1983 ஜூலைக் கலவரத்துக்கு பிந்திய இலங்கை இந்திய அரசியல் நகர்வுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவின் கொழும்பு வருகைக்கு அடுத்தாக 83 ஆகஸ்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத்தின் புதுடில்லி விஜயம் முக்கியமானதாக அமைந்திருந்தது. புதுல்லியில் இடம்பெற்ற தெற்காசிய வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி சென்ற அமைச்சர் ஹமீத், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை நிலை தொடர்பாக இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்த விஜயத்தின் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் காணப்பட்ட இறுக்கம் தணிந்து இலங்கையின் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக இந்தியாவின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஹமீத்தின் விஜயத்தையடுத்து, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் பேச்சுக்ளில் இந்திய ஆதரவுடன் இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகள் தொடர்பில் மேலும் விரிவாக ஆராயப்பட்டது. தீர்வு முயற்சிகளுக்கு தமது அனுசரணையை வழங்குவதற்கு இந்தியா தெரிவித்த விருப்பத்தை இதன்போது ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பான விரிவான பேச்சுக்களை நடத்துவதற்காக தன்னுடைய விஷேட தூதுவராக தனது சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனவை அனுப்பிவைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தமையை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன ஒரு கீர்த்திமிக்க சட்டத்தரணியாகவும், ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய ஒரு ஆலோசகராகவும் இருந்தார். இந்தியாவுடனான உறவுகளில் உருவாகிவரும் நெருக்கடிகளை உணர்ந்துகொண்ட ஜனாதிபதி தனக்கு நம்பிக்கைக்குரியவராகவும், இராஜதந்திர விவகாரங்களைச் சிறப்பாகக் கையாளக்கூடியவராகவுமுள்ள ஒருவரையே இந்தியாவுக்கு தனது விஷேட பிரதிநிதியாக அனுப்பிவைக்கத் தீர்மானித்தார். அந்தத் தீர்மானத்தின்படியே தனது சகோதரரை அனுப்பவதற்கு அவர் முன்வந்தார்.
இதனையடுத்து ஒரு சில தினங்களிலேயே புதுடில்லிக்குப் பயணமான எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன இந்தியப் பிரதமருடன் விரிவான பேச்சுக்களை நட்த்தினார். இந்தப் பேச்சுக்கள் பெருமளவுக்கு சுமூகமானதாகவே இடம்பெற்றது. இந்தப்பேச்சுக்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இந்திரா காந்தி, ‘இலங்கையின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஒற்றுமை என்பவற்றுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இந்தப் பேச்சுக்களை நான் பயன்படுத்திக்கொண்டேன். மற்றைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடாது. இருந்தபோதிலும், இந்த இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான, குறிப்பாக தமிழர்களுக்கும் எமக்கும் இடையிலான சரித்திர, கலாசார மற்றும் நெருக்கமான உறவுகள் காரணமாக அங்கு இடம்பெறும் நிகழ்வுகளால் நாம் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இலங்கை விடயத்தில் தலையிடுவதை இந்திரா காந்தி இவ்வாறு தெளிவாக இராஜதந்திரமாக நியாயப்படுத்தினார். இதற்கு எதிராக எந்தவிதமான நகர்வுகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஜெயவர்த்தனவக்கு ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்திரா காந்தி, இந்தியக் கொள்கைத் திட்டமிடல் குழுவின் தலைவரான கோபாலசாமி பார்த்தசாரதியை தன்னுடைய விஷேட தூதுவராக கொழும்புக்கு அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அநுசரணையை அவர் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜெயவர்த்தனவைச் சந்திப்பதற்கு கொழும்பு புறப்படுவதற்கு முன்னதாக புதுடில்லியில் இந்திய வெளிவகார அமைச்சு அதிகாரிகள் மற்றும் பிரதமர் இந்திரா காந்தியுடன் விரிவான பேச்சுக்களை நடத்திய பார்த்தசாரதி, அதனையடுத்து சென்னைக்குச் சென்றார். சென்னையில் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் அப்போது சென்னையில் தங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இனநெருக்கடிக்கு எவ்வாறான தீர்வைக் காணவேண்டும் என்பது தொடர்பில் இவர்கள் தமது கருத்துக்களை பார்த்தசாரதியிடம் தெரிவித்தார்கள்.
தமிழர் தரப்பினரதும் இந்தியத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்ட பார்த்தசாரதி, ஆகஸ்ட் 25,(1983) ஆம் திகதி கொழும்பு வந்து ஜனாதிபதி ஜெயவர்த்தனவைச் சந்தித்தார். தமிழர் தரப்புக்கு அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடைமுறைப்படுத்த தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஜெயவர்த்தனவின் இந்தக் கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
1981 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டு வெற்றியளிக்காமல் செயலிழந்துபோன பழைய திட்டத்தையே ஜெயவர்த்தன மீண்டும் எடுத்துவிட்டது தமிழர் தரப்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனவை வழிக்கக் கொண்டுவர அதிகளவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியா கருதியது. …அதேவேளையில் தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அலை வேகமாக வீசத் தொடாங்கியது. ..

No comments:
Post a Comment