புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் நாளை ஆரம்பமாகவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை நாளை சமர்பிக்க முடியாத நிலை இருப்பதாலேயே இந்த விவாதமும் மீண்டும் பின்போடப்பட்டுள்ளது. வழிநடத்தல் குழு அறிக்கை டிசெம்பர் 10 ஆம் திகதிதான் சமர்பிக்கப்படவிருந்தது. பின்னர் ஜனவரி 9 க்கு ஒத்திவைக்கப்பட்டு இப்போது மீண்டும் காலம் குறிப்பிடப்படாமல் தள்ளிப்போடப்பட்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கால அவகாசம் கேட்டதையடுத்தே அறிக்கையைச் சமர்பிப்பதற்கான தினம் பின்போடப்பட்டது. இந்தக் காலங்கடத்தல் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவா அல்லது பிரச்சினையை மோசமடையச் செய்வதற்காகவா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது எப்போது கட்சி நலன் சார்ந்ததாகவே இருந்துவருகின்றது. இலங்கையின் அரசியமைப்பு அடிக்கடி மாற்றத்துக்குள்ளாவதற்கும், திருத்தங்கள் செய்யப்படுவதற்கும் அதுதான் காரணம். அமெரிக்காவில் அதன் அரசியலமைப்பு 1776 ஆம் ஆண்டில்தான் கொண்டுவரப்பட்டது. பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா சுதந்திரமடைந்தடைந்த போது அந்த அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. கடந்த 227 வருட காலத்தில் 27 திருத்தங்கள் மட்டுமே இதற்குச் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இதேபோன்ற ஒரு நிலைதான் உள்ளது. அவை தனிநபர் நலன் சார்ந்ததாகவோ கட்சி நலன்சார்ந்ததாகவே இருக்கவில்லை. ஒட்டுமொத்த நாட்டு நலனே அங்கு கவனத்திற்கொள்ளப்பட்டது.
இலங்கை நிலை அவவாறிருக்கவில்லை. இலங்கையை சுதந்திரமடைந்த போது சோல்பரி அரசிலமைப்பு 1947 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. சிறுபான்மையினரின் நலன்களை உறுதிசெய்யும் வகையில் இதிலிருந்த ஒரேயொரு சரத்தையும் நீக்கியமாக முதலாவது குடியரசு அரசியலமைப்பு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் 1972 இல் கொண்டுவரப்பட்டது. 1977 இல் பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசு அடுத்த வருடமே மற்றொரு அரசியலமைப்பைக் கொண்டுவந்தது. ஜே.ஆரால் ஜே.ஆருக்காகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு என்றே அது வர்ணிக்கப்பட்டது. அந்த அரசியலமைப்பு கொண்டுவரப்பட்ட பின்னர் கடந்த 38 வருடங்களில் இதற்கு 19 திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.
அரசியலமைப்பை மாற்றுவதோ அல்லது அதற்குத் திருத்தங்களைச் செய்வதோ தவறானவையல்ல. சில சந்தர்ப்பங்களில் அது தேவையானதுதான். ஆனால், சோல்பரி அரசியலமைப்பின் பின்னர் கொண்டுவரப்பட்ட இரு அரசியலமைப்புக்களும் அப்போது அதிகாரத்திலுள்ள கட்சிகளின் அல்லது தனிநபர்களின் நலன் சார்ந்தவையாகவே இருந்துள்ளன. இதில் அவதானிக்கக்கூடியதாகவுள்ள மற்றொரு அம்சம் சிறுபான்மையினரை மேலும் ஒடுக்குவதை இலக்காகக்கொண்டவையாகவுமே இந்த அரசியலமைப்புக்கள் இருந்துள்ளன. சிங்கள - பௌத்த மேலாதிக்கத்துக்கு அரசியலமைப்பு மூலமான அங்கீகாரத்தைக் கொடுப்பதும் அதன் நோக்கமாக இருந்துள்ளது. நாட்டின் பிரச்சினைகளையோ, அல்லது அதன் தன்மையையோ புரிந்துகொண்டு அதற்கிசைவான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு முன்னைய தலைவர்கள் தவறியிருந்தார்கள். இந்தத் தவறுகளின் பலன்களைத்தான் கடந்த 60 வருடகாலமாக நாடு அனுபவிக்கின்றது.
வரலாற்றிலிருந்து நாம் எவற்றையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவே தற்போதைய அரசிலமைப்பாக்க முயற்சிகளும் உள்ளன. அரசியலமைப்புச் சீர்திருத்தம் மூன்று முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலாவது- நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை இல்லாதொழிப்பது. இரண்டு - தேர்தல் சீர்திருத்தம். மூன்று - இனநெருக்கடிக்கான தீர்வு. இதில் முதல் இரு விடயங்களையும் பொறுத்தவயைில் பிரதான கட்சிகள் இரண்டும் தமது கட்சி சார்ந்த நலனுக்கு எது பொருத்தமானதாக இருக்கும் என்ற அளவுகோலைக் கொண்டே தமது நிலைப்பாட்டைத் தீர்மானிக்கின்றன. இனநெருக்கடிக்கான தீர்வைப் பொறுத்தவரையில், சிங்கள - பௌத்த மேலாதிக்கத்துக்கு அரசியலமைப்பு மூலமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் பிரதான கட்சிகள் மட்டுமன்றி, சிங்கள தேசியவாத ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. என்பனவும் உள்ளன.
இரண்டு பிரதான கட்சிகளையும் இணைந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது சிறுபான்மையினரிடம் காணப்பட்ட நம்பிக்கை இப்போது காணாமல் போய்விட்டது. "ஒன்றும் நடக்கப்போவதில்லை" என்ற மனோ நிலைக்குத் தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள். குறிப்பாக மகாசங்கத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியும், அரசியலமைப்பாக்க முயற்சிகளுக்கு கால அவகாசம் பெறப்பட்டிருப்பதும் தமிழ் மக்களுடைய நம்பிக்கை முற்றாகச் சிதறடித்துள்ளது. மகாசங்கத்தினரின் தலையீடு தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முற்றுமுழுதாக எதிரானதாகவே இருக்கும். கால அவகாசம் பிரச்சினையைத் தீர்பதற்குப் பதிலாக அதனை மோசமடையச் செய்வதாகவே அமையும். இனவாத சக்திகளின் ஆதிக்கம் மேலோங்கும் நிலையிலேயே இந்த ஒத்திவைப்பு இடம்பெற்றிருக்கின்றது. அவர்கள் தம்மைப் பலப்படுத்திக்கொண்டு களத்தில் இறங்க இந்த கால அவகாசம் பயன்படும். நல்லாட்சியை நம்பி களத்தில் இறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்த விடயங்களை வெளிப்படைத் தன்மையுடன் பேசுவதும், இதற்கான மாற்றுத் திட்டம் ஒன்றை உருவாக்கிக்கொள்வதும் அவசியம்!
ஞாயிறு தினக்குரல் 2017-01-08

No comments:
Post a Comment