0 நம்ப நடக்கும் கூட்டமைப்பின் அணுகுமுறை வெற்றியைத் தருமா?
0 மகாநாயக்கர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி கொடுத்த 5 வாக்குறுதிகள்
0 கால அவகாசம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கா மோசமாக்குவதற்கா?
0 4 சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து தயாரிக்கும் புதிய தீர்வுத் திட்டம்
- பாரதி -
அரசியல் தீர்வு மீண்டும் பின்போடப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்புப் பேரவையின் பிரதான வழிநடத்தல் குழு அதனுடைய "இடைக்கால அறிக்கை"யை வெளியிட முடியாத நிலையில் இருப்பதால், நாளை முதல் மூன்று நாட்களுக்குப் பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த அரசியலமைப்பு குறித்த விவாதம் காலம் குறிப்பிடாமல் பின்போடப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கை பெப்ரவரி இறுதிப்பகுதியில் வெளிவருமா அல்லது மார்ச் மாதம் இடம்பெறப்போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடரின் பின்னர் வெளியிடப்படுமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு நேற்று முன்தினம் கூடி இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்திருக்கின்றது.
வழிநடத்தல் குழு 5 ஆம் திகதி கூடிய போது இடைக்கால அறிக்கை இதில் இறுதியாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், கூட்டம் ஆரம்பமானபோதே, இது தொடர்பில் ஆராய்வதற்குத் தமக்கு கால அவகாசம் தேவை என ஐ.ம.சு.மு. பிரதிநிதியும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா கேட்டுக்கொண்டார். கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர் தினேஷ் குணவர்த்தனவும் இதே கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு மேலதிகமாக நான்கு கட்சிகள் இணைந்து தமது யோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை வெளியிடப்போவதாகவும், அதற்காக கால அவகாசம் தேவை எனவும் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்தே திகதி குறிப்பிடாமல் வழிநடத்தல் குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, அமைச்சர் ராவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் றிசாட் பதியூதீன் தலைமையிலான ஶ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன இணைந்து கூட்டாக தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கப் போவதாகத் தெரிவித்திருக்கின்றன. இவர்களின் தீர்வு யோசனை அவசரம் அவசரமாக வரையப்படுவதாகவும் தெரியவந்திருக்கின்றது. அதிகாரப் பகிர்வு, ஜனாதிபதி முறை, மாகாண அலகுகள், மதம், தேசிய கீதம், தேர்தல் சீர்திருத்தம் போன்ற விடயங்கள் தொடர்பில் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக தமது யோசனைகள் தயாரிக்கப்பட்டுவருதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும்.
மகாநாயக்கர்களுக்கு
மைத்திரி வாக்குறுதி
அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கே அதிகளவுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணி தன்னைப் பலப்படுத்துவதற்கு இதனைப் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றது. 2017 இல் அதிகாரத்தைக் கைப்பற்றுவேன் என சவால்விட்டிருக்கும் மகிந்த, தன்னுடைய அரசியல் நிகழ்சித் திட்டத்தை வகுத்துக்கொள்வதற்கு இதனையே நம்பியிருக்கின்றார். இனவாதத்தைக் துண்டிவிட்டு சிங்கள வாக்குகளைக் கவர்வது இலகுவானது என்பது அவருக்குத் தெரியும். இவ்வருடத்தில் இரு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஒன்று: உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல். அது பெரும்பாலும் ஏப்ரல் மாதம் நடைபெறும். இரண்டு: மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் இவ்வருட நடுப்பகுதியில் இடம்பெறும்.
இந்த இரு தேர்தல்களிலும் தன்னுடைய பலத்தைக் காட்டவேண்டும் என்ற இலக்குடன் செயற்படும் மகிந்த, அரசியலமைப்பு மாற்றத்தை அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார். கூட்டுறவுத் தேர்தல்கள் அவரது செல்வாக்கு அதிகரித்திருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. அந்த உற்சாகத்துடன் மற்றைய தேர்தல்களையும் எதிர்கொள்ள அவர் தயாராகிவருகின்றார். மகிந்தவின் இந்த நகர்வுகள் மைத்திரி தரப்பைக் குழப்புகின்றது என்பது வெளிப்படை. பிரதி அமைச்சர் ஒருவர் பதவி துறந்திருக்கின்றார். அவர் மகிந்தவின் ஆதரவாளர். மேலும் சிலர் மகிந்த தரப்புக்குத் தாவலாம் எனச் சொல்லப்படும் செய்திகளை மைத்திரி மறுத்திருந்தாலும், குழப்ப நிலை ஒன்று உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் 25 பேர் மைத்திரியை அவசரமாகச் சந்தித்துப் பேசியதும் இந்தப் பின்னணியில்தான்.
இதன்தொடர்ச்சியமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் மகாசங்கத்தினரைச் சந்தித்திருக்கின்றார். புதுவருடத்துக்கு ஆசீர்வாதம் பெற அவர் சென்றதாகச் சொல்லப்பட்ட போதிலும், கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடிதான் அவரை அங்கு செல்லத் துண்டியது. மகாநாயக்கர்களுக்கு அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் மகிந்த தரப்புப் பிரச்சாரங்களுக்குக் கொடுக்கப்பட்ட பதிலாகவே உள்ளது. ஐந்து விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அங்கு உறுதிமொழி வழங்கியிருக்கின்றார். ஒன்று; ஒற்றையாட்சி மாற்றப்படாது. இரண்டு: வடக்கு கிழக்கு இணைக்கப்படாது. மூன்று: பௌத்த மதத்துக்கு முதன்மை இடம். நான்கு: பொது மக்களின் கருத்துக்கள் மீண்டும் பெறப்படும். ஐந்து: மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் அரசியலமைப்பு வரையப்படாது. இந்த உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்ற முற்படும் போது, தமிழர்களுக்கான தீர்வு எதுவும் எஞ்சியிருக்கப்போவதில்லை.
த.தே.கூட்டமைப்பின்
அணுகுமுறை என்ன?
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தென் இலங்கையில் உருவாகிவரும் இந்த நிலையிலும், நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் தலைமை செயற்பட்டுவருகின்றது. தமிழ் மக்களுடைய பிரதான கோரிக்கைகள் தொடர்பில் இரு பிரதான கட்சிகளின் செயற்குழுக் கூட்டங்களிலும் எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானமும் வழிநடத்தல் குழுவில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனைவிட, ஜே.வி.பி.யும் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளுக்காகக் குரல் கொடுக்கும் நிலையில் இல்லை. ஒருங்கிணைப்புக் குழுவை அவசரமாகக் கூட்டுமாறு சிவசக்தி ஆனந்தன் முன்வைத்த கோரிக்கைக்கும் இதுதான் காரணம்.
மகாநாயக்கர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் வழிநடத்தல் குழு அரசியலமைப்புப் பேரவையை வழிநடத்தப்போகின்றது என்பதில் சந்தேகம் இருக்கத் தேவையில்லை. அந்தப் பாதையிலிருந்து மற்றொரு பாதைக்குச் செல்வதற்கான அரசியல் துணிச்சல் மைத்திரிக்கோ, ரணிலுக்கோ, மகிந்தவுக்கோ இல்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் எவ்வாறானதாக இருந்தாலும் அரசியல் ரீதியில் அந்தப் பாதையிலிருந்து அவர்கள் விலகினால் விபத்தையே சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் அதற்கு அவர்கள் துணிய மாட்டார்கள்.
இவ்வாறான நிலையில் கூட்டமைப்பிடம் இருக்கக்கூடிய மாற்றுத் திட்டம் என்ன? வெள்ளிக்கிழமை இரவு சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தல் கேட்கப்பட்ட பிரதான கேள்வி இதுதான். கூட்டமைப்புத் தலைமையிடம் இதற்குத் திட்டவட்டமான பதில் இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல, "நம்ப நடக்க வேண்டும்" என்ற அணுகுமுறையிலேயே கூட்டமைப்பின் தலைமை செல்கின்றது. சிங்களத் தரப்பைப் பொறுத்தவரையில் தம்மை வெற்றிபெற்ற தரப்பாகவே அவர்கள் கருதிச் செயற்படுவது தெரிகின்றது. புலிகள் இல்லை. பிரச்சினையும் இல்லை! தீர்வு எதற்கு? என்பதுதான் அவர்களுடைய மனப்போக்காக உள்ளது. மைத்திரியும் ரணிலும் என்னதான் சிந்தித்தாலும் மனப்பூர்வமாகச் சொன்னாலும் சிங்களத் தேசிவாதத்தின் இந்தப்போக்கிற்கு முரணாகச் செல்ல முடியாதவர்களாகவே அவர்கள் இருப்பதைதான் கடந்த வாரச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
இந்தநிலையில் கூட்டமைப்பினரும் "நம்ப நடப்போம்" என தொடர்ந்தும் நல்லெண்ணத்தைக் காண்பித்துக்கொண்டிருப்பது அவர்களுடைய பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவே கருதப்படுகின்றது. தம்முடைய நிலைப்பாட்டை முன்வைத்து பேரம்பேசக்கூடிய நிலையில் கூட்டமைப்பு இன்று இல்லையா? மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இரண்டு வருடங்களாகத் தொடர்ந்த பேச்சு முறிவடையக் காரணம் சர்வகட்சி மாநாட்டில் பேசுவோம் என்ற அரசின் அழைப்புத்தான். நேரடியாகப் பேசுவதுதான் அப்போது கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளது. ஒருவகையில் தோல்விமனப்பான்மையுடன்தான் கூட்டமைப்பு இந்தப் பேச்சுக்கணை அணுகுகிறதா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது!
ஞாயிறு தினக்குரல்: 2017-01-08

No comments:
Post a Comment