும் கடுமையாக எச்சரித்தார். இதன்மூலம் மகிந்த தரப்பினரின் வாயை அடைப்பதற்கு அவர் முற்பட்டிருக்கின்றார். இரகசியங்களை வெளியிடுவேன் என எச்சரித்து மகிந்த தரப்பை 'பிளாக் மெயில்' பண்ண மைத்திரி முற்படுகின்றாரா என்ற கேள்வியையும் இது எழுப்புகின்றது.

இதனைவிட, அரசாங்கத்துக்கு எதிராக ராஜபக்‌ஷ குழுவினர் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களைச் செயலிழக்கச் செய்யும் வகையில் மேலும் சில விடயங்களையும் அவர் எடுத்துவிட்டார்: பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டத்தில் உள்ள பாதகமான விடயங்களை தானும் பிரதமரும் இணைந்து நீக்கியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிலுள்ள விடயங்களை செயற்படுத்த பாராளுமன்றத்தினூடாக ஒழுங்கு விதிகள் கொண்டு வர புதிய சரத்தொன்றை அதில் இணைத்ததாகவும் கூறினார். சர்வதேச சக்திகளுக்கு தேவையானவாறு நாட்டை ஆளப் போவதில்லை. என்று கூறிய அவர் சர்வதேச சக்திகளுக்கு தலைசாய்க்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எம்மை தேசத்துரோகிகள் காட்டிக் கொடுப்போர் என்று குற்றஞ் சுமத்தியவர்கள் முடிந்தால் மாற்று தீர்வு யோசனையை முன்வைக்குமாறும் ஜனாதிபதி இங்கு சவால் விட்டார்.

இவை அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் ராஜபக்‌ஷ தரப்பினர் இருக்கவில்லை என்பது தெளிவு. கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு மைத்திரி முயல்கின்றார் என ராஜபக்‌ஷ தரப்பு குற்றஞ்சாட்டிக்கொள்கின்ற போதிலும், பிரிந்து செல்வதற்கான துணிச்சல் அவர்களிடம் இல்லை என்பதும் தெரிகின்றது. தன்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உதய கம்பன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன போன்றவர்களின் வங்குரோந்து அரசியலைப் புரிந்துகொள்ள முடியாத ஒருவராக மகிந்த இருக்கமாட்டார். இவர்கள் அனைவரும் தன்னை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கின்றார்கள் என்பது மகிந்தவுக்குத் தெரியும். இவர்களை நம்பி தனிக் கட்சி ஒன்றை அமைத்துக்கொள்வது இருக்கும் பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்கிவிடும் எனவும் ராஜபக்‌ஷ கருதலாம். மைத்திரியின் எச்சரிக்கயும் அவ்வாறானதாகத்தான் அமைந்திருந்தது. புதிய கட்சி தோல்வியடைந்தால், தன்னுடைய நிலை இன்னும் பரிதாபமாகிவிடும் என்பதையும், தன்னை உசுப்பேத்துபவர்கள் தப்பித்துக்கொள்வார்கள் எனவும் மகிந்த கருதலாம். அதனால்தான் எச்சரிக்கை எடுவதற்கு அப்பால் அடுத்த நகர்வை முன்னெடுக்க அவர் தயங்குகின்றார்.

தினக்குரல் 2016/-08/21

ஒரு வருடம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவிகு வந்து ஒரு வருடம் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தக் காலச் சாதனைகள் என்ன என்ற கேள்விக்குப் பதிலைக்காணவேண்டியது அவசியமாகின்றது. சாதிக்க முடியாமல்போன விடயங்கள் என்ன? தடைக்கற்களாக வந்தவை என்ன என்பவற்றைத் தெளிவாகப் பட்டியல் போட்டுக்கொள்வதன் மூலமாகவே அதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும். அடுத்ததாக வரப்போகும் காலங்களுக்கான செயற்றிட்டங்களை வகுத்துக்கொள்வதற்கு இது அவசியம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்திருப்பது இதுதான் முதன்முறையாகும். தேசிய அரசாங்கம் என்ற நடைமுறைக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் சென்றமைக்குப் பிரதான காரணமாக இருந்தது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷதான். மகிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிப்பதற்கு இணைந்து செயற்பட வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. மேற்கு நாடுகள் சிலவற்றின் நிகழ்ச்சி நிரலிலும், ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்க வேண்டும் என்பது முக்கிய இடத்தைப் பெற்றிருந்தமையால், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு சர்வதேசமும் உதவியது.

மகிந்த ராஜபக்‌ஷ இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தாலும் கூட, இலங்கை அரசியலில் சக்திவாய்ந்த ஒருவராக அவர் வருவதற்குக் காரணமாக இருந்தது விடுதலைப் புலிகளுடனான போரில் அவர் பெற்றுக்கொண்ட வெற்றிதான். 30 வருடமாக இடம்பெற்ற போரில் வெற்றிபெற்ற அவர், பல வருடங்களின் பின்னர் இலங்கையின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தார். இதன்மூலமாக, சிங்கள மக்கள் மத்தியில் எந்த ஒரு தலைவரும் பெற்றுக்கொள்ளாத ஆதரவை அவர் பெற்றுக்கொண்டிருந்தார். தன்னை யாராலும் அசைக்க முடியாது எனக் கணக்குப் போட்ட அவர், சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கும் முயன்றார்.

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வரக்கூடிய வகையில் அரசியலமைப்பைத் திருத்தினார். அவசரமாக இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். இந்த இடத்தில்தான் எதிர்க்கட்சிகள் மிகுந்த திட்டமிடலுடன் செயற்பட்டு பொது வேட்பாளராக மைத்திரியைக் களமிறக்கி ராஜபக்‌ஷவைத் தோற்கடித்தன. ராஜபக்‌ஷ யுகம் முடிக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இருந்தபோதிலும், இனவாத சக்திகளின் ஆதரவுடன் அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கும் ஒருவராகவே ராஜபகஷ தொடர்ந்தும் இருக்கின்றார். மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அவர் துடித்துக்கொண்டிருக்கின்றார்.

தேர்தலில் ராஜபக்‌ஷவைத் தோற்கடிப்பதற்கு சிறுபான்மையினருடைய வாக்குகளே உதவியிருந்தன. ராஜபக்‌ஷ ஆட்சியில் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தேர்தலின் போது சிறுபான்மையினர் பழிவாங்கினார்கள் எனச் சொல்லலாம். அதேவேளையில், நல்லிணக்க அரசாங்கத்தில் அதீத நம்பிக்கையையும் சிறுபான்மையின மக்கள் வைத்திருந்தர்கள். ராஜபக்‌ஷ யுகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கான தீர்வை அவர்கள் மைத்திரியிடமும் ரணிலிடமும் எதிர்பார்தார்கள். பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைப் பெற்றுக்கொண்டிருந்தாலும், அரசாங்கத்துடன் இணக்க அரசியல் ஒன்றைத்தான் செய்துவருகின்றது. அதுவும் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது.

நீடித்து நிலைத்துநிற்ககக்கூடிய ஒரு அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால், உடனடியான பிரச்சினைகள் பவற்றுக்கும் தீர்வைத் தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றச் செயற்பாடுகள், காணமல் போனவர்களின் பிரச்சினை என்பவற்றுடன் போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த கடந்த ஒருவருட காலத்தில் ஒரு சில விடயங்களில் முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும், நியாயபூர்வமான இந்தப் பிரச்சினைகளுக்கு முழுஅளவிலான தீர்வைக் காண்பதற்கான கொள்கைத் திட்டம் ஒன்றைக் கூட அரசாங்கத்தினால் முன்வைக்க முடியவில்லை.

ஆணைக் குழுக்களை அமைத்தல் என்ற அளவிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றதே தவிர, வெளிப்படையாகத் தெரியக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்குக்கூட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முற்படுவது மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினரின் இனவாதப் பிரச்சாரங்களுக்கு வாய்பாகிவிடும் என அரச தரப்பில் சொல்லப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்க விரும்பவில்லை என்றே தோன்றுகின்றது. பாராளுமன்றத்தில் அவ்வப்போது அரசாங்கத்தை விமர்சித்து கூட்டமைப்பு எம்.பி.க்கள் நிகழ்த்தும் உரைகள் அவர்களுக்கு வாக்களித்தவர்களைத் திருப்திப்படுத்தறக்கானதாக மட்டுமே உள்ளது. அதற்கு மேல் அவர்கள் எதனையும் செய்யப்போவதில்லை.

எந்தவொரு அரசாங்கமும் பதவிக்கு வந்தால் முதல் வருடத்திலேயே முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வைக்கண்டுவிட வேண்டும். அல்லது அதற்கான முதல் அடியையாவது அழுத்தமாக எடுத்துவைத்திருக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் இரண்டையும் செய்யவில்லை. சில அடிகளை எடுத்துவைப்பது குறித்து ஆராயப்படுவதாகச் சொல்லப்படுகின்றதே தவிர, அதுகூட செய்யப்படவில்லை. 'நல்லாட்சி' அரசின் முதலாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை, சிங்களக் கடும்போக்களர்களை கவர்வதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தது. ராஜபக்‌ஷ சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் பிடித்துள்ள இடத்தை உடைப்பதற்கு அவர் முற்படுகின்றார். கட்சி அரசியலைப் பொறுத்தவரையில் இன்று அதுதான் அவருக்கு முக்கியமாகனது.

இந்த நிலையில் சிறுபான்மையின மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் எந்த நம்பிக்கையுடன் காத்திருப்பது? சர்வதேச சமூகமும் இன்று சல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்குவதில்தான் அக்கறையாகவுள்ளது. இந்த ஒருவருடம் போலத்தான் அடுத்துவரப்போகும் ஐந்துவருடங்களும் சென்றுவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஞாயிறு தினக்குரல் 2016/08/21

Sunday, August 7, 2016

மர்ம மரணங்கள்

போர் முடிவுக்கு வந்து ஏழுவருடங்கள் கடந்திருக்கும் நிலையில், முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் மரணமடைவதாக வெளிவரும் செய்திகள் தமிழ் மக்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. முன்னாள் போராளிகளான தமிழினி உட்பட பலர் புற்றுநோய் உட்பட பல்வேறு இனந்தெரியாத நோய்களால் மரணமடைந்திருக்கின்றார்கள். 103 போராளிகள் இவ்விதம் மரணமடைந்திருப்பதாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன. இது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலல்ல. முன்னாள் போராளி ஒருவர் கடந்த வாரம் வழங்கியுள்ள சாட்சியம் இந்த அச்சநிலையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. தடுப்பு முகாம்களில் போராளிகளுக்கு ஒருவித ஊசி ஏற்றப்பட்டதாகவும், அதனால்தான் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார். போர்க் குற்றங்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு இந்தத் தகவல்கள் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியது. அதனால் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இன்று ஏற்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாம் முன்னெடுத்த போரை 'மக்களை விடுவிப்பதற்கான போர்' என்றுதான் இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது. உண்மையில் அந்தப் போரின்போது என்ன நடைபெற்றது என்பது இரகசியமானதல்ல. அதனால்தான் அது குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடபகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள். போராளிகளுக்கு ஊசி ஏற்றப்பட்டதாக இப்போது வெளிவரும் செய்திகள் மக்களின் சந்தேகங்களை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை என்ற கோரிக்கைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும் இது அமையலாம். இந்த சந்தேகங்களைத் தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது.

முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஒருவர் இது தொடர்பில் தெரிவித்திருக்கும் தகவல்கள் முக்கியமானவை. "இறுதி யுத்­தத்­தின்­ போது சர­ண­டந்த மற்றும் கைது செய்­யப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் புனர்­வாழ்­வ­ளக்­கப்­பட்டு சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் 107 போரா­ளிகள் இது­வரை மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்­துள்­ளனர். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மட்­டக்­க­ளப்பு வைத்­தி­யா­ச­லையில் சில தினங்களுக்கு முன்னர் மர­ண­ம­டைந்­தி­ருக்­கின்றார். இவ்­வா­றான மர­ணங்கள் திடீ­ரென ஏன் ஏற்­ப­டு­கின்­றது என்­பதை அறிந்­து­கொள்ள வேண்­டி­யுள்­ளது. இதற்­காக முன்னாள் போரா­ளி­களை வைத்­திய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த வேண்­டு­மென நாம் கோரி­யி­ருந்தோம். இது­வரை 800 முன்னாள் போரா­ளிகள் மருத்­து­வ­ப­ரி­சோ­த­னையை மேற்­கொள்­வ­தற்கு தயார் என்று எமக்கு அறி­வித்­துள்­ளனர்" என அவர் தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் போரா­ளிகள் கோரிக்கை விடுத்தால் உள்­நாட்டில் வைத்­திய பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்கு தயார் என்று அரசாங்கம் அறி­வித்­துள்­ளது. அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ள­ரான ராஜித சேனா­ரத்ன இதனை தெரி­வித்­தி­ருக்­கின்றார். "எனவே முன்னாள் போரா­ளி­களை வைத்­திய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையையும் ஜனநாயக போராளிகள் அமைப்பின் பிரமுகர் முன்வைத்திருக்கின்றார். இவ்விவகாரத்தை ஒரு அரசியல் பிரச்சினையாக்காமல், ஒரு மனிதாபிமான உயிர்ப்பிரச்சினையாகக் கணித்து உடனடியாகக் கவனத்திற்கொள்ள வேண்டிய தேவை உள்ளமையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனைக்குத் தாம் தயார் எனவும், அதற்கான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ண குறிப்பிட்டிருக்கின்றார். ஏற்கனவே பல்வேறு மட்டங்களிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஏழு வருடங்கள் ஏற்கனவே கடந்துவிட்டது. அதனால் மேலும், கால தாமதம் செய்யாமல் இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் இரண்டு விடயங்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். ஒன்று - முன்னாள் போராளிகள். இரண்டு- போர்ப் பகுதிகளிலேயே நீண்டகாலமாக வாழ்ந்த மக்கள். "போரின்போது ஏற்படும் கந்தகக் காற்றை பல மாதகாலமாக சுவாசித்தவர்களுக்கு, குண்டுச் சன்னங்களைச் சுமந்த உடலோடு உலா வருபவர்களுக்கு, நச்சு வாயுக்களின் நடுவே வாழ்க்கை நடத்தியவர்களுக்கு இன்றுவரை முழுமையான மருத்துவம் சார் மதிப்பீடு (Common Medical Assessment) செய்யப்படவில்லை. நடைபெற்று முடிந்த யுத்தத்தைப் பொறுத்தவரையில் மிக மோசமான தாக்கங்களைக் கொண்டிருக்கும் மக்களுக்கோ அதன் ஒரு பகுதியான போராளிகளுக்கோ இது வரை எந்த விதமான மருத்துவ பரிசோதனை நடவடிக்கைகள் வழங்கப்படவோ அல்லது அது சார்ந்த ஆய்வோ மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ச்சியாக பல மாதங்களுக்கு மேலாக  நஞ்சூட்டப்பட்ட சுற்றாடலைச் சுவாசித்து வந்த மக்களது மற்றும் போராளிகளது நிலைமை மிக மோசமானது" மற்றொரு முன்னாள் போராளி சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

மர்ம மரணங்களுக்கு இந்த மோசமான நிலைமைகளும் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் இதனை ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனைகளின்றி நிரூபிக்க முடியாது. ஒருவர் இருவரல்ல சுமார் 350,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் தாக்கங்களிற்கு உள்ளாகி இருக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ரீதியான பரிசோதனை அவசியம் என்பதை இதுவரை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. 103 மரணங்கள் என ஊடகங்களில் செய்தி வரும் வரை தமிழ் அரசியல்வாதிகளின் பக்கத்திலிருந்து எந்தவகையான அழுத்தங்களும் வெளிவரவில்லை. இதற்கான முழுமையான திட்டம் ஒன்றை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசைக் கோருவதற்கு தமிழ்த் தலைவர்கள் எவரும் இது வரை முன்வரவில்லை. மருத்துவப் பரிசோதனைக்கான பொதுவான திட்டம் ஒன்று உருவாக்கப்படுவது அவசியம். போர்ப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், குறிப்பாக மாணவர்கள் குண்டுச் சன்னங்களைத் தாங்கியவர்களாகவே இன்று வாழ்ந்துவருகின்றார்கள். இவர்கள் தொடர்பாகக் கூட முழுமையான மருத்துவப் பரிசோதனையோ சிகிச்சையோ முன்னெடுக்கப்படவில்லை.

சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கோ, இயற்கை அனர்த்தமோ இடம்பெற்றால் கூட பாதிக்கப்பட்ட மக்கள் முழு அளவிலான மருத்துவ பரிசோதனைக்கும் உளவியல் சீகிச்சைக்கும் உட்படுத்தப்படும் வழமை சர்வதேச ரீதியாக மட்டுமன்றி இலங்கையிலும் உள்ளது. கொடூரமான போருக்குள் பல மாதகாலமாக வாழ்ந்த மூன்றரை இலட்சம் மக்களையும், 12,000 போராளிகளையும் இவ்வாறு முழு அளவிலான மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கு அரசாங்கம் உட்படுத்தாவது ஏன்? அதனைச் செய்திருந்தால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உருவாகுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. இப்போது காலங்கடந்த நிலையிலாவது இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்வது அவசியம்.

ஞாயிறு தினக்குரல் 2016/-8/07

பாத யாத்திரை: ஜே.ஆர். முதல் மகிந்த வரை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொது எதிரணியின் "ஜன சட்டன" என்ற பாத யாத்திரை கண்டியிருந்து ஆரம்பமாகி கொழும்பை நோக்கி புறப்பட்டிருப்பதுதான் இந்த வாரத்தின் பிரதான செய்தி. நீதிமன்றம் விதித்த தடைகளையும் தாண்டி பாத யாத்திரை புறப்பட்டிருக்கும் நிலையில் அதனுடைய அரசியல் முக்கியத்துவம் என்ன ? அது இந்த நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது. மகிந்த ராஜபக்‌ஷ தரப்பைப் பொறுத்தவரையில், இந்த பாத யாத்திரை தமக்குக் கிடைத்துள்ள ஒரு வெற்றி என்று சொல்லிக்கொள்கின்றார்கள். அரச தரப்பைப் பொறுத்தவரையில், இவ்வாறான யாத்திரைகள் மூலமாக அரசாங்கத்துக்குச் சவால்விட முடியாது எனச் சொல்லிக்கொள்கின்றது.

மைத்திரிபால - ரணில் ஆட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே, அரசாங்கத்துக்கு சவால் விடுவதற்குக் காத்திருந்த பொது எதிரணி, முக்கியமாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பாதயாத்திரையை ஆரம்பித்திருக்கின்றது. போர்க் குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளைக் கொண்டுவந்து நாட்டுக்காகப் போராடிய இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்க அரசாங்கம் முற்படுகின்றது என்பது இவர்களுடைய முதலாவது குற்றச்சாட்டு. புதிய அரசியலமைப்பின் மூலம் சமஷ்டியை வழங்கி நாட்டின் பிரிவினைக்கு அரசாங்கம் வழிவகுக்கின்றது என்பது இவர்களுடைய இரண்டாவது குற்றச்சாட்டு. வற் வரி அதிகரிப்பின் மூலம் மக்களுக்கு வாழ்க்கைச் சுமை அதிகரித்திருக்கின்றது என்பது மூன்றாவது குற்றச்சாட்டு. இந்த மூன்று விடயங்களையும் முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரையில் பாதயாத்திரைகள் என்பது புதிதல்ல. 1958 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் தலைமைப் பதவியில் கண்வைத்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொழும்பிலிருந்து கண்டிக்கு மேற்கொண்ட பாதயாத்திரை இலங்கையின் வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வுக்கு அடித்தளமிட்ட பண்டா - செல்வா உடன்படிக்கை கிழித்தெறியப்பட வேண்டும் எனக் கோரியே இந்தப் பாதயாத்திரையை ஜெயவர்த்தன ஆரம்பித்தார். பண்டா - செல்வா ஒப்பந்தம் தனிநாட்டுக்கான முதல் அடி எனக்கூறி சிங்கள மக்களை ஜெயவர்த்தன உசுப்பிவிட்டார்.இதன் இறுதி விளைவாகத்தான் 300 பௌத்த பிக்குகள் முன்னிலையில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஒப்பந்தத்தைக் கிளித்தெறிந்தார். இல்லையெனில் அதிகாரப்பரவலாக்கல் மூலமாக இனநெருக்கடி அன்றே சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டிருக்கும்.

அன்று ஜெயவர்த்தன என்னத்தைச் செய்தாரோ அதனையே இன்று ராஜபக்‌ஷ செய்கின்றார். ஜெயவர்த்தன கொழும்பில் பாத யாத்திரையை ஆமம்பித்து கண்டியை நோக்கிப் புறப்பட்டார். ராஜபக்‌ஷ கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிப் புறப்பட்டிருக்கின்றார் என்பதைவிட இருவரது அரசியல் இலக்குகளும் ஒன்றாகத்தான் இருந்தது. அரசியலில் ஓரங்கட்டப்பட்டு, எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இலகு வழியாக இனவாதம்தான் இருக்கின்றது. பண்டாரநாயக்கவும் அதனைக் கையாண்டார். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான் அவர் தனிச்சிங்களச் சட்டத்தை 24 மணி நேரத்தில் கொண்டுவருவேன் என்ற வாக்குறுதியுடன் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலைச் சந்தித்தார். ஜெயவர்த்தனவும் அதற்குச் சளைத்தவரல்ல. பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிளித்தெறியச் செய்தார். அந்த வரலாறு இப்போதும் தொடர்கிறது என்பதைத்தான் ராஜபக்‌ஷ தரப்பினர் ஆரம்பித்துள்ள பாத யாத்திரை உணர்த்துகின்றது.

ராஜபக்‌ஷக்களின் பாத யாத்திரையில் 'வற்' என்பது ஒரு கோஷமாக முன்வைக்கப்பட்டிருந்தாலும் கூட, கவர்ச்சிகரமாக முன்வைக்கப்படுவது இனவாதம்தான். அதாவது, இராணுவத்தைக் காட்டிக்கொடுப்பது, புதிய அரசியலமைப்பு தனிநாட்டுக்கான முதற்படி என்பனதான் பிரதான கோஷங்களாக உள்ளன. சிங்கள மக்கள் இனவாதமயப்பட்டவர்களாக இருக்கின்றார்களோ இல்லையோ இனவாதத்தை 'சந்தைப்படுத்தி' அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்வது இலகுவானது என்பதை சிங்களத் தலைவர்கள் படித்துள்ளார்கள். சிங்கள அரசியல் தலைவர்கள் வரலாற்றிலிருந்து படித்துக்கொண்டது இது ஒன்றைத்தான். அதுதான் அவர்களுக்குத் தேவையானதாகவும் இருந்துள்ளது. ஜெயவர்த்தன - பண்டாரநாயக்க காலம் முதல் ரணில் - ராஜபக்‌ஷ காலம் வரையில் இதனை நாம் தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராதகவிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு பேச்சுக்களை  நடத்தியபோது, புலிகள் கேட்பதையெல்லாம் ரணில் கொடுக்கிறார் எனக் குற்றஞ்சாட்டி அவரது ஆட்சியை ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா கவிழ்த்தார். பின்னர் சந்திரிகா தீர்வுத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தபோது, பாராளுமன்றத்திலேயே அதனைக் கிளித்தெறிந்து தீவைத்தார் ரணில். இவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்வதற்கான இலகு வழியாகவும், சிங்கள மக்களின் ஆதரவுத் தளத்தை வெற்றிகொள்வதற்கான மார்க்கமாகவும் இனவாதத்தையே சிங்களத் தலைவர்கள் பயன்படுத்தினார்கள். இப்போது அதிகாரத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு, வழக்கு விசாரணைகளை தினசரி எதிர்கொள்ளும் ராஜபக்‌ஷக்களைப் பொறுத்தவரையில் சிங்கள மக்கள் மத்தியில் தம்மை கதாநாயகர்களாக வெளிப்படுத்தி இழந்த செல்வாக்கை மீளப்பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் கைகளில் இன்றுள்ள ஒரேயொரு ஆயுதம் இனவாதம்தான்.

பண்டா - செல்வா உடன்படிக்கை கிளித்தெறியப்படாதிருந்திருந்தால், பல இனக்கலவரங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். போரால் ஏற்பட்ட இழப்புக்களையும் தவிர்த்திருக்க முடியும். அதற்குப் பின்னர் கிடைத்த பல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டோம். இரு தரப்பிலும் காணப்பட்ட தீவிரவாதப் போக்கு அழிவுக்கே காரணமாகியது. சரித்திரத்திலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான். ஆனால், அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் இனவாதத்தைப் பயன்படுத்துவதன் மூலமே எதிராளிகளைப் பலவீனப்படுத்த முடியும் என்பதையும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதையும்தான் சரித்திரத்திலிருந்து படித்திருக்கின்றார்கள். இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவிருப்பதுடன், முற்போக்கு சக்திகள் இந்த நிலைமையை பகிரங்கப்படுத்துவதற்கும் முன்வரவேண்டும்.

ஞாயிறு தினக்குரல் 2016/07/31