முன்னாள்
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள அண்மைக்கால
அணுகுமுறை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்குப் பெரும் சங்கடமான ஒரு நிலையைக்
கொடுத்திருக்கின்றது.
வெள்ளைக்கொடி வழக்கில் பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரே அமெரிக்கா இது
தொடர்பில் தன்னுடைய புதிய நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றது.
பொன்சேகா விடுதலை
செய்யப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில்
நடைபெறவிருக்கும் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை
நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்கா மகிந்த அரசுக்கு
இராஜதந்திர வழிமுறைகளில் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ஷ
அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சா ஒருவரை சந்தித்த கொழும்பிலுள்ள அமெரிக்க தாதுவா
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை தொடாபில் சில சமிஞ்ஞைகளைக்
காட்டியதையடுத்து மகிந்த அரசாங்கம் அதாச்சியடைந்திருப்பதாகத் தெரிகின்றது. .
பொன்சேகா |
இதனைத் தொடர்ந்தே
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து இது தொடர்பான அறிவித்தல் ஒன்று வெளிவந்தது.
பொன்சேகாவின் குடும்பத்தினர் தன்னிடம் கேட்டுக்கொண்டால் தான் பொன்சேகாவுக்கு
மன்னிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், இதற்காக அமெரிக்காவிடமோ அல்லது ஐ.நா.விடமோ குடும்பத்தினர் செல்லத் தேவையில்லை
எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.
இதேகருத்தை கடந்த
வாரம் நீதி அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும்
கவனிக்கத்தக்கது.
பொன்சேகா குடும்பத்துடன் |
குறிப்பிட்ட
ஒன்லைன் பெட்டிசத்தில் 25,000 க்கும் அதிகமான
கையொப்பங்கள் பெறப்படுமாயின் பொன்சேகாவின் விவகாரம் தொடர்பாக தம்மால் அழுத்தம்
கொடுக்க முடியும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. தன்னுடைய
தந்தையின் விடுதலைக்காகக அப்சரா பொன்சேகா இந்த ஒன்லைன் பெட்டிசத்தை அமெரிக்காவில்
ஆரம்பித்திருக்கின்றார்.
இதன்மூலம்
அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்ற நிலையில் அமெரிக்காவை
சமாதானப்படுத்துவதற்கான முயற்சிகளில் மகிந்த ராஜபக்ச அரசு இறங்கும் எனத்
தெரிகின்றது.
No comments:
Post a Comment