வடக்கு - கிழக்கு இணைப்பு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதில் எந்தவிதமான இரகசியமும் இருக்கவில்லை. இணைப்பைக் கைவிட இந்தியா இணங்காது என்ற ஒரு எண்ணப்பாட்டை சில தமிழ்க் கட்சிகள்தான் கட்டிவளர்த்திருந்தன. இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட உடன்படிக்கையில் உள்ள ஒரு அம்சம்தான் "இணைப்பு" என்பதால், அதனை நீக்கினால் இந்தியா சீற்றமடையும் என்ற நம்பிக்கை தமிழகளுக்கும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. டில்லி மீது அதீத நம்பிக்கை வைத்து அரசியலை நடத்தும் நடைமுறையின் ஒரு பகுதிதான் இது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான கடந்த வாரச் சந்திப்பின்போது, இணைப்பை வலியுறுத்திக்கொண்டிருப்பதைவிட, கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற கருத்துப்பட இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அறிவுரை கூறியிருக்கின்றார். இணைப்பு விடயத்தில் டில்லியின் அணுகுமுறை என்ன என்பதை இது வெளிப்படுத்தியிருக்கின்றது.
ஜெய்சங்கரின் இந்தச் செய்தி பல விடயங்களைத் தமிழர்களுக்கு உணர்த்தியிருக்கின்றது. எமது நியாயமான அபிலாஷைகளுக்குப் பின்னால் இந்தியா நிற்கும், அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் என்பது வீணான ஒரு நம்பிக்கை என்பது அதில் முக்கியமானது. வடக்கு - கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்ற தேவை இந்தியாவுக்கு இல்லை என்பது இரண்டாவது. தமிழர்களின் அபிலாஷைகளுக்காகக் குரல்கொடுக்கப்போய் சிங்களத் தரப்பின் சீற்றத்துக்குள்ளாகிவிடக் கூடாது என்பது அடுத்தது. இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தைச் சமப்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு, கொழும்பின் நல்லெண்ணம் அவசியம் என்பதை இந்தியா உணர்கின்றது. 'இணைப்பு' அவசியம் என்பதை வலியுறுத்தப்போய் கொழும்பின் நல்லெண்ணத்தைக் கோட்டைவிட்டுவிட இந்தியா இப்போதைக்குத் தயாராகவில்லை.
அதனால்தான் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற சுரேஷ் பிரேமச்சந்திரனின் கோரிக்கைக்கு ஆறுதலிளிக்கக்கூடிய பதில் எதனையும் ஜெய்சங்கரால் கொடுக்க முடியவில்லை. "இணைப்பு என்பதில் தொங்கிக்கொண்டிருக்காமல் ஏதோ ஒரு சமரசத்துக்குச் செல்லுங்கள், இன்றைய காலகட்டத்தில் அதுதான் புத்திசாலித்தனமானது" என வலியுறுத்துவதாகவே அவரது பதில் அமைந்திருந்தது. பிரேமச்சந்திரன் இது குறித்துக் கேள்வியை எழுப்பியிருந்தாலும், கூட்டமைப்புத் தலைமையின் அணுகுமுறை கிட்டத்தட்ட ஜெய்சங்கரின் நிலைப்பாட்டை ஒத்ததாகவே இருந்தது. இருக்கின்றது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் கூட்டங்களில் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரா.சம்பந்தனோ, எம்.ஏ.சுமந்திரனோ இணைப்பை வலியுறுத்தியதாக எந்தவொரு பதிவும் இல்லை. ஆக, அவர்களும் கொழும்புக்கு நோகாமல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்வதில்தான் அவதானமாக இருக்கின்றார்கள்.
இணைப்பு என்பது தமிழர்களின் நலன்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் நலன்களுக்கு அது "இப்போது" அசியமற்றது. நாடுகளின் நலன்கள் காலத்துக்குக் காலம் மாறுபடக்கூடியது. 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்கையின் மூலம்தான் வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டது. அதுவும் ஒரு தற்காலிகமான இணைப்புத்தான். ஒரு வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்புத்தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பது உடன்படிக்கையின் முக்கிய அம்சம். அப்போது தற்காலிக இணைப்பு நிரந்தரமானதாக்கப்பட வேண்டும் என்பதை தமிழ் அமைப்புக்கள் இந்தியாவிடம் வலியுறுத்தின. இந்தியா அதற்குக் கொடுத்த பதில் முக்கியமானது. அவ்வாறிருந்தாலும், சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறாமல் நாம் பார்ததுக்கொள்வோம் என்பதுதான் டில்லியின் உறுதிமொழி. ஆனால், சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலே இணைப்பு நீக்கப்பட்டபோது இந்தியாவினால் எதுவும் செய்ய முடியவில்லை.
1980 களின் பிற்பகுதியில் ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பயன்படுத்தி இலங்கையைப் பணிய வைக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. அதனை இந்தியா திட்டமிட்டுச் செய்தது. அதன் பலன்தான் 87 ஜூலை உடன்படிக்கை. அதில்கூட இணைப்பை நிரந்தரமாக்க டில்லியால் முடியவில்லை. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை இணங்கச் செய்வதற்காகவே "ஒரு வருடத்தில் சர்வஜன வாக்கெடுப்பு" என்ற சரத்து சேர்க்கப்பட்டது. அவ்வாறு வாக்கெடுப்பு நடைபெறாது என போராளி அமைப்புக்களுக்கு இரகசியமாக வாக்களிக்கப்பட்டது. இலங்கையில் தன்னுடைய நலன்களைப் பேணிக்கொள்வதற்காக அவ்வாறு செயற்பட வேண்டிய தேவை இந்தியாவுக்கு அப்போது இருந்தது. இணைப்பு விடயத்தில் உறுதியான ஒரு நிலைப்பாட்டில் அப்போது கூட இந்தியா இருக்கவில்லை. இரு தரப்பையும் சமாளிக்கும் வகையிலேயே டில்லியின் அணுகுமுறை இருந்தது.
இந்த நிலையில், இப்போது இணைப்பை இந்தியா வலியுறுத்தும் என எவ்வாறு நம்பமுடியும்? இதற்கும் மேலாக தன்னுடைய பிராந்திய நலன்களை முன்னிலைப்படுத்தியதாகவே தமது வெளியுறுவுக்கொள்கையை இந்தியா வகுத்துக்கொள்ளும். இலங்கை தொடர்பான டில்லியின் வெளியுறுவுக்கொள்கையை வகுத்துக்கொள்வதில் சீனா முக்கிய இடத்தைப் பெறுகின்றது. தென்பகுதியில், சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவருவது இரகசியமான ஒன்றல்ல. வடக்கு கிழக்கில் சீனா செல்வாக்குச் செலுத்தக்கூடாது என்பதுதான் இப்போது இந்தியாவின் கரிசனை. அதனால்தான் சீனன்குடா, சம்பூர், வடக்கில் பலாலி விமான நிலைய புனரமைப்பு என பல திட்டங்களை தன்னுடைய கைகளில் இந்தியா எடுக்கின்றது. இவற்றில் கால்பதிக்கும் நிலையில் இணைப்பு குறித்தும் குரல்கொடுக்க முற்பட்டால் தென்னிலங்கையில் அதன் பிரதிபலிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்பதை மதிப்பிடுவது இந்தியாவுக்கு கடினமானதல்ல. தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் குறித்துப் பேசுவதை விட அவற்றையிட்டுப் பேசாமலிருப்பதுதான் இந்தியாவின் நலன்களுக்கு இன்று தேவையானது. அதனைத்தான் இந்தியா செய்கின்றது.
புதுடில்லியின் இந்த அணுகுமுறையைப் புரிந்துகொள்ளாமல், வெறுமனே இந்தியா வரும் பெற்றுத் தரும் என நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை. அவ்வாறான நம்பிக்கையை மக்களுக்குக் கொடுப்பதையும் தமிழ்க் கட்சிகள் தவிர்க்க வேண்டும். பதிலாக இந்த நம்பிக்கை அரசியலைக் கைவிட்டுவிட்டு, தம்மால் என்ன செய்ய முடியும் என்பதையிட்டுப் பார்ப்பதுதான் பொருத்தமானது. குறிப்பாக இது தொடர்பில் முஸ்லிம் தலைமைகளுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும். இரு இன மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வின் மூலமாகத்தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக்கொண்டுவரமுடியும். கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் இந்தப் புரிந்துணர்வைப் பெருமளவுக்குக் காணமுடிகின்றது. இதனை மேலும் வரிவுபடுத்த வேண்டும். முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இதற்கான ஒரு தீர்வைக்காண்பதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதுதான் இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்!
(26-01-2017 தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்)

No comments:
Post a Comment