உயர் பாதுகாப்பு வலயங்கள் என எதுவும் வடபகுதியில் இல்லை என அரச தரப்பும், இராணுவத் தரப்பும் தொடர்ச்சியாகத் தெரிவித்துவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணி இராணுவத்துக்காகச் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இந்த வார முற்பகுதியில் வெளிவந்ததையடுத்து காணிகளை இழந்துள்ள மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்கள். இதற்கு எதிராக மக்கள் போராட்டங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டங்கள் வெறுமனே அடையாளப் போராட்டங்களாக முடிவடைந்துவிடப் போகின்றதா அல்லது தொடர் போராட்டங்களாக இடம்பெறப்போகின்றதா என்பது தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுவீகரிக்கப்பட்ட நிலங்களை நேரில் பார்வையிடச் சென்ற போது திருப்பியனுப்பப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினை எந்தளவுக்குத் தீவிரமானது என்பதை இது ரணில் விக்கிரமசிங்கவுக்கு உணர்த்தியிருக்கும்.
யாழ். மாவட்டத்தில் இராணுவத்தின் தேவைக்காக வலிகாமம் வடக்கிலும், கிழக்கிலும் 6,400 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவித்தல்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த வார முற்பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வருடகாலமாக இந்த நிலங்களை படையினர் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதால், இப்பகுதி மக்கள் முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலுமே தங்கியுள்ளார்கள். போர் முடிவடைந்த பின்னர் தமது நிலங்களுக்குத் திரும்பிச் செல்லலாம் என்ற அவர்களின் கனவு படையினரின் புதிய அறிவித்தலின் மூலம் சிதறடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள முகாம்கள் நிரந்தரமாகப் போகின்றன என்பதைத்தான் இராணுவத்தின் அறிவிப்பு புலப்படுத்தியிருக்கின்றது.
இதேவேளையில் வடமராட்சி கிழக்கிலும் தனியாருக்குச் சொந்தமான 700 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. மருதங்கேணி பகுதியில் ஐவருக்குச் சொந்தமான இந்தத் தென்னங் காணியைச் சுவீகரிப்பது தொடர்பில் உரிமையாளர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்தப் பகுதியில் படையினரே நிலைகொண்டுள்ளார்கள். குறிப்பிட்ட காணிகளைவிட்டு படையினர் வெளியேற வேண்டும் என அதன் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே இராணுவம் அவற்றைச் சுவீகரிக்கப்போவதாக இப்போது அறிவித்திருக்கின்றது. அந்தக் காணிகளைச் சுவீகரிப்பதற்கு இப்போது மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறிப்பிட்ட இடங்களில் உள்ள முகாம்கள் நிரந்தரமாகப் போகின்றன என்பதற்கான முன்னறிவித்தலாக உள்ளது.
இந்த இரண்டும் இந்த வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இதற்கு முன்னதாகவே இராணுவத்துக்காக பெருமளவு நிலங்கள் சுவீகரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வலிகாமம் வடக்கு, தென்மராட்சி, வடமராட்சி கிழக்கு என பல பகுதிகள் இராணுவ முகாம்களுக்காக பெருமளவு நிலம் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது. வடபகுதியை இராணுவ முற்றுகைக்கு உட்பட்ட ஒரு பகுதியாக வைத்திருப்பதுதான் இப்போது முன்னெடுக்கப்படும் அவசர காணி சுவீகரிப்புக்களின் நோக்கமா என்ற சந்தேகம் எழுகின்றது. இலங்கை இராணுவத்தின் 19 பிரிவுகளில் 16 பிரிவுகள் வடமாகாணத்தில் நிலைகொண்டிருப்பதாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவில் தெரிவித்திருந்தார். இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே நீதியரசரின் தகவலும் அமைந்திருக்கின்றது.
வடக்கு கிழக்குப் பகுதிகளியிலிருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்திருக்கின்றது. ஜெனீவா தீர்மானத்திலும் இது வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. போர் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்தளவுக்குப் பெருமளவு இராணுவம் வடக்கில் நிலைகொண்டிருக்கத் தேவையில்லை என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்கள். அரசாங்கமும் வடபகுதியிலிருந்து இராணுவக் குறைப்பு இடம்பெறும் என பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உறுதியளித்திருந்தது.
இராணுவ முகாம்களுக்காக என தொடர்ச்சியாக பெருமளவு நிலங்கள் அபகரிக்கப்படுவது இந்த உறுதிமொழிகளில் சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றது. பாரிய இராணுவத் தளங்களையும், பெருமளவு இராணுவத்தையும் வடபகுதியில் தொடர்ந்தும் வைத்திருக்கும் இராணுவத்தின் திட்டத்தைதான் இது உறுதிப்படுத்துகின்றது. போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகப்போகின்றது. ஜனநாயக அரசியலையும், சாத்வீகப் போராட்டங்களையும்தான் தமிழ்த் தலைமைகள் இப்போது முன்னெடுக்கின்றன. இந்த நிலையில் பாரிய இராணுவக் கொத்தளங்கள் எதற்காக?
வடமாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்திருக்கின்றது. மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டதாகவே பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தினதும் நகர்வுகள் அமைந்திருக்கின்றன. மாகாண சபைத் தேர்தல் சுயாதீனமாகவும், நியாயமானதாகவும் இடம்பெறுவதற்கு இராணுவக் குறைப்பும் அவசியம், சிவில் விவகாரங்களில் தலையீடு தவிர்க்கப்படுவதும் அவசியம். பாரியளவில் இராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் சிவில் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடும் அதிகமாகின்றது. இந்த நிலையில் சுயாதீனமான தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கவும் முடியாது.
பொதுமக்களின் காணிகளை இராணுவம் தமது தேவைகளுக்குச் சுவீகரிப்பதானால் அதற்கான சில நடைமுறைகள் உள்ளன. அடாத்தனமான ஆக்கிரமித்துள்ள காணிகளை பின்னர் சுவீகரிப்பதாக அறிவிப்பது முறையான செயற்பாடு அல்ல. ஆனால், இராணுவம் இவ்வாறுதான் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது. போர் முடிவடைந்த நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் பெருந்தொகையானவர்கள் இன்னும் மீளக்குடியேற முடியாதவர்களாக இருப்பதற்கு இராணுவத்தின் இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள்தான் காரணமாகவுள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்கள் என எதுவும் இல்லை எனக் கூறிக்கொள்வது இந்தப் பிரச்சினைக்கான தீர்வல்ல. நடைமுறையில் அவை இல்லாதொழிக்கப்படவேண்டும். மக்களுடைய காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில், முகாம்களிலுள்ள மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்?

(ஞாயிறு தினக்குரல: 2013-04-28)
No comments:
Post a Comment