ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த மாணவர்களின் அறவழிப் போராட்டம் வெற்றிபெற்றிருக்கின்றது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிப்பதற்கான அவசர சட்டமூலம் தயாராகியிருக்கின்றது. இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் நேற்று சனிக்கிழமையே இதனைச் சட்டமூலமாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 15 பேருடன் தொடங்கி 200 பேராகி இறுதியில் இலட்சக்கணக்கான மாணவர்களும், அவர்களுடைய குடும்பங்களும் கலந்துகொண்ட போராட்டமாக மத்திய அரசையும், மாநில அரசையும் அடிபணியச் செய்திருக்கின்றார்கள் மாணவர்கள். மாணவர் சக்தி மகப்தான சக்தி என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். உலகமே தமிழகத்தைத் திரும்பிப்பார்க்கச் செய்திருக்கின்றது இந்தப் போராட்டம்.
சென்னையில் ஆரம்பமான இந்தப் போராட்டம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இலங்கையில் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் கொழும்பிலும், மேற்கு நாடுகளிலும் கூட இதன் எதிரொலியைக் காண முடிந்தது. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே தன்னிச்சையான, ஒருவிதமான ஒழுங்கோடு, தலைமை ஏதுமின்றி நடைபெற்றுவருகின்றன. 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு, இவ்வளவு பெரிய அளவில் ஒரு தன்னெழுச்சியான போராட்டம் தமிழகத்தில் நடக்கவில்லை என்பதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரபுலக வசந்தம் போல சமூக ஊடகங்கள் மூலமாக அணிதிரண்ட மாணவர்களே ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தப் போராட்த்தை நடத்தினார்கள்.
அரபு வசந்தம் முதல் அத்தனை போராட்டங்களுக்கும் பின்னால் அமெரிக்காவோ அரசியல் அமைப்புகளோ நிச்சயமாக இருந்திருக்கின்றன. தமிழக மாணவர்களின் போராட்டம் அவ்வாறிருக்கவில்லை. இது தன்னெழுச்சியானது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் தலைமைகளால் இவ்வாறான பாரிய - பரந்தளவான போராட்டங்களை முன்னெடுக்க முடியாது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். அவ்வாறான தலைவர்கய் யாரும் இன்று தமிழகத்தில் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது. உரிமைப் போராட்டங்களுக்கு அரசியல் தலைவர்களை நம்பியிருக்கப்போவதில்லை என்பதையும் இந்தப் போராட்டத்தின் மூலம் மாணவர்கள் உணர்த்திவிட்டார்கள். இது அரசியல் தலைவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக்கூடிய ஒன்று!
அமைதியான முறையில் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவது, வன்முறையின்றி தொடர்ந்து நடத்தப்படுவது, பெண்களும் பெரிய அளவில் பங்கேற்பது ஆகியவை இந்தப் போராட்டத்தின் குறிப்பிடத்தகுந்த பண்புகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன. இரவு பகல் என்றில்லாமல் இலட்சக்கணக்கான மாணவர்கள் அணிதிரண்டு நடத்தும் இந்தப் போராட்டம் இந்தியாவை மட்டுமன்றி, உலகத்தையே ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது. இது வெறுமனே ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் அல்ல. பல்வேறு அதிருப்திகளின் தொடர்ச்சியாக அதன் உச்சகட்டமாகவே இந்தப் போராட்டம் எழுந்திருக்கிறது என்பதே உண்மை. தமிழகத்தின் உணர்வுகள் தொடர்ச்சியாக அடக்கப்பட்டதன் விளைவுதான் இது. பொறுமையிழந்த நிலையிலேயே ஜல்லிக்கட்டு தமிழகத்தை ஒருங்கிணைத்திருக்கின்றது.
"மக்கள் உணர்வுபூர்வமான விஷயங்களுக்கே முக்கியத்துவம் தருவார்கள். தற்போதைய காலகட்டத்தில் எல்லோருக்குமே ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அம்மாதிரியான ஒரு அடையாளத்தில் கைவைக்கப்படும்போது எல்லோரும் கிளர்ந்தெழுகிறார்கள். சமூக வலைதளங்கள் இதனைக் கண்ணுக்குத் தெரியாமல் ஒருங்கிணைக்கின்றன" என சமூக ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஆனால், இதுபோன்ற போராட்டங்களுக்கு ஒரு நீண்ட காலத் தன்மை இருப்பதில்லை. அண்ணா ஹசாரேவின் போராட்டம், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியான போது கிளர்ந்த போராட்டம் என்பன அந்தந்தத் தருணங்களோடு முடிந்துவிட்டன என்பதும் கவனிக்கத்தக்கது. அந்தப் போராட்டங்களுக்குத் தெளிவான அரசியல் இலக்கு ஒன்று இருக்கவில்லை என்பதும் அவற்றின் தோல்விக்குக் காரணம். இப்போது வெற்றிபெறும்வரை நகர்வதில்லை என்பதில் உறுதியாகவிருந்து தமது போராட்டத்தில் மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
பொங்கல் பண்டிகையோடு பிரிக்கவே முடியாத உறவைக் கொண்டவை மாடுகள். ஜல்லிக்கட்டு விளையாட்டானது கிராமப்புறத் தமிழகத்துடன் உணர்வு ரீதியாகப் பிணைக்கப்பட்டது. இதனை வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது. நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள், மத்திய அரசின் நகர்வுகளின் விளைவாக 2014 இல் ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுத் தடைக்கு பல அமைப்புகள் காரணமாக இருந்துள்ளன. அதில் முக்கியமானது 'பீட்டா' அமைப்பு. அந்த அமைப்பையும் தடைசெய்ய வேண்டும் என தமிழக மாணவர்கள் கேட்பது அதனால்தான். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அந்த அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டைத் தடுப்பதற்கான அதிகாரத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டது என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
"ஜல்லிக்கட்டு விளையாட்டானது உள்ளூர் மாட்டினங்களைப் பாதுகாக்கும் செயல்பாட்டோடு தொடர்புடையது; ஜல்லிக்கட்டுக்குத் தடை கோருபவர்களின் பின்னணியில் சர்வதேசச் சந்தை அரசியல் இருக்கிறது" என்பது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதங்களில் ஒன்று இது புறந்தள்ளிவிடக்கூடியதொன்றல்ல. அடுத்த தலைமுறையினர் நவீனமாகவும் அதே சமயம் கலாச்சார வேர்களை விடாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கும் இந்தப் போராட்டம் ஒரு உதாரணம். தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான, வீரத்துக்குப் பெயர் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்த முடியாததால் தமிழக மக்கள் கொதித்துத்தெழுந்தார்கள். பொருளாதாரம், அரசியல், காப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கம் என அனைத்தும் இங்கு குவிந்துள்ளன. மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும், பாரம்பரியங்களையும் காக்க வேண்டிய உச்சநீதிமன்றம், பீட்டாவின் வாதத்தை ஏற்று தமக்கு எதிராக நிற்கிறது என்பதுதான் அவர்கள் கோபம். இந்தப் போராட்டத்தில் அவர்கள் பெற்றுள்ள வெற்றி ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக இருக்கும்!
ஞாயிறு தினக்குரல் 2017-01-22

No comments:
Post a Comment