வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழர்கள் உண்மையாகவே அக்கறை கொள்ள வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால் - தேர்தலை இலக்கு வைத்த நகர்வுகள் வேகமாக ஆரம்பமாகிவிட்டன. யாழ்ப்பாணத்தில் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் தேர்தல் நடவடிக்கைகள் அல்லது வன்முறைகள் சூடுபிடித்துவிட்டது எனக் கூறலாம். வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதன் மூலம் இனநெருக்கடிக்கான தீர்வொன்று கிடைத்துவிடப்போவதில்லை. சில சமயம் இதுதான் தீர்வு எனக் கூறப்பட்டு (கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிப்பது போல) தீர்வுக்கான முயற்சிகள் முடக்கப்பட்டுவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. அதேபோல வெற்றி பெறப்போவது யாராக இருந்தாலும், மாகாண சபைகளுக்கு இருக்கக்கூடிய முழுமையான அதிகாரங்களையும் பயன்படுத்துவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கப்போகின்றது. இந்தக் கேள்விக்குறிகளுக்கு மத்தியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பிரதான கட்சிகள் பதில் தேடிக்கொண்டுள்ளன.
வடமாகாண சபைக்கான தேர்தல் அரசாங்கம் விருப்பத்துடன் நடத்தும் ஒன்றாகத் தெரியவில்லை. ஜனாதிபதியின் பொக்கற்றுக்குள் இருக்கக்கூடிய சிங்கள தேசியவாதக் கட்சிகளாக சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி என்பன வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக ஏற்கனவே குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் வெற்றி பெறும் என்பதன் அடிப்படையிலேயே அவர்களுடைய எதிர்ப்புக்கள் உருவாகியிருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. தேர்தல் அறிவிப்பதற்கான திகதி நெருங்கிவரும் நிலையில் இந்த எதிர்ப்புக்கள் மேலும் தீவிரமடையும் என்பது எதிர்பார்க்கக்கூடியது. அரசின் மறைமுகமான ஆதரவு இல்லாமல் இவர்கள் கிளர்ந்தெழுந்திருப்பார்களா என்பதும் சந்தேகத்துக்குரியதுதான். இறுதிக்கட்டத்தில் தேர்தலை தவிர்ப்பதற்கான ஒரு காரணமாக அரசாங்கம் இதனைப் பயன்படுத்தலாம் என்பதும் எதிர்பார்க்க முடியாத ஒன்றல்ல.
வடமாகாண சபைக்கான தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது என்ற அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டமைக்கான பிரதான காரணம் சர்வதேச அழுத்தங்கள்தான். அதேவேளையில், செப்டம்பர் மாதத்தில் வடமாகாணத் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவித்தலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மணலாறில் வைத்து ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெளியிட்டார். ஜனாதிபதி வெளியிட்ட இந்த அறிவித்தலின் பின்னணியில் இந்தியாவே இருந்துள்ளது. அண்மைக்கால இந்திய - இலங்கை இராஜதந்திர உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தியா கொடுத்த அழுத்தங்களுக்குப் பணிந்து கொழும்பு ஒரு அறிவித்தலை வெளியிட்டது என்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டும்தான் இந்தியா தன்னிடமிருந்த துரும்புச் சீட்டை பயன்படுத்தியது.
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் எதிர்கொண்ட நெருக்கடியையே இந்தியா பயன்படுத்திக்கொண்டது. ஏப்ரல் இறுதிப் பகுதியில் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அமைச்சர்களின் நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராய்வதைத் தடுப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றியது. பொதுநலவாய அமைப்பின் செயலாளர்நாயகம் கமலேஷ் சர்மா ஒரு இந்தியராக இருந்தது டில்லியின் இந்தக் காய் நகர்த்தலுக்குப் பெரும் வசதியாக அமைந்திருந்தது. ஜெனீவாவில் இரு தடவைகள் (பிரேரணையின் வீரியத்தைக் குறைத்து) இலங்கையைப் பாதுகாத்தது போல இப்போது பொதுநலவாய உச்சி மாநாட்டு விவகாரத்திலும் இந்தியாவே இலங்கையைப் பாதுகாத்தது.
பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறுவதை உறுப்பு நாடுகளில் பல கடுமையாக எதிர்த்தன. குறிப்பாக கனடா இதில் முன்னணியில் இருந்தது. ராஜபக்ஷ அரசைப் பொறுத்தவரையில் உச்சி மாநாடு இடமாற்றம் செய்யப்படுவது சர்வதேச ரீதியாக இலங்கை ஓரங்கட்டப்படடுவிட்டது என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிடும். உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இலங்கையை இது பாதிக்கும். அதனால், என்ன விலையைக் கொடுத்தாவது உச்சி மாநாட்டை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்தது. இதன் மூலமாகத்தான் சர்வதேசத்தினால் தாம் முழுiயாக ஓரங்கட்டப்பட்டுவிடவில்லை என்பதை அரசாங்கத்தால் நிரூபிக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தில்தான் இலங்கையைப் பாதுகாக்க இந்தியா களத்தில் இறங்கியது. இதற்காக இந்தியா கேட்ட விலைதான் 'வடமாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும்' என்பது!
லண்டனில் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கினார். அதன்பின்னர் நிகழ்த்திய உரையின் போதுதான் செப்டம்பர் மாதத்தில் வடமாகாணத்துக்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இந்த அறிவித்தலை எதிர்பார்த்திருந்த இந்தியா, பொதுநலவாய மாநாட்டை நடத்துவதில் இலங்கை எதிர்கொண்டிருந்த நெருக்கடியிலிருந்து இலங்கையைப் பாதுகாத்தது. இதற்காக பெறுமதிவாய்ந்த பரிசு ஒன்றையும் ஜனாதிபதி ராஜபக்ஷவிடமிருந்து இந்தியா பெற்றுக்கொண்டது. பலமாதகாலமாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த சம்பூர் அனல் மின் நிலையத்தை இந்தியாவுக்கு இலங்கை வழங்கியது. இது தொடர்பில் இரண்டு உடன்படிக்கைகள் விரைவில் கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக, பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா கேட்ட விலைதான் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிவித்தல். இப்போது பிரச்சினையை இனவாத அமைப்புக்கள் கையில் எடுத்துள்ளன!
1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையின்படி மாகாண சபைகள் அமைக்கப்பட்ட பின்னர் வடக்கில் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். 1988 ஏப்ரல் 28 இல் நடைபெற்ற முதலாவது தேர்தலில் வடக்கு கிழக்கு இணைந்திருந்தது. இத்தேர்தலின்போது வரதராஜப் பெருமாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரானார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கில் இடம்பெறப்போகும் முதலாவது தேர்தல் என்பது மட்டும் இத்தேர்தல் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணமல்ல. எட்டு மாகாணங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் வடக்கில் மட்டும் அரசாங்கத்தைச் சாராதவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று!
வடமாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறுவதாக இருந்தால் ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் அது தொடர்பான அறிவித்தல் உத்தியோகபூர்வாக விடுக்கப்பட வேண்டும். வடமாகாண சபைக்கான தேர்தலுடன் இணைந்ததாக மற்றும் இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மற்றைய இரண்டு மாகாண சபைகளிலும் வெற்றி நிச்சயம் என்ற நிலைப்பாட்டில்தான் அரசாங்கம் களத்தில் இறங்குகின்றது. வடக்கில் கிடைக்கக்கூடிய தோல்வியை இந்த இரண்டு வெற்றிகளின் மூலமாகவும் மூடிமறைத்துவிடலாம் என அரசாங்கம் கருதலாம்.
வடமாகாணத்தில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்தே அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சரும் ஈ.பி.டி.யின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா போட்டியிடலாம் எனத் தெரிகின்றது. விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகர்கள் சிலரைக் களமிறக்குவதும் அரசாங்கத்தின் உபாயமாக இருக்கும். இதில் குறிப்பிடத்தக்கவர் விடுதலைப் புலிளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ட்டர். கே.பி. தொடர்பாகவும் சில பத்திரிகைகள் தகவல்களை வெளியிடுகின்ற போதிலும் அவர் களமிறங்கமாட்டார் எனத் தெரிகின்றது. முன்னாள் புலிகளை களமிறக்குவது வாக்குகளைப் பெற்றுத்தரும் என அரசாங்கம் கருதுவதுபோலத் தெரிகின்றது. அரசாங்கத்தின் இந்த எதிர்பார்ப்பு எந்தளவுக்கு நிதர்சனமாகும் என்பது தெரியவில்லை.
பிரதான தமிழ்க் கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இன்னும் இறுதியாகவில்லை. கூட்டமைப்பைப் பதிவதாவதா இல்லையா என்பதில் உருவாகியிருக்கும் இழுபறி அடுத்த கட்ட நிலைமைகள் தொடர்பில் அவர்களைச் சிந்திக்கவிடவில்லை. இருந்த போதிலும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலரது பெயர்கள் பேசப்படுகின்றது. ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை. தமிழரசுக் கட்சியைவிட ஏனைய நான்கு பங்காளிக் கட்சிகளும் இது தொடர்பில் இதுவரையில் ஆலோசிக்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சார்பில் சுயேட்சைக்குழு ஒன்றைக் களமிறக்கினால் அதற்கு ஆதரவிக்கத் தயாராகவிருப்பதாகக் கூறியிருக்கின்றது. கூட்டமைப்பு சுயேச்சையாக களம் இறங்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலர் முதலமைச்சர் கனவில் இருப்பதால் சுயேச்சைக்குழு ஒன்றை களமிறக்க அவர்கள் விரும்பமாட்டார்கள். இந்த நிலையில் தேர்தல் ஒன்றைச் சந்திப்பதற்கான தயார் நிலையில் தமிழ்க் கட்சிகள் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

- சபரி
No comments:
Post a Comment