சிங்கள தேசியவாதக் கட்சியான ஜே.வி.பி.யில் உட்பூசல் ஒன்று உருவாகியிருப்பதை அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க மறுத்திருக்கின்ற போதிலும், கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் ஒன்பது பேர் அதிருப்திக் குழுவுடன் இணையப் போவதாக வெளிவந்திருக்கும் செய்திகள், பிரச்சினை உச்ச கட்டத்தில்தான் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
இரு தரப்பினரும் சமரசம் ஒன்றுக்குத் தயாராக இல்லாத நிலையில், கட்சியின் தலைமையகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கிளர்சிக்குழு மேற்கொண்டுள்ள முயற்சிகள் கட்சித் தலைமைக்குப் பெரும் அதிர்சியைக் கொடுத்திருப்பதுடன், பிரேம்குமார் குழுவினரிடமிருந்து தலைமையகத்தைப் பாதுகாப்பதற்காக பொலிஸ் துணையையும் நாடியிருக்கின்றது.
ஜே.வி.பி.யில் இன்று உருவாகியிருக்கும் கருத்தியல் ரீதியான இந்தக் கொந்தளிப்பு நிலைக்கு காரணமானவர் ஒரு தமிழர். அதாவது இனவாதக் கட்சி என அடையாளம் காணப்பட்ட ஜே.வி.பி.யை இன்று ஆட்டிப்படைப்பவர் ஒரு தமிழர். பிரேம்குமார் குணரட்ணம் என்ற இந்த 47 வயதான ஜே.வி.பி. முக்கியஸ்த்தர் கேகாலையைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் தமிழர்கள். சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்றமையால் தமிழ் மொழியில் எழுதுவதற்கான போதிய பயிற்சியை இவர் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், சரளமாக தமிழில் உரையாடக்கூடியவர்.
சோமவன்ச |
கட்சித் தொழிற்சங்கத்தின் ஆதரவு சோமவன்ச தரப்பினருக்கு இருக்கின்ற போதிலும், கட்சியின் முதுகெலும்பாக உள்ள மாணவர் பிரிவு, மகளிர் பிரிவு மற்றும் கல்விப் பிரிவு என்பன பிரேம்குமாரின் ஆதரவத் தளமாகவே உள்ளது. கட்சியின் பத்திரிகையான 'லங்கா'வும் சோமவன்ச பிரிவினருக்கு ஆதரவாக இருக்கவில்லை. இதனைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சோமவன்ச தரப்பு மேற்கொண்ட நடவடிக்கை பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டு சென்று லங்கா பத்திரிகை நிறுத்தப்படும் அளவுக்குச் சென்றுவிட்டது. இதனைவிட ஜே.வி.பி.யின் இணையத்தளங்களும் முடக்கப்பட்டுவிட்டன.
பிரச்சினை உச்சகட்டத்துக்குச் சென்று ஜே.வி.பி. இப்போது ஒரு திருப்பு முனையில் நிற்கின்றது என்பதே உண்மை.
பிரச்சினையின் தோற்றம்
சிறப்பான உள்ளகக் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ள ஒரு கட்சி எனப் போற்றப்படும் ஜே.வி.பி.யில் தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடிகளுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கட்சித் தலைவரையும், செயலாளரையும் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலரையும் வெளியேற்றிவிட்டு கட்சித் தலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளையடுத்தே கட்சிக்குள் வெடிப்பு உருவாகியதாக சோமவன்சவுக்கு விசுவாசமானவர்கள் கூறுகின்றார்கள்.
இதனைவிட மற்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது, ஜே.வி.பி. அண்மைக்காலமாக தேர்தல்களில் சந்தித்த தோல்விகளும், ஜே.வி.பி.யின் கோட்டைகள் எனக் கருதப்பட்ட பல இடங்களைக் கூட அவர்கள் கோட்டைவிட்டிருப்பதும் தலைமையை மாற்ற வேண்டிய ஒரு தேவையைத் தமக்கு ஏற்படுத்தியிருப்பதாக அதிருப்தியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்தத் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு பிரேம்குமார் தரப்பினர் மேற்கொண்ட காய் நகர்த்தல்கள்தான் இன்று உருவாகியிருக்கும் நிலைமைக்குக் காரணம்.
இதேவேளையில், ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்கள் தாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக மூன்று காரணங்களை முன்வைக்கின்றார்கள்.
ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்கள் |
2. இன நெருக்கடி விவகாரத்தில் ஜே.வி.பி. இனவாதப் போக்கைத்தான் கடைப்பிடித்து வந்திருக்கின்றது. இதனால் சிறுபான்மையினரின் ஆதரவை அதனால் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
3. ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்கள், எம்.பி.க்கள் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள். உண்மையான சோஷலிசத்தை உருவாக்க அவர்கள் முற்படவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுக்களை ஜே.வி.பி. அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்ற போதிலும், 2009 ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென்ற ஜே.வி.பி.யின் தீர்மானமே உட்கட்சி முரண்பாட்டை உச்ச கட்டத்துக்குக் கொண்டுசெல்வதாக அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென்ற தீர்மானம் ஜே.வி.பி.யின் அரசியல் குழுக் கூட்டத்தில் அநுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டது. தற்போது அதிருப்தியாளர்களாக வெளிப்பட்டுள்ள பிரிவினர் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.
ஜே.வி.பி.யின் வீதிப் போராட்டம் ஒன்று |
1988-89 காலப் பகுதியில் ஜே.வி.பி.யின் கிளர்சியை ஒடுக்குவதற்காக சரத் பொன்சேகா மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டே அவருக்கு ஆதரவை வழங்கக்கூடாது என அதிருப்தியாளர்கள் வாதிட்டார்கள்.
இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சேர்ந்துதான் இப்போது கட்சியில் மிதவாதிகள், கடும் போக்காளர்கள் என்ற அடிப்படையில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதிருப்தியாளர்கள் கடும் போக்காளர்களாக இருப்பதால் அவர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்துக்குச் சென்றுவிடலாம் என்ற கருத்தில் அரச புலனாய்வுத் துறையும், அவர்களுடைய நடமாட்டத்தை நுணுக்கமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. பிரேம்குமார் எங்கே உள்ளார்? என்ன செய்கின்றார்? என்பதை அறிவதற்காக பொலிஸாரும் அவரைத் தேடி வலை விரித்துள்ளார்கள். பொலிஸாருக்கு மறைவாக உள்ள பிரேம்குமார் ஜே.வி.பி. யின் கிளர்சியை பின்னணியிலிருந்து தூண்டிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யார் இந்த பிரேம்குமார்?
இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது ஜே.வி.பி.யினரால் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையிலிருந்து தப்பிச் சென்ற அவர், சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் மருத்துவர் ஒருவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.
ரோஹண விஜயவீர |
ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவரால் மட்டுமே அப்போது உயிர் தப்ப முடிந்தது. அவர்தான் சோமவன்ச அமரசிங்க. இந்தியாவுக்குப் படகில் தப்பிச் சென்ற அவர், சில மாத காலம் இந்தியாவில் இருந்த பின்னர் அங்கிருந்து ஐரோப்பாவுக்குச் சென்றார். அங்கிருந்து தனது அரசியல் செயற்பாடுகளை அவர் ஆரம்பித்தார். இதனால்தான் நாடு திரும்பிய பின்னர் கட்சியின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.
மீண்டும் ஜனநாயக அரசியலில்
ஜே.வி.பி. அழிக்கப்படுவதற்குப் பிரதான காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண ஆகியோர் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் உருவாகிய அரசியல் சூழ்நிலைகளால் மீண்டும் தேசிய அரசியலில் ஜனநாயக வழிமூலமாக பிரவேசிப்பதற்கான உபாயங்களை ஜே.வி.பி. வகுக்கத் தொடங்கியது. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரேயொரு ஆசனத்தை ஜே.வி.பி. பெற்றுக்கொண்டது. இதன்பின்னர் மற்றைய கட்சிகளுடன் தேர்தல் கூட்டை உருவாக்கிக்கொள்வது ஜே.வி.பி.யின் உபாயமாக இருந்துள்ளது.
கட்சியின் முக்கிய பதவிகளைப் பெற்றவர்கள், மற்றும் எம்.பி.க்கள் மக்கள் மத்தியில் பிரபலத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும், ஜே.வி.பி.யைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பிரிவினர் தொடர்ந்தும் தம்மை வெளிப்படுத்தாதர்வர்களாகவே இருந்தனர். கட்சியின் மத்திய குழு கடும்போக்காளர்கள் கட்டுப்பாட்டிலேயே பெருமளவுக்கு இருந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் |
ஜே.வி.பி.க்குள் உருவாகிய இந்த முரண்பாடுகள் எந்தளவுக்குத்தான் மோசமானதாக இருந்திருந்தாலும், அது தொடர்பான தகவல்கள் வெளியே கசியாதவாறு இரு தரப்பினரும் அண்மைக் காலம் வரையில் பாதுகாத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சோமவன்சவின் ஆதரவாளர் ஒருவர் பிரேம்குமாரின் ஆதரவாளர் ஒருவரினால் மாதிவெலையில் வைத்துத் தாக்கப்பட்டதையடுத்தே உட்கட்சி மோதல்கள் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்தன. இதன்பின்னரே பிரேம்குமார் பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே.வி.பி.யின் தகவல் பிரிவையும், 'லங்கா' பத்திரிகையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டடுவர பொலிஸாரின் துணையை நாட வேண்டிய நிர்ப்பந்தம் சோமவன்சவுக்கு ஏற்பட்டது.
ஜே.வி.பி.யின் தலைமையகம் |
ஜே.வி.பி.யில் உருவாகியிருக்கும் மோதல்கள் எதிர்க்கட்சிகளை மேலும் பலவீனப்படுத்துவதாக அமையலாம். ஐ.தே.க. ஏற்கனவே உட்கட்சி மோதல்களால் பலவீனப்பட்டுப்போயிருக்கின்றது. இந்த நிலையில் ஜே.வி.பி.யில் உருவாகியிருக்கும் புதிய மோதல்கள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகவும், அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு துணை புரிவதாகவும் அமையும் என்பதே உண்மையாகும்!
தரமான கட்டுரைகள் சேவைகள் தொடர வார்த்துக்கள்!!
ReplyDelete