இலங்கையில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பொறுத்தவரையில் வடபகுதிதான் இப்போது மிகவும் சூடான இடமாகவுள்ளது. வட மாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நிலையில், கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கட்டியெழுப்பவேண்டிய ஊடகங்கள் அதிகளவு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. அல்லது அவை இலக்கு வைக்கப்படுகின்றன. ஊடகத்துறையினருக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் அல்லது அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எதுவும் அமைந்திருக்கவில்லை. இதனால், ஊடகத்துறையினர் சுயதணிக்கையைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அல்லது தொடர்ந்தும் அச்சத்துடன் பணிபுரிய வேண்டியவர்களாகவுள்ளனர். உயிர்த்துடிப்புடன் செயற்பட வேண்டிய ஊடகத்துறையை இந்த நிலைமை பெருமளவுக்கு மழுங்கடிப்பதாக அமைந்திருக்கின்றது.
புத்தாண்டு பிறப்பதற்கு முதல்நாள் அதாவது ஏப்ரல் 12 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் அச்சகப் பகுதிக்குள் நுளைந்த ஆயுதபாணிகள் அச்சு இயந்திரத்தையும், அச்சடிக்கப்பட்டிருந்த பத்திரிகைகளையும் தீவைத்து எரித்துள்ளார்கள். இச்சம்பவம் இடம்பெறுவதற்கு சரியாக ஒன்பது நாட்களுக்கு முன்னர் அதாவது ஏப்ரல் 3 ஆம் திகதிதான் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது. இதில் பல ஊழியர்கள் காயமடைந்தனர்.
உதயன் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ள அதேவேளையில், உதயன் பத்திரிகையாளர்களும் அச்சுறுத்தலுக்கும் விசாரணைக்கும் உள்ளாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மார்ச் 30 ஆம் திகதி உதயன் பத்திரிகையாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். ஜனவரி நடுப்பகுதியில் உதயன் ஆசிரியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். மார்ச் 8 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார். யாழ்ப்பாணம் தினக்குரல் பத்திரிகையின் விநியோகஸ்த்தர் ஒருவர் பெப்ரவரி 7 ஆம் திகதி வடமராட்சிப் பகுதியில் வைத்துத் தாக்கப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளும், அவர் கொண்டு சென்றிந்த பத்திரிகைகளும் எரிக்கப்பட்டன. இவை அனைத்தும் இவ்வருடத்தில் முதல் நான்கு மாத காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள். அதாவது, ஊடகங்களுக்கு எதிராக வன்முறை பிரயோகிக்கப்பட்ட நிகழ்வுகள்.
இதனைவிட பி.பி.சி.யின் தமிழோசை நிகழ்ச்சியில் இடையூறு செய்யப்பட்டதையடுத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக மேற்கொண்ட அஞ்சலை மார்ச் 26 ஆம் திகதி முதல் பி.பி.சி. நிறுத்திக்கொண்டது. நிகழ்வுகளில் இடையூறு செய்வது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறும் ஒரு செயற்பாடு என்பதை பி.பி.சி. சுட்டிக்காட்டிய பின்னரும் இந்த இடையூறு தொடர்ந்ததாலேயே உடன்படிக்கையை தாம் முறித்துக்கொண்டதாக பி.பி.சி. நிறுவனம் இது தொடர்பில் தெரிவித்திருந்தது. விமர்சனங்களையும் கருத்துக்களையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாக அரசாங்க உயர் மட்டத்தினர் காணப்படுகின்றார்கள் என்பதையே பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சிகள் குழப்பப்பட்டமை உணர்த்துகின்றது. தகவல்களை அறிந்துகொள்வதற்கான சுதந்திரத்தை மீறும் ஒரு செயற்பாடாகவும் இதனைக்கருத வேண்டும். அதேவேளையில் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ள பி.பி.சி. போன்ற ஒரு சேவையைத் தடுப்பதன் மூலம் வெறும் வதந்திகளை நம்பவேண்டிய நிர்ப்பந்தம் மக்களுக்கு ஏற்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
வடபகுதியைப் பொறுத்தவரையில் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதி மயில்வாகனம் நிமலராஜன் என்ற ஊடகவியலாளர் கொல்லப்பட்ட பின்னர் இன்றுவரை பல ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். பல ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் பலர் தமது பாதுகாப்பைக் கருதி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கின்றார்கள். இத்தனைக்கு மத்தியிலும் வடபகுதி ஊடகங்கள் துணிச்சலுடன் செயற்பட்டு பல விடயங்களை வெளிக்கொண்டுவருவது பாராட்டப்படவேண்டியது.
கிழக்கு மாகாணத்தில் சுமூகமான ஒரு நிலை காணப்படுவதாக சிலர் கருதலாம். ஆனால், அங்குள்ள நிலைமையும் ஆரோக்கியமாக இல்லை. ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் கொல்லப்பட்ட பின்னர், ஊடகவியலாளர்கள் பலர் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறியிருக்கின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த 10 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்காரணமாக இலங்கையைவிட்டுச் சென்றிருக்கின்றார்கள். இதனைவிட வேறும் சில ஊடகவியலாளர்கள் அச்சம் காரணமாக தமது ஊடகத்துறைப் பணியை நிறுத்திக்கொண்டும் உள்ளார்கள்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் ஊடகத்துறைக்கு எதிரான இடம்பெற்ற தாக்குதல்கள் பல்வேறு காரணங்களைக் கூறி நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையிலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்வது ஆபத்தான ஒரு நிலைமையையே வெளிப்படுத்துகின்றது. மாற்றுக்கருத்துக்களையும், விமர்சனங்களையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாக ஒரு தரப்பினர் உள்ளார்கள் என்பதை இது புலப்படுத்துகின்றது. இந்த நிலையில் சுயதணிக்கைக்கு ஊடகங்கள் தள்ளப்படுகின்றன. சுயதணிக்கை என்பது ஆபத்தான ஒரு விடயம். சுயதணிக்கைக்கு பழக்கப்பட்டவர்கள் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கப்போவதில்லை. அதிகாரத்திலுள்ளவர்களை சமாளித்துப்போகப் பழகிக்கொள்கின்றார்கள். அதனால்தான் சுயதணிக்கை என்பது ஒடு எல்லைக்கு மேல் செல்லும் போது ஆபத்தானதாகிவிடுகின்றது.
ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. இலங்கையிலேயே வடபகுதிதான் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாகவுள்ளது என்பதை அண்மையில் வெளிவரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
வடபகுதியில் அண்மைக்காலத்தில் முன்னெடுக்கப்படும் ஊடகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் வடமாகாண சபைத் தேர்தலை இலக்காகக்கொண்டவையாக இருக்கலாம். வடக்கில் ஊடகத்துறையின் சுதந்திரமான செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் நியாயமானதும் சுயாதீனமானதுமான தேர்தல் ஒன்றை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதுதான் இன்று எழும் பிரதான கேள்வி!
ஊடகத்துறையின் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்கள் வடபகுதி நிலை தொடர்பாக அதிகளவு கவனத்தைச் செலுத்த வேண்டிய ஒரு தேவை உள்ளது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இன்று ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடபகுதியில் ஊடகங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை வகுத்துக்கொண்டு அவ்வமைப்புக்கள் செயற்பட வேண்டிய தேவை உள்ளது என்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.

No comments:
Post a Comment