காணமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கு பாராளுமன்றம் அங்கீகாரமளித்திருக்கின்றது. இது குறித்த சட்டமூலத்தை சட்டமாக அங்கீகரித்து சபாநாயகர் கரு ஜயசூரியவும் கையொப்பமிட்டுள்ளார். இதன்மூலம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. சர்வதேசத்தின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகச் செய்யப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இதனைப் பார்க்க முடியும். மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி உட்பட இனவாதக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதில் நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதும் வெளிப்படையாகவே தெரிகின்றது. எதிர்ப்புக்கள் கடுமையாகவிருந்த பின்னணியில்தான் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்களைச் செய்வதற்கும் தயாராகவிருப்பதாக அரசாங்கம் அறிவித்தது.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைத்துக்கொள்வது என்பது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உத்தரவாதமளளிக்கப்பட்டிருந்தது. இலங்கையும் இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தமை கவனிக்கத்தக்கது. தீர்மானத்தின் நான்காவது பிரிவில் இது குறித்து திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான அலுவலகம் ஒன்றை அமைத்துக்கொள்வதில் தென்பகுதியிலிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்களைக் கவனத்திற்கொண்டு காலத்தைக் கடத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வந்துள்ளது. இருந்தபோதிலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 12 நாடுகளினால் வெளிப்படுத்தப்பட்ட கடுமையான அழுத்தம் காரணமாகவே இப்போது குறித்த சட்டமூலம் அவசரமாகக்கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டதாக பொது எதிரணியின் முக்கிய பிரமுகராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். "இந்த காணாமல்போனோர் அலுவலகத்தின் பின்னணியில் பாரிய அபாயம் மறைந்திருக்கின்றது" என சிங்கள மக்களை உசுப்பேத்துவதற்கும் பேராசிரியர் முற்பட்டிருக்கின்றார்.
அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான ஆயுதங்களில் ஒன்றாக காணாமல்போனோர் அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது எதிரணி திட்டம் வகுத்துச் செயற்பட முனைந்திருப்பதை பேராசிரியர் பீரிஸின் இந்த அறிவிப்பு புலப்படுத்துகின்றது. பொது எதிரணியைப் பொறுத்தவரையில் சிங்கள - பௌத்த தேசியவாதமே அதன் அச்சாணியாக உள்ளது. அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான பிரதான ஆயுதமாக அதனைத்தான் பொது எதிரணி பயன்படுத்துகின்றது. இதனைவிட அவர்களிடம் வேறு கொள்கைகள் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்தநிலையில் இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் விடயம்தான் 'காணாமல்போனோர் அலுவலகம்'! இந்த விடயத்தை தாம் கையில் எடுப்பதை நியாயப்படுத்தும் வகையில் கொள்கை ரீதியான ஒரு விளக்கத்தைக் கொடுப்பதற்கு பேராசிரியர் பீரிஸ் முற்பட்டிருக்கின்றார். "இதனை வெறுமனே இனவாதக் கண்ணோட்டத்துடன் நாம் பார்க்கவில்லை. இதில் உண்மையிலேயே பல ஆபத்துக்கள் மறைந்திருக்கின்றன" எனக் காட்டிக்கொள்வதற்கு பேராசிரியர் முற்பட்டிருப்பது தெரிகின்றது.
காணமல்போனோர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகளவான அதிகாரங்கள்தான் முதலாவது ஆபத்து என்பது பேராசிரியரின் கருத்து. அதாவது, "இராணுவம் முகாம்கள் உட்பட எந்தவொரு இடத்துக்கும் எந்த வேளையிலும் செல்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதனைவிட வெளிநாட்டு அதிகாரிகளை வரவழைப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் முடியும். உயர் நீதிமன்றத்தினால் கூட தகவலைப் பெற்றுக்கொள்வதற்கு உரிமை இல்லாத முற்றிலும் இரகசியமாக இயங்கக்கூடிய வகையில் இது அமைக்கப்படுகின்றது. நாட்டின் நிறுவன ரீதியான கட்டமைப்புக்கு முற்றிலும் புறம்பான வகையில் செயற்படக்கூடிய தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை இது கொண்டிருக்கின்றது. அலுவலகம் சர்வதேச ரீதியாகவும் போதிய அதிகாரத்தைக் கொண்டுள்ளது. எந்தவொரு நாட்டுடனும் உடன்படிக்கை ஒன்றுக்குள் அலுவலகம் செல்ல முடியும். அலுவலகத்தின் அதிகாரங்களை மறைமுகமாக வெளிநாட்டு அதிகாரிகள் பயன்படுத்த முடியும்" என தன்னுடைய அச்சத்தை பேராசிரியர் பீரிஸ் வெளிப்படுத்துகின்றார்.
போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை எதற்கும் இடமில்லை எனவும், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த மாதத்தில்தான் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்கள். சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்படும் பிரச்சாரஙங்களை முறியடிக்கும் நோக்கத்துடனேயே இந்த அறிவித்தல் அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது தமது பிரச்சாரங்களை முன்னெடுப்பத்கான புதிய களம் ஒன்றை ராஜபக்ஷ அணியினருக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. இது அரசாங்கம் எதிர்பார்க்காத ஒன்று அல்ல. சர்வதேச நிர்ப்பந்தங்கள் இந்த சட்டமூலத்தைக் கொண்டுவர வேண்டிய தேவையை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியது எனலாம். அதேவேளையில், சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு செயற்படப்போவதில்லை எனவும், இராணுவத்தைக் காட்டிக்கொடுக்கப்போவதில்லை எனவும் அரசாங்கம் தொடர்ந்தும் தெரிவித்துவருகின்றது. ராஜபக்ஷ அணியினரின் பிரச்சாரங்களை முறியடிப்பதற்காக இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
நாட்டின் பிரதான கட்சிகள் முன்னெடுக்கும் இந்தப் பிரச்சாரங்களின் மத்தியில் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன. போர் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டது. இவ்வளவு காலங்களின் பின்னரும், காணாமல்போனவர்கள் பற்றிய உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை. குறைந்தபட்சம் காணாமல்போனவர்கள் அல்லது காணாமல்போகச்செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையைக் கூட துல்லியமாகச் சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை. எழுந்தமானமாக ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொருவிதமான புள்ளிவிபரங்களையே வெளியிடுகின்றார்கள். காணாமல்போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகள் எங்கேயுள்ளார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுடன் வாழ்கின்றார்கள். இந்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதனைவிட காணாமல்போனவர்களின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் சட்த்தின் முன்பாக நிறுத்தப்படுவதும் அவசியம். இது ஒரு மனிதாபிமான செயற்பாடு. உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படுவதில் என்னதான் அபாயம் மறைந்திருக்க முடியும்?
பேராசிரியர் பீரிஸ் போன்ற சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற புத்திஜீவிகள் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதற்காகவும், நீதி நிலைநாட்டப்படுவதற்காகவும் குரல்கொடுப்பதைவிட்டுவிட்டு, குறுகிய இனவாத நோக்குடன் அடுத்த தேர்தலை இலக்குவைத்துச் செயற்படுவதுதான் மிகவும் ஆபத்தானது. காணாமல்போனோர் செயலகத்தில் அபாயம் எதுவும் மறைந்திருக்கவில்லை. பேராசிரியர் பீரிஸ் போன்றவர்களின் இவ்வாறான இனவாத செயற்பாடுகளில்தான் செயற்பாடுகளில்தான் அபாயம் ஒளித்திருக்கின்றது என்பது எமது கருத்து!
ஞாயிறு தினக்குரல்: 2016/08/28