இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பது 'சவுத் புளொக்'தான். பிரதமரின் அலுவலகம் மட்டுமன்றி பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சு அலுவலகமும் அதற்குள்தான் அமைந்திருக்கின்றன. இந்த சவுத்புளொக்கை ஆக்கிரமித்து இந்திய வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துபவர்கள் மலையாளிகள். அவ்வாறு இந்தியக் கொள்கை வகுப்பில் தற்போது முக்கியமான ஒரு நபராக இருக்கும் ஒரு மலையாளியைப் பற்றித்தான் இந்த வாரம் பார்க்கப்போகின்றோம். அவர்தான் சிவ்சங்கர் மேனன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தியாவுக்கான விஜயத்தை கடந்த வாரத்தில் மேற்கொண்டிருந்த நிலையில் சிவ்சங்கர் மேனனின் பெயர் செய்திகளில் அதிகளவுக்கு இடம்பெற்றிருந்தமையைக் காணமுடிந்தது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளை இலங்கை அரசு தீவிரமாக முன்னெடுத்துவரும் நிலையில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்ட மேனன்அந்த முயற்சிகள் கைவிடப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து புதுடில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளின் போதும் மேனன்னின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மேனனை இரண்டு தடவை சந்தித்துப் பேசியுள்ளார்கள். இன்று இலங்கை தொடர்பாக இந்தியா எடுக்கப்போகும் தீர்மானத்தைபபொறுத்தவரையில் சிவ்சங்கர் மேனனின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், மேனின் இராஜதந்திரப் பணிகள் தொடர்பில் இந்த வாரம் சுருக்கமாகப் பார்ப்போம்:
இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் இப்போது பணியாற்றினாலும், அடிப்படையில் அவர் ஒரு இராஜதந்திரி! கேரளவில் பாலக்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட மேனனின் குடும்பமே இராஜதந்திரிகள்தான். அவரது தந்தை நாராயண மேனன் இரு சிறந்த இராஜதந்திரி எனப் பெயர் பெற்றவர். அவரது பாட்டனார் கே.பி.எஸ்.மேனன்தான் இந்தியாவின் முதலாவது வெளிவிவகாரச் செயலாளர். நேருவுடன் பணியாற்றியவர். மேனனின் மாமனாரும் ஒரு இராஜதந்திரி.
1972 ஆம் ஆண்டில் 23 ஆவது வயதில் இந்திய வெளியுறவுச் சேவைக்குள் பிரவேசித்த மேனன், தன்னுடைய 41 வருடகால அனுபவத்தில் மிகப்பெரிய சவாலாக இன்று இலங்கைப் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கின்றார். இலங்கையில் உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியதன் மூலம் இலங்கைப் பிரச்சினையில் ஆழமான அறிவைக்கொண்டுள்ள மேனன், அதன் பின்னர் இந்திய வெளிவிவகாரச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும் இலங்கைப் பிரச்சினையை பிரதானமாகக் கையாண்டவர்.
இப்போது இலங்கை தொடர்பில் இந்தியா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி பலமாக எழுந்துள்ள நிலையில் அனைவருடைய கவனமும் மேனனின் பக்கமே திரும்பியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது: இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் வெளிவிவகாரக் கொள்கையை வகுத்துக்கொள்வதில் அரசியல்வாதிகளைவிட அதிகாரிகளுடைய பங்கே முக்கியமானதாக - செவ்வாக்கைச் செலுத்துவதாக இருக்கின்றது. அந்த வகையில் வெளிவிவகாரச் சேவையில் அனுபவத்தையும் கொண்டுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இந்த விடயத்தில் முக்கிய பங்காற்றக் கூடியவர்.
இரண்டாவதாக: தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடியைக் கையாள்வதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் கொழும்புக்கான விஜயம் ஒன்றை அவர் மேற்கொள்ளவிருக்கின்றார். இந்த விஜயம் முக்கியமானதாகக் கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகள் - குறிப்பாக 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான செயற்பாடுகள் டில்லிக்கு பெரும் சங்கடத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. இந்தத் திருத்தம் இலங்கை - இந்திய உடன்படிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட ஒன்று என்பதால் ஒரு தலைப்பட்சமாக அதனை நீர்த்துப்போகச் செய்வதற்காக எடுக்கப்படும் செயற்பாடுகள் இந்தியாவை அமானப்படுத்துவதாகவே இருக்கும். இதனைவிட '13 பிளஸ்' என டில்லிக்கு இலங்கைத் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறுவதாகவும் இவை அமைந்திருக்கின்றன.
இவை அனைத்துக்கும் மேலாக இந்தியாவின் மேலாதிக்க நிலைக்குச் சவால்விடும் சீனாவை கொழும்பு அரவணைத்துச் செல்வதும், அந்த நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருப்பதாக வந்திருக்கும் செய்திகளும் டில்லிக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இலங்கைக்குள் சீனா அதிகளவுக்குத் தலையைப் போடுவது தமக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது. இவை தொடர்பில் டில்லியின் கரிசனையைக் கணக்கில் எடுக்க கொழும்பு தயாராகவில்லை. இந்த நிலைமைகள் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸைப் பாதிக்கும்.
இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு பார்க்கும் போது இலங்கை விவகாரத்தில் இந்தியா தன்னுடைய மென்போக்கான அணுகுமுறையை மாற்றிக்கொள்ளலாம் என இராஜதந்திர வட்டாரங்களில் கருதப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இந்தக் கருத்தைத்தான் வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்தியா கையாளப்போகும் எந்த அணுகுமுறையானாலும் அதில் மேனனின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். நாம் முன்னர் குறிப்பிட்டது போல தனது 41 வருடகால இராஜதந்திர அனுபவத்தில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய இராஜதந்திர சவாலை எதிர்கொள்ள மேனனிடம் உள்ள உபாயம்தான் என்ன?

- தவசி
நல்ல அரசியல் அலசல்.... ஆனால் மலையாளி, தமிழன், என பிரித்து பேசும் போக்கு கவலைக்குரியது...
ReplyDelete