இலங்கையின் வரலாற்றை சிங்கள பௌத்தவர்களின் விருப்புக்கமையகக் கூறும் மகாவம்சத்தின் புதிய வெளியீட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வரலாற்றுக்கு மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் கலாசார விவகார அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்ட போது, பலருக்கும் அது ஆச்சரியத்தை எற்படுத்தியிருக்கலாம்.
இலங்கையின் குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் வரலாற்றைக் கூறும் முதன்மை நூலில் இடம்பிடித்துக்கொள்வதற்கு மகிந்தர் முற்பட்டிருப்பது சிங்கள மன்னர்கள் வரிசையில் தன்னுடைய பெயரும் இடம்பெற வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது.
சிங்களவர்களின் வீரவரலாற்றைக் கூறும் நூலாக மகாவம்சம் சிங்கள ஆய்வாளர்களால் கூறப்படுகின்ற போதிலும், இது புனைவு, கற்பனை, ஜதீகம் மற்றும் வரலாறு என்பவற்றின் கலவைதான் என தமிழர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. மகாவம்சம் கூறும் இலங்கையின் வரலாற்றை தமிழ் ஆய்வாளர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றார்கள். மகாவம்சத்தின் தொடர்ச்சிதான் இலங்கையின் காணப்படும் சிங்கள இனவாதம் என்ற கருத்து ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் இந்த மகாவம்சத்தில் இடம்பெற்றுக்கொள்வதற்கு மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள முயற்சிகள் அவரது உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது.
இலங்கையின் அதிகாரத்தைக் கைப்பற்றிய சிங்களத் தலைவர்கள் அனைவரும் தம்மை சிங்கள மன்னர்களின் வாரிசுகளாகக் கருதிச் செயற்பட்டுவந்தமைதான் வரலாறு. குறிப்பாக விடுதலைப் புலிகளுடனான போரை முன்னெடுத்த அநுருத்த ரத்வத்தை, இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் அது தொடர்பான வெற்றிப் பிரகடனத்தை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் பொது வைபவம் ஒன்றில் வைத்துக் கையளித்தார். அத்துடன் சிங்கள மன்னர்களில் ஒருவரான சப்புமல் குமாரனின் பெரிலேயே ரத்தவத்தை அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் அதனை யாப்ப பட்டுண என அவரால் மாற்றப்பட்டதும் தெரிந்ததே.
அந்தப் பாணியில்தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் மகாவம்சத்தில் இடம்பிடிப்பதற்கான முயற்சிகளை இப்போது மேற்கொண்டிருக்கின்றார்.
மகாவம்சத்தின் புதிய வெளியீட்டில் மகிந்த ராஜபக்ஷவுக்கு 3 அத்தியாயங்கள் ஒதுக்கப்படவுள்ளது. புனைவு, கற்பனை, ஜதீகம் மற்றும் வரலாறு என்பவற்றின் கலவைதான் மகாவம்வம் என வர்ணித்திருக்கும் கனடாவில் வசிக்கும் ஈழத்தின் பிரபல கவிஞரான சேரன், இலங்கை அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கை தனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என்கின்றார். புனைவுகள் நிறைந்த பழைய மகாவம்சத்துக்கும் தற்போது இலங்கை அரசாங்கம் இணைக்கும் அத்தியாயங்களுக்கும் இடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே இருப்பதாகவும் சேரன் குறிப்பிடுகின்றார். அதாவது பழைய மகாவம்சம் சம்பவஙகள் நிகழ்ந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் இப்போது இவர்கள் போர் முடிவடைந்த உடனடியாகவே இதனை எழுதுவதற்கு முற்பட்டிருக்கின்றார்கள் எனவும் சேரன் குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்தப் புதிய போக்கானது வரலாறு சார்ந்ததாக, ஆய்வுசார்ந்ததாக இருக்காது எனவும், இது அரசியல் சார்ந்ததாக, சுயநலம் சார்ந்ததாக, ஒரு நாட்டின் ஜனாதிபதியின் மிகை மதிப்பீடு சார்ந்ததாக இருப்பதாகவும் இது தொடர்பாக பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியின் போது சேரன் குறிப்பிட்டிருக்கின்றார்.
'கி.மு. 543 இல் விஜயன் இலங்கைக்கு வந்தது முதல் மகாசேனன் மன்னனின் ஆட்சிக்காலம் வரை மகாவம்சம் விவரிக்கின்றது. அதனுடன் இணைக்கப்பட்ட குலவம்சம் மற்றும் சூலவம்சம் ஆகியன நான்காம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர்கள் 1815 இல் இலங்கையைக் கைப்பற்றும் காலம் வரையிலான சரித்திரத்தை விவரிக்கின்றது" எனத் தெரிவிக்கும் இலங்கை கலாசார அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க, இதனையடுத்து முன்னணி எழுத்தாளர்களால் அதனது 6 வது பாகத்தில் 1978 முதல் 2010 வரையிலான காலப்பகுதி குறித்து எழுதப்பட்டு வருவதாகவும், அதில் மகிந்த ராஜபக்ஷவின் காலப்பகுதியாக 3 அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவம் தெரிவித்தார்.
30 வருட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ராஜபக்ஷவின் ஆற்றலுக்கு இணையாக மகாவம்சத்தில் எதுவும் கிடையாது எனவும் அவர் அழுத்திக் கூறியிருக்கின்றார். ஆக, இலங்கையை ஆட்சி செய்த அரசர்களின் வரிசையில் பிரதானமான ஒருவராக மகிந்தரைக் காட்டுவதற்கான முயற்சிதான் இது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
'மகாவம்சம் என்பது இலங்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கி, அதேவேளையில் பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி பௌத்த பிக்குகளால் பாளி மொழியில் எட்டுச் சுவடிகளில் செய்யுள் வடிவில் காலவரிசையாக குறித்துவைக்கப்பட்டவற்றை மூலமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட இலங்கையின் பழமையான தொகுப்பு நூலாகும்" என விக்கிபீடியா மகாவம்சத்தை வரையறுக்கின்றது.
இது இதற்கு முந்திய தொகுப்பு நூலான தீகவம்சம் என்ற நூலைத் தழுவி தொகுக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றார்கள். இந்த நூல் கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில், பாளி மொழியில் மகாநாம தேரர் என்னும் மௌத்த பிக்குவினால் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. அதனடிப்படையில் மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரராகும். இதனை இலங்கையின் வரலாற்று ஆவணமாக சிங்கள பௌத்த பெரும்பான்மை பெரும்பான்மையின மக்கள் கூறிவந்தாலும், முழுமையான வரலாற்று ஆவணமாக இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தைத்தான் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கொண்டுள்ளார்கள்.
அதேவேளையில், இலங்கையின் வரலாற்றுக் குறிப்புக்கள் அதாவது - சிங்கள மக்களுடைய வருகை தொடர்பான வரலாற்றுக் குறிப்புக்கள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதால், மகாவம்சம் நூலைத் தவித்துவிட்டு இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்ய முடியாது என்னும் கருத்தும் வரலாற்றாசிரியர்களிடம் உள்ளது என்பதும் வகனிக்கப்பட வேண்டியதாகும்.
இந்த நூல் மகத நாட்டில் உருவெல எனும் இடத்தில் அரச மரத்தடியில் புத்தர் அமர்ந்திருந்த போது 'பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்றும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்றும் எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது" எனும் பௌத்த கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன.
இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளமைக்கான காரணமாகவும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான ஆணிவேராகவும் பார்க்கப்படுகின்றது. தமிழர்களை இலங்கைத் தீவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சிங்களக் கடும்போக்காளர்களின் எண்ணங்களுக்கான அத்திபாரமாக மகாவம்சமே இருந்துள்ளது.
அத்துடன் கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனனின் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளையும் காலவரிசையாக மகாவம்சம் விவரிக்கின்றது.
மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலினை மூலமாகக் கொண்டு, ஆங்கில மொழியில் 1837ம் ஆண்டு முதல் அச்சுப் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த அச்சுப்பதிப்பு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த, சிலோன் சமூக பணியகம் எனும் பணியகத்தில் பணிப்புரிந்த பணியாளரும் வரலாற்றாசிரியரும் ஆன ஜோர்ஜ் டேனர் என்பவர் வெளியிடப்பட்டார். அதன்பின்னர் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவர், மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார். அதேவேளை வில்ஹெய்ம் கெய்கர் அதற்கு முன்னதாகவே பாளி மூலத்தில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாவம்சம் நூலை வரலாற்று நூலாக ஏற்க முடியாமைக்கான காரணங்களை பல மேற்கத்தைய, சிங்கள, தமிழ் வரலாற்றாசிரியர்கள் முன்வைத்துள்ளனர். அத்துடன் மகாவம்சம் நூலை தொகுத்தவரான மகாநாம தேரர் எந்தவொரு இடத்திலும் தன்னை வரலாற்று ஒரு ஆசிரியராகக் குறிப்பிடவில்லை என்றும் அவர் ஒரு பௌத்தப் பிக்குவாக பௌத்த மதத்தை ஆதரிக்கும் நோக்குடனேயே தொகுத்துள்ளாகவும் கூறப்படுகின்றது
விஜயன் எனும் ஒருவரின் வருகைத் தொடர்பான சான்றுகளோ, அப்படி ஒருவன் இலங்கையை ஆட்சி செய்தமைக்கான எவ்வித ஆதாரங்களோ எங்கும் இல்லை. அதேவேளை இலங்கையின் முதல் அரசனாக சித்தரிக்கும் அதே மகாவம்ச தொகுப்பு நூலில், விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் அரசமைத்து இயக்கர் நாக இனத்தவர்கள் வாழ்ந்ததான குறிப்புகள், இலங்கையின் முதல் அரசன் விஜயன் எனும் கூற்றை நம்பகமற்றதாக செய்கின்றது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்ஜசான்று தேவைஸ.
மகாவிகாரைச் சார்ந்த பௌத்தபிக்குகள் கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் நிகழும் வரலாற்றுச் சம்பவங்களை தினக்குறிப்பேடு போன்று எழுதி பராமரித்து வந்தனர்.இவ் ஏடே கி.பி 5ம் நூற்றாண்டில் 'மகானாம' எனும் பௌத்தபிக்குவால் ஒன்றுபடுத்தி தொகுத்து மகாவம்சம் எனும் நூலாக வெளிப்பெற்றது.இவர் இலங்கை அரசன் தாதுசேனனின் சகோதரராவார். இவருடைய காலத்துக்கு ஐந்து நூற்றாண்டுகள் முந்திய வரலாற்று நூலான தீபவம்சத்தை சார்ந்தே நூலை தொகுத்துள்ளார்.இந் நூல் முழுமையாக பௌத்தமத கண்ணோட்டத்திலே இலங்கையின் வரலாற்றை கூறிச்செல்கின்றது.
மகாவம்சத்தின் தொடர்ச்சியாக பல பௌத்தபிக்குகளால் எழுதப்பட்ட சூள வம்சம் எனும் நூல் கி.பி 4ம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர் முழு இலங்கையை கைப்பற்றிய ஆண்டான 1815 வரை நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை விபரிக்கின்றது.
இந்தப் பின்னணியில்தான் கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற போரையும், அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த ராஜபக்ஷவின் வீரவரலாற்றையும் இறுதி 3 அத்தியாயங்களில் தொகுப்பதற்கான முயற்சிகளை அவரது ஆதரவாளர்களாக உள்ள அதிகாரிகள் இப்போது மேற்கொண்டுள்ளாhகள்.
இதனைத் தான் செய்யவில்லை என்றால் தனக்குப் பின்னர் வரப்போபவர்கள் இதனைச் செய்யப்போவதில்லை என்பது மகிந்தருக்கு நன்கு தெரியும். அதனால்தான் இந்த அவசர நடவடிக்கை!

No comments:
Post a Comment