நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைப் பிரிவின் ஆலோசனைகள் இலங்கை அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது. போர்க் குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் சம்பந்தப்பட வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை உள்ளடக்கிய இந்தப் பிரிவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்தது. அறிக்கையின் உள்ளடக்கமும், அரசாங்கம் அதனை அவசரமாக நிராகரித்தமையும் சர்வதேச ரீதியாக பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. நிராகரிப்பின் மூலம் சிங்களத் தேசியவாதிகளின் பாராட்டுதல்களை அரசாங்கம் பெற்றிருக்கின்றது. மறுபுறத்தில் சர்வதேச அமைப்புக்களின் கண்டனங்களையும் அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை மீதான நம்பகத்தன்மையைச் சிதறடிக்கும் மற்றொரு சம்பவமாக இது அமைந்திருக்கின்றது.
சிரேஷ்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 17 உறுப்பினர்களை உள்ளடக்கிய உயர் குழு ஒன்றே கடந்த ஒரு வருட காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்த கலந்தாலோசனைகளின் பின்னர் இந்த அறிக்கையைத் தயாரித்திருந்தது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கியதாக இந்தக் கலந்துரையாடல் இருந்துள்ளது என்பதுடன், இக்குழுவின் உறுப்பினர்களும் பல்வேறு சமூகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். ஆக, இந்தக் குழுவின் அறிக்கை நடுநிலையானதும், நம்பகத்தன்மையானதும் என்பதில் சந்தேகம் இருக்கத் தேவையில்லை. தன்னால் நியமிக்கப்பட்ட குழு ஏகமனதாக வழங்கிய அறிக்கையையே அவசரமாக நிராகரித்திருப்பதன் மூலம் தன்மீதான நம்பகத் தன்மையையே அரசாங்கம் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.
ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை எழுந்தமானமாக நிராகரிப்பதன் மூலம் நல்லாட்சி அரசாங்கமும் முன்னைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாதையில்தான் செல்கின்றதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகியிருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நியமித்த ஆணைக்குழுக்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று - கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு. இரண்டு - அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் குழு. இவ்விரு குழுக்களின் அறிக்கைகளையும் ராஜபக்ஷ குப்பைக் கூடைக்குள் போட்டார். சமூகத்தின் மதிப்புவாய்ந்தவர்களை உள்ளடக்கிய ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம், சர்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தியைக் கொடுத்த ராஜபக்ஷ, தாம் எதிர்பார்த்த பரிந்துரைகளை அவை வெளியிடாத போது அதனை நிராகரிப்பதை வழமையாகக் கொண்டிருந்தார்.
நல்லாட்சியிலும் இன்று அதுதான் நடைபெற்றிருக்கின்றது. சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கியதாக விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைதான் இந்த நிராகரிப்புக்குக் காரணம். அவ்வாறான பரிந்துரையை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை. தாம் எதிர்பர்க்கும் பெறுபேறு கிடைக்கவில்லை என்பதற்காக பரிந்துரைகளை நிராகரிப்பதென்றால், இவ்வாறான குழுக்களை நியமிப்பதே அர்த்தமற்றது. அது சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு முயற்சி. உள்நாட்டு அரசியல் நிலைமைகள்தான் இதற்குக் காரணம் என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. இவ்வாறான ஒரு அணுகுமுறையில் செல்லும் அதேவேளையில், சர்வதேசத்துடனான உறவுகளை அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் எவ்வாறு பேணிக்கொள்ள முடியும்?
நல்லாட்சி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இரண்டு சாதகமான அம்சங்கள் அதற்குள்ளது. ஒன்று - சர்வதேச சமூகத்துடனான அதன் நல்லுறவு. ராஜபக்ஷ யுகத்தில் இவ்வாறான உறவு இருக்காததால் சர்வதேச அழுத்தங்களை அதிகளவுக்கு இலங்கை எதிர்கொண்டது. இப்போது அவ்வாறான நிலை இல்லை. இது மிகவும் சாதகமான நிலை. இரண்டு- பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை நல்லாட்சிக்கு வழங்குகின்றது. ராஜபக்ஷவுக்கு அவ்வாறான ஆதரவு இருக்கவில்லை. சர்வதேசத்தின் மூலமாகவும், இந்தியா ஊடாகவும் ராஜபக்ஷ அரசுக்கு கூட்டமைப்பு நெருக்கடி கொடுத்தது. நல்லாட்சிக்கு இந்த இரு பக்க அழுத்தங்களும் இல்லை. அவர்களுக்குள்ளது ராஜபக்ஷவின் அழுத்தம் மட்டும்தான். அதனால் ராஜபக்ஷ எதனை விரும்புவாரோ அதனை அவர்கள் செய்கின்றார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்களில் அது தெளிவாக இருக்கின்றது. சர்வதேச சமூகம் தமக்கு அழுத்தங்களைத் தரப்போவதில்லை என்பதும், கூட்டமைப்பு தமது நிபந்தனையற்ற ஆதரவைத் திரும்பப் பெறப்போவதில்லை என்பதும்தான் அவை. தாம் நியமித்த குழுவின் அறிக்கையையே அவர்களால் மிகவும் இலகுவாக குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட்டுவிட முடிந்தது அதனால்தான். அதேபோல அரசியல் தீர்வை உள்ளடக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளும் காலவரையறையின்றிப் பின்போடப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சீர்திருத்ததே இப்போதைக்குத் தேவையில்லை என்ற விதமாக அரசாங்கத்தின் சக்திவாய்ந்த ஒரு பிரிவினர் கருத்துருவாக்க முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள்.
ராஜபக்ஷவின் மீள்பிரவேசம் குறித்த அச்சமே இதற்குக் காரணம். ராஜபக்ஷ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தான் நினைத்த அனைத்தையும் நேரடியாகவே செய்தார். ராஜபக்ஷ குறித்த அச்சத்தில் அவர் விரும்பும் அனைத்தையுமே நல்லாட்சி இப்போது செய்துகொண்டிருக்கின்றது. ராஜபக்ஷவை "தர்மாவேசம்" கொள்ள வைக்கக்கூடாது என்பதில் நல்லாட்சி மிகவும் அவதானமாக இருக்கின்றது. சர்வதேசம் தம்மைப் பாதுகாக்கும் என்ற நல்லாட்சியின் நம்பிக்கையும், கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவும் இருக்கும் வரையில் இந்த நிலையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. அதுவரையில் இதுபோன்ற நிராகரிப்புக்கள் தொடரத்தான் செய்யும்!
(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 2017-01-15)

No comments:
Post a Comment