எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த அரசுக்கு எதிரான ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பேரணி கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. மழைக்கு மத்தியிலும் பெருந்தொகையானவர்கள் பேரணியில் கலந்துகொண்டமை தமக்குக் கிடைத்த வெற்றி என ஏற்பாட்டாளர்கள் திருப்தியடைந்திருக்கின்றார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் என்பதுதான் இந்தப் பேரணியின் பிரதான கோஷமாக இருந்தது. ஆனால், அரசியலில் அரங்களில் இந்தப் பேரணி பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்துக்கு அது காரணமல்ல.
இந்த முன்னணியின் மூலமாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தீவிர அரசியலுக்குள் மீண்டும் பிரவேசித்திருப்பது இது பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்துக்கு பிரதான காரணம். அரசுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் வகையில் பலமான ஒரு எதிரணியாக இது உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டமை இந்தப் பேரணி பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்துக்கு இரண்டாவது காரணம். இந்த முன்னணியின் பிரவேசம் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வை எந்தளவுக்குப் பாதிக்கும் என்ற கேள்வியும் இது தொடர்பான கவனம் அதிகரித்திருந்தமைக்கு மற்றொரு காரணம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் அரசாங்கத்தைக் கவிழ்த்தல் என்பன இந்த முன்னணியின் நிகழ்ச்சி நிரலில் முதன்மையானவையாக இருக்கின்ற போதிலும், முன்னணியின் பேரணி தொடர்பாக அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஐக்கிய பிக்கு முன்னணியின் பேரணி பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வில் எற்படுத்தியிருந்த நெருக்கடிகள் பற்றிய செய்திகள் நிச்யமாக அரசுக்கு இனிப்பானவையாக இருந்திருக்கும். இதற்கு மேல் தமக்கு ஆபத்து இல்லை எனவும் அரசு கருதியிருக்கலாம்.
அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றை சரத் பொன்சேகா பிக்கு முன்னணி மூலமாக ஆரம்பிக்கப்போகின்றார் என்ற தகவல் கசிந்தவுடன் உஷாரானவர்கள் அரசாங்கத் தரப்பினர் அல்ல. ஐ.தே.க. தலைமையே உடனடியாக இதனால் உஷாரடைந்தது. எதிரணி முன்னணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் தான் இறங்கியிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க நீண்ட காலமாகவே கூறிவருகின்ற போதிலும், அது ஒரு தேக்க நிலையிலேயே இருக்கின்றது. உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில் பல்வேறு தரப்பினரையும் அரவணைத்து பலமான ஒரு கூட்டமைப்பை அமைக்க ரணிலினால் முடியவில்லை.
அந்த இடத்தை நிரப்புவதற்கு பொன்சேகா இப்போது முற்பட்டிருப்பது ரணிலுக்கு ஒரு அச்சுறுத்தல் என்பதில் சந்தேகம் இல்லை. பொன்சேகாவின் பிரவேசத்தால் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அந்தஸ்த்தைக் கூட கடந்த தேர்தலில் இழக்க வேண்டியேற்பட்டதை ரணில் மறந்;திருக்கமாட்டார். பொன்சேகாவின் வருகை ரணிலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று - மகிந்த ராஜபக்ஷவுக்குச் சவால்விடக்கூடிய தலைவராக பொன்சேகா இருப்பதால் எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றின் தலைமை பொன்சேகாவிடம் சென்றுவிடலாம் என்பது. இது ரணில் அமைக்கும் எதிரணி கூட்டமைப்பை பலவீனப்படுத்திவிடும். இரண்டு - ஐ.தே.க.வில் அதிருப்தியடைந்திருக்கும் பலர் பொன்சேகாவை நோக்கிச் செல்லலாம் என்பது.
இந்தப் பின்னணியில்தான் பொன்சேகாவின் பேரணிக்குச் செல்பவர்கள் கட்சியின் உறுப்புரிமையை இழப்பார்கள் என ஐ.தே.க. தலைமை அறிவித்தது. அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலருடைய கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஒழுக்க விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதகைவிட பொன்சேகா மீதான தாக்குதலையும் ஐ.தே.க. தீவிரப்படுத்தியிருந்தமையைக் காண முடிந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை நிறுத்தியது தவறு என்பதை தாம் இப்போது உணர்ந்துகொள்வதாக ஐ.தே.க. அறிவித்தது.
நடைபெறும் இந்தச் சம்பவங்களை அவதானிக்கும் போது ஒரு விடயத்தைத் தெளிவாக உணர முடிகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு என்பவற்றை தமது பிரதான கோஷங்களாக ஐ.தே.க. தலைமையும் பொன்சேகா தரப்பினரும் முன்வைக்கின்ற போதிலும், அதற்கு முன்னதாக தமது தலைமையை உறுதிப்படு;திக்கொள்வதிலேயே அவர்களுடைய கவனம் உள்ளது. ஆட்சியைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டு ரணில் தலைமையில் எதிர்க்கட்சி முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இணைய பொன்சேகா தயாராகவில்லை. அதேபோல பொன்சேகாவுக்கு தம்முடன் வந்து இணையுமாறு அழைப்பு விடுத்துள்ள ரணில், பொன்சேகா அணியில் இணையத் தயாராகவில்லை.
இருவருமே தம்மைப் பற்றிய மிகையான கணிப்பு ஒன்றை வைத்திருப்பதுதான் இதற்குக் காரணம். ஆனால், தம்மிடமுள்ள பலவீனங்களை இருதரப்பினரும் உணரும்போது அவர்கள் இணைந்து செயற்படவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படலாம். ஒன்றாக இணைந்து செயற்பட்டால்தான் தமது இருப்புக்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற ஒரு நிர்ப்பந்தம் ஒன்று வரும் போது இருவரும் இணைந்து செயற்படும் நிலை உருவாகும் என எதிர்வு கூறுகின்றார் இந்த இரு தரப்பினருடனும் நெருக்கமான உறவுகளை வைத்துள்ள ஒரு மூத்த அரசியல்வாதி. உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் அவ்வாறான நிலை ஏற்படும் என்பது அவரது கணிப்பு!
அதேவேளையில், பிக்குகள் முன்னணியின் கூட்டத்தில் பொன்சேகா வெளியிட்ட அறிவிப்பும் முக்கியமானது. அடுத்த வருடத்தில் திடீர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை அரசாங்கம் முன்வைக்கலாம் எனவும், அதற்காக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தயார்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவித்தார். ஐக்கிய பிக்குகள் முன்னணி மூலமாக மீண்டும் தீவிர அரசியலுக்குள் பொன்சேகா பிரவேசித்தமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தயாரிப்புக்களில் பொன்சேகா இப்போதே இறங்கிவிட்டாரா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது. ஐ.தே.க.வை பெரிதாகக் குழப்புவதுதம் இதுதான்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை நிறுத்திய பொது எதிரணி அவருக்கு முழுமையான ஆதரவை வழங்கியது. ஐ.தே.க., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மு.கா. மற்றும் ஜே.வி.பி. என்பன அவருடைய வெற்றிக்காகக் களமிற்கியிருந்தன. ஆனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் இப்போது ஒற்றுமையில்லை. அவ்வாறான ஒற்றுமை ஒன்று உடகடியாக ஏற்படுவதற்கான சாத்தியங்களும் காணப்படவில்லை. திடீர்த் தேர்தல் ஒன்றை நடத்தி தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இந்தத் தருணத்தை மகிந்த பயன்படுத்திக்கொள்ளலாம் என பொன்சேகா கருதுவதாகத் தெரிகின்றது. இந்தக் கருத்து நிராகரக்கப்படக்கூடிய ஒன்றல்ல.
பொன்சேகாவைப் பொறுத்தவரையில் சிங்கள - பௌத்த வாக்குகளைப் பெற்றுத்தான் இந்த அரசாங்கத்தை மாற்ற முடியும் என்ற கருத்தை அவர் கொண்டுள்ளார். இதற்கான தகமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை எனவும் பொன்சேகா கருதுவதாகத் தெரிகின்றது. அதற்காக தன்னுடைய செயற்பாடுகளை முற்றுமுழுதாக சிங்கள - பௌத்த அடிப்படையில் கொண்டு செல்லவும் அவர் விரும்பவில்லை. அவ்வாறு செல்வது மகிந்தவின் செயற்பாடுகளை ஒத்ததாக அமைந்துவிடும் எனவும் அவர் கருதுகின்றார். அதனால் இதற்குள் தமிழ்த் தரப்பையும் இணைத்துக்கொள்ள அவர் விரும்புவதாகத் தெரிகின்றது. அதனால்தான் ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தன்னுடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
மனோ கணேசனைப் பொறுத்தவரையில் ஐ.தே.க. தலைமையிலான எதிரணிக் கூட்டமைப்பில் இருப்பதால் பொன்சேகாவின் அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளையில் இவ்விடயத்தில் ஒரு முக்கியமான நகர்வு ஒன்றையும ; மனோ கணேசன் செய்திருக்கின்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பதற்கு அப்பால் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளையும் உள்ளடக்கியதாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மகஜர் ஒன்றை பொன்சேகாவுக்கு அவர் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. இதே கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்கவிடமும் அவர் முன்வைத்திருக்கின்றார்.
ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் தம்மை சிறுபான்மையினருடைய நியாயமான அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஒரு கட்சியாக அவர்கள் காட்டிக்கொள்கின்ற போதிலும், அதனை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லிக்கொள்வதில் தயக்கத்தையே காட்டுகின்றார்கள். சிங்கள – பௌத்தர்கள் மத்தியில் இது தம்மைப் பாதிக்கலாம் என்ற அச்சம்ஐ.தே.க.வக்கு உள்ளது. இந்த நிலையிலேயே மனோ கணேசன் தன்னுடைய கோரிக்கைகளை ஐ.தே.க.வுக்கும் முன்வைத்துள்ளார்.
எது எப்படியிருந்தாலும் பொன்சேகாவின் மீள்பிரவேசம் தூங்கிக்கொண்டிருந்த ஐ.தே.க.வை விழித்தெழச் செய்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை. கொழும்பு ஹைட் பாக்கில் பொன்சேகா உரைநிகழ்த்தவிருந்த அதேவேளையில் துண்டுப் பிரசுரங்களுடன் நுகேகொடை சந்தியில் ரணில் விக்கிரமசிங்க வீதியில் இறங்கியிருந்தார். நவம்பர் 8 ஆம் திகதி வரையில் அரசுக்குக் காலக்கெடு விதித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அதன்பின்னர் தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார். ஆக, அடுத்துவரப்போகும் காலங்கள் எதிரணியினரின் போராட்டங்கள் நிறைந்த ஒரு வாரமாக அமையலாம்.