கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், பயங்கரவாத தடைச் சட்டம் அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்கு எந்தளவுக்கு மோசமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இச்சம்பவம் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. அசாத் சாலி ஊடகம் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டி தொடர்பாக விசாரிப்பதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனைவிட, முஸ்லிம்களை ஆயுதமேந்த தூண்டினார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சரமாரியாகத் தெரிவிக்கப்பட்டன. இறுதியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் அவர் விடுதலை செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்தன. எதிர் அரசியல் செயற்பாடுகயும், விமர்சனங்களையும் அடக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டமையை வன்மையாகக் கண்டித்திருக்கும் சிவில் அமைப்புக்கள், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பாக இந்த வார முற்பகுதியில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கின்றார். பயங்கரவாதத் தடைச்சட்டம் அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய ரணில் விக்கிரமசிங்க அது நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். இருந்தபோதிலும், இதனை நிராகரித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ண, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க முடியாது எனக் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிரளிப்பதற்கான முயற்சிகள் சர்வதேச அரங்கில் இடம்பெறுவதால் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையிலிருக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டார். அரசாங்கம் வழமையாகத் தெரிவிக்கும் ஒரு கருத்தாகவே இது அமைந்திருக்கின்றது. ஆனால், அசாத் சாலியின் கைதை நியாயப்படுத்த இது வலுவான காரணமாக இருக்கவில்லை. ஊடகவியலாளர் எஸ்.ஜே.திசநாயகமும் இதே சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்தே அதற்குக் கடுமையான எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. மனித உரிமைகளை மோசமாக மீறும் ஒரு சட்டமாக இது குற்றச்சாட்டப்பட்டுவருகின்றது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக என 1979 ஆம் ஆண்டில் இச்சட்டமூலம் முதல்முறையாகக் கொண்டுவரப்பட்டபோது, இது ஆறுமாத காலத்துக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என அப்போதைய ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இச்சட்டமூலம் கொடூரமானதாகக் கருதப்பட்டமையால்தான் அதனை ஆறு மாத காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்போவதாக அரசாங்கம் வாக்குறுதி கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், மாறிமாறி அதிகாரத்துக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் இது தேவையாக இருந்துள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு அவசரகாலச்சட்டம் சட்டம் நடைமுறைக்குக்கொண்டுவரப்பட்டாலும் கூட, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை கைவிட்டுவிடுவதற்கு எந்தவொரு அரசாங்கமும் தயாராகவிருக்கவில்லை. அதேவேளையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பயன்பாடு நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்வதற்கும் மனித உரிமை மீறல்களுக்குமே வழிவகுப்பதாக அமைந்திருந்தது என சிவில் அமைப்புக்கள் பலவும் குற்றஞ்சாட்டியிருந்தன.
போர் முடிவுக்கு வந்த பின்னர் நீண்ட காலமாக நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. இது சுயாதீனமான அரசியல் செயற்பாடுகளுக்கு வழிவகுப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளையில், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் அல்லது அதிலுள்ள சில சரத்துக்கள் மாற்றப்பட வேண்டும் என சிவில் அமைப்புக்கள் பலவும் அப்போது வலியுறுத்தின. ஆனால், அதற்குப் பதிலாக அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டபோது பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு வலுவூட்டக்கூடிய சில சரத்துக்கள் கொண்டுவரப்பட்டன. அதாவது, அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டாலும், அதிலுள்ள சில அம்சங்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இணைத்துக்கொள்ளும் உபாயத்தை அரசு கையாண்டது. இதன்மூலம் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலை உருவாக்கப்பட்டது. அதாவது ஒரு ஆயதத்தை கைவிட்டாலும் மற்றொரு ஆயுதம் அரசின் கைகளுக்குக் கிடைத்தது.
அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் இதன் சரத்துக்கள் சில அமைந்திருப்பதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் பலவும் அப்போது சுட்டிக்காட்டியிருந்தன. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தேசிய மனித உரிமைகள் செயற் திட்டமும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நடைமுறைகள் மீள்பரிசீலனை செய்யப்படுவதுடன், மனித உரிமை நியமங்களுக்கு அமைவாக அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் 2011 இல் பரிந்துரை செய்திருந்தது. ஒரு வருடகாலத்தில் இதனைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் எந்தத் தடைகளும் இன்றி பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என்பதைத் தான் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட சம்பவம் உணர்த்துகின்றது.
இப்போது இந்தச்சட்டத்தின் மூலம் யாரையும் கைது செய்து புனர்வழ்வுக்கு உட்படுத்துவதற்காக சிறைக்கு அனுப்பிவிட முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியிருப்பதும் கவனிக்கத்தக்கது. இவ்வாறு 39 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடும் அவர், அவர்கள் ஒரு தடவையேனும் ஒரு நீதிபதிக்கு முன்பாக ஆஜர்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார். போர் முடிவுக்கு வந்த பின்னர் சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டிய தருணத்தில் இந்தச் சட்டமூலம் அவசியம்தானா எனவும் சிவில் சமூக அமைப்புக்கள் கேள்வி எழுப்புவதற்குப் பல காரணங்கள் உள்ளன. போர் முடிவுக்கு வந்தாலும் சுயாதீனமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆசாத் சாலி இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமைந்திருக்கின்றது.

No comments:
Post a Comment