சட்டப்படியான பிரதம நீதியரசராக திருமதி சிரானி பண்டாரநாயக்கதான் இப்போதும் உள்ளார். பிரதம நீதியரசராக உலகை வலம் வருபவர் நிகழ்நிலை நீதியரசராகத்தான் உள்ளார். சட்டப்படியான பிரதம நீதியரசர் உள்ள நிலையில் நிகழ்நிலை பிரதம நீதியரசரைத் தெரிவுசெய்துள்ளமையால் பல சட்டப் பிரச்சினைகள் உருவாகியுள்ளது என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 39 வது வருடாந்தப் பட்டமளிப்பு விழாவும், சங்கத்தின் புதிய தலைவர் உபுல் ஜெயசேகராவின் பதவியேற்பு வைபவமும் சனிக்கிழமை மாலை கொழும்பு றோயல் கல்லூரியின் நவரங்கஹல மண்டபத்தில் நடைபெற்ற போது கலந்துகொண்டு நிகழ்த்திய உரையின் போதே நீதியரசர் இதனைத் தெரிவித்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவுக்கு பிரதம நீதியரசரே பிரதம விருந்தினராக அழைக்கப்படுவது வழமையாகவுள்ள நிலையில் நேற்றைய நிகழ்வுக்கு சிரானி பண்டாரநாயக்க பிரம விருந்தினராக அழைக்கப்பட்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கூட்டத்தில் குழப்பநிலை உருவாகலாம் எனவும் அஞ்சப்பட்டது.
இங்கு முக்கிய உரை ஒன்றை நிகழ்த்திய நீதியரசர் விக்கினேஸ்வரன் தமது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
"பிரதம நீதியரசர் தொடர்பாக நீங்கள் எடுத்த தீர்மானம் சரி என்பதை வலியுறுத்தவே நான் உங்கள் அழைப்பை ஏற்று வந்துள்ளேன். சட்டப்படியான பிரதம நீதியரசராக இன்னமும் திருமதி சிரானி பண்டாரநாயக்கதான் பதவி வகிக்கின்றார். பிரதம நீதியரசராக உலகை வலம்வருபவர் நிகழ்நிலை பிரதம நீதியரசாராகத்தான் உள்ளார்.
சட்டப்படியான நீதியரசர் உள்ள நிலையில் நிகழ்நிலை நீதியரசரைத் தெரிவு செய்துள்ளமையால் பல சட்டச் சிக்கல்கள் உருவாகியுள்ளன. உச்ச நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நடவடிக்கைகள் சட்டரீதியற்றவை எனத் தீர்மானித்திருக்கும் நிலையில் அதனை கூடிய வலுவுள்ள ஒரு நீதிமன்றம் பிழை என்று தீர்மானித்தால்தான் சிரானி பண்டாரநாயக்கவின் பதவி பறிபோனதாகக் கொள்ளலாம்.
அவ்வாறில்லாமல் வருங்காலத்தில் அந்தத் தீர்மானங்கள் சரி என அதிக வலுலுள்ள நீதிமன்ற இருக்கையின் போது தீர்மானிக்கப்பட்டால் நிகழ்நிலை பிரதம நீதியரசர் அதுவரை செய்த அனைத்து நடவடிக்கைகளும் சட்டவலுவலவற்றவையாகிவிடும். இதனால் கட்சிக்காரருக்கு விலைமதிக்க முடியாத நட்டம் ஏற்படலாம். காரணம் சட்ட வலுவலற்ற ஒருவரின் தீர்மானம் சட்டப்படி செல்லுபடியாகாது.
காலங்கடந்து அந்தத் தீர்மானங்களை நீதிமன்றம் வலுவுள்ளது எனக்கண்டால், அந்தத் தீர்மானங்களை வழங்கும் நீதியரசர்கள் பக்கச்சார்பானவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்படலாம்
.
அவ்வாறு தற்போது தரப்பட்டிருக்கும் தீர்மானங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து நிகழ்நிலை நீதியரசர் பதவியிலிருந்தால் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்துக்கு எந்தவிதமான கௌரவத்தையும் வலுலவயும் நாங்களே கொடுக்கதததாகித விடும்.
அவ்வாறு தற்போது தரப்பட்டிருக்கும் தீர்மானங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து நிகழ்நிலை நீதியரசர் பதவியிலிருந்தால் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்துக்கு எந்தவிதமான கௌரவத்தையும் வலுலவயும் நாங்களே கொடுக்கதததாகித விடும்.
எனவே தீர்மானங்களை வலுவுள்ளதகவோ வலுவற்றதாகவோ கண்டாலும் அல'லஅது தொடர்பான நடவடிக்கை எடுக்காவிட்டாலும் மூன்று சந்தர்ப்பங்களிலும் சட்டபிரச்சினைகளும் சட்டரீதியான பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது."
இவ்வாறு நீதியரசர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment