செய்திகளைப் படிக்கும்போது அரசியலில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டமாகத்தான் இருக்கின்றது!
காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தரமுடியாது என்பதுதான் அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் நிலைப்பாடாக நேற்று வரை இருந்தது. பொலிஸ் அதிகாரங்களைக் கொடுத்தால் நாளை வடபகுதிக்குச் செல்லும்போது தமிழ்ப் பொலிஸார் தன்னைக் கூட கைது செய்துவிடலாம் என மகிந்த ராஜபக்ஷ கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தை முடித்துவைத்து உரையாற்றிய போதும் டிசெம்பர் மாதத்தில் இதனைத்தான் ஜனாதிபதி கூறியிருந்தார்.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலும் இறுதியில் நெருக்கடியை ஏற்படுத்துவதாக இந்தப் பிரச்சினையே இருந்தது.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன தமிழர்களின் கோரிக்கைகளில் அடிப்படையானவையாக இருந்தமையால், அவற்றைவிட்டுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவிருக்கவில்லை.
மறுபுறத்தில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்பதில் அரச தரப்பு உறுதியாக இருந்தது. இனவாதக் கட்சிகளும் இவ்விடயத்தில் அரசுக்கு ஊக்கம் கொடுத்தன.
இந்தப் பின்னணியில்தான் பேச்சுக்களை மேலும் முன்னெடுக்க முடியாத ஒரு நிலை உருவாகியிருந்தது.
குறிப்பிட்ட இந்த அதிகாரங்களைக் கோருவதே தேசத்துரோகம் என்பது போல அமைச்சர்களும், இனவாதக் கட்சிகளின் தலைவர்களும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதாகவே ஜனாதிபதியின் பிந்திய அறிவிப்பு உள்ளது.
அதாவது அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று (அதாவது 13 பிளஸ்) அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் உறுதியளித்திருக்கின்றார். செவ்வாய்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை இந்திய அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார்.
காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்துவிட்டு 13 பிளஸ், பிளஸ் எனக் கூறமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இந்த விஜயத்தின்போது சில விடயங்களை சற்று கடும் தொனியிலேயே தெரிவித்திருந்தார். குறிப்பாக 13 வது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு "மிகவும் அவசியம்" என அவர் அழுத்திக் கூறியதாக இராஜதந்திரத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. 13 பிளஸ் பிளஸ் என மகிந்த ராஜபக்ஷ பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் வைத்துத் தெரிவித்திருந்தமையையும் இந்திய அமைச்சர் நினைவூட்டியிருந்தார்.
இந்த நிலையில் அதனை எற்றுக்கொள்வதைவிட ஜனாதிபதிக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. 13 பிளசுக்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார் என்ற தகவல்கூட அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர்தான் இதனை ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அறிவித்தார்.
இதேதினத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வு மகிந்த அரசாங்கத்தின் இந்த பற்றுறுதியைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களுக்கு நேரம் குறிப்பிட்டிருந்தபோதிலும் அரசு தரப்பு பிரதிநிதிகள் யாரும் அங்கு வரவில்லை. கூட்டமைப்பினர் காத்துக்கொண்டிருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.
1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட 115 பக்க அறிக்கை அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது. இந்த அறிக்கை சர்வதேச ரீதியாகப் பெரும் அவதானத்தைப் பெற்றுக்கொண்ட அதேவேளையில் கொழும்புக்கு அது பெரும் சீற்றத்தைக் கொடுத்திருந்தது. இதற்குப் பழிவாங்கும் வகையிலேயே செவ்வாய்கிழமைப் பேச்சுக்களை அரசு தவிர்த்துக்கொண்டது.
2. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான தமது பிரதிநிதிகளின் பெயர்களைப் பிரேரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசு அழுத்தம் கொடுத்துவருகின்றது. அவ்வாறு பெயர்களைப் பிரேரிக்காவிட்டால் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் தாம் பங்குகொள்ளப்போவதில்லை என்பதை உணர்த்துவதற்கும் இந்தப் பேச்சுக்களை அரச தரப்பு தவிர்த்திருக்கலாம்.
3. இதனைவிட 13 வது அரசியலமைப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி இந்தியாவிடம் தெரிவித்திருப்பதால் சிங்களக் கடும்போக்களாளர்கள் மத்தியில் உருவாகியிருக்கக்கூடிய உணர்வுக்கொந்தளிப்பைத் தளர்த்த வேண்டிய அவசியம் ஒன்றும் அரசுக்கு இருந்தது.
அதேவேளையில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதில் ஜனாதிபதி வெளிப்படுத்திய பற்றுறுதியை கூட்டமைப்புடனான பேச்சுக்களை முன்னறிவிப்பு இல்லாமல் தவிர்த்துக்கொண்ட இச்சம்பவம் கேள்விக்குறியாக்குவதாக அமைந்திருக்கின்றது என்பது உண்மை.
பெப்ரவரி இறுதிப்பகுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத் தொடரில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா போன்றன இலங்கைக்கு எதிராக உள்ளமையை கடந்த வாரத்தில் அந்த நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் புலப்படுத்தியிருந்தன. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இன்றிருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை இந்தியாதான்!
அதனால்தான் கிருஷ்ணா சொன்ன அனைத்துக்கும் மகிந்த தலையாட்டியிருக்கின்றார். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் மகிந்த பொறி வைத்திருக்கின்றார். அதாவது - "பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக தீர்வு முன்னெடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் பங்குகொள்ள வேண்டும்."
ஆக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குகொள்ளுமாறு கூட்டமைப்பினருக்கு இந்தியா அடுத்ததாக ஆலோசனை வழங்கலாம். கூட்டமைப்பினரும் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் ஒன்றுள்ளது-
அதாவது, 13 பிளஸ் என மகிந்த கூறினாலும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள்ளால் வரும் போது பல மாதங்கள் சென்றுவிடும். அத்துடன் சிங்கள இனவாதக் கட்சிகளும் அங்கு காத்துக்கொண்டிருக்கின்றன. அப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு 13 பிளஸை ஏற்கவில்லை என மகிந்த கூறலாம். அந்த நேரத்தில் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கும்.
இந்திய இராஜதந்திரிகள் திறமையானவர்கள்தான்! ஆனால் கொழும்பிடம்தான் அவர்கள் தொடர்ந்தும் பாடம் படிக்கின்றார்கள்!!
No comments:
Post a Comment