வெளிநாட்டு இராஜதந்திரிகளின் இலங்கைக்கான விஜயங்கள் அண்மைக் காலங்களில் அடிக்கடி இடம்பெறுகின்ற போதிலும், அவை செய்திகளில் பெறும் முக்கியத்துவத்துக்கு மேல், அரசியலில் தாக்கம் எதனையும் ஏற்படுத்துவதில்லை. இந்த விஜயங்களின் போது இடம்பெறும் சந்திப்புக்களும், அதன்போது பரிமாறப்படும் கருத்துக்களும்தான் பல செய்திகளை அல்லது உண்மைகளை எனக்கு வெளிப்படுத்துகின்றன. தற்போது இலங்கை வந்து சென்றுள்ள அமெரிக்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வாளின் விஜயத்தையும் அவடவாறானதாகவே நோக்க வேண்டியுள்ளது. அவரது விஜயம் அரசியல் ரீதியில் ஒரு திருப்பத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தக்கூடிய இயலுமையை கொண்டிருக்காத போதிலும், அவரது சந்திப்புக்களின் பின்னர் வெளிவரும் தகவல்கள்தான் பல உண்மைகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
போர்க் குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பு, நல்லிணக்க முயற்சிகள், அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் போன்ற விடயங்களில் அமெரிக்கா எவ்வாறான அணுகுமுறையை வெளிப்படுத்தும் என்பது தொடர்பாகவே நிஷாவின் விஜயத்தின் போது முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டது. இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது. போர்க் குற்ற விசாரணைகளில் கலப்புப் பொறிமுறை ஒன்று தொடர்பானதாகவே இந்தப் பிரேரணை அமைந்திருந்தது. அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணைக்கு ஆச்சரியப்படத்தக்க வகையில், இலங்கையும் அநுசரணை வழங்கியது. மேற்கு நாடுகளுடனான தமது நெருக்கமான உறவுகளை வெளிப்படுத்தும் வகையிலான ஒரு இராஜதந்திர நகர்வாகவே இலங்கையின் இந்தச் செயற்பாடு அமைந்திருந்தது.
ஜெனீவாவில் பிரேரணைக்கு ஆதரவாக பச்சைக்கொடி காட்டிய இலங்கை அரசாங்கம் கொழும்பில் அவ்வாறு செயற்பட முடியவில்லை. சிங்களக் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே கொழும்பின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. ஜனாதிபதியும், பிரதமரும் போர்க் குற்ற விசாரணையில் சர்வதேச பங்களிப்பை ஏற்கமுடியாது என கடும் போக்கை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைப் பொறுத்தவரையில் இதற்கு முரணான ஒரு நிலைப்பாட்டை எடுத்து சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த முனைகின்றார். ஜனாதிபதியின் கருத்து அவரது தனிப்பட்ட நிலைப்பாடு எனப் பிரகடனப்படுத்தும் அளவுக்கு வெளிவிவகார அமைச்சரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது. ஆக, இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது யார்?
இலங்கை தொடர்பான பிரேரணையை ஜெனீவாவில் கொண்டுவந்தவர்கள் என்ற முறையில், நிஷா பிஸ்வாளின் விஜயத்தின் போது இதற்கான பதில் எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பது பகிரங்கப்படுத்தப்படும் என்பதும், சர்வதேச பங்களிப்பு உட்பட பல்வேறு விடயங்களிலும் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் எனவும் 'வழமைபோல' எதிர்பார்க்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண முதலமைச்சர், வெளிவிவகார அமைச்சர் என முக்கிய பிரதிநிதிகளை அவர் சந்தித்துச் சென்றிருந்தபோதிலும் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களில் தமது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்த நிஷா தவறியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், வழமைபோல தமது 'முறைப்பாடுகளை' அவர்கள் முன்வைத்திருக்கின்றார்கள். அதற்குத் திட்டவட்டமான பதில் எதுவும் அமெரிக்க தரப்பிலிருந்து வரவில்லை.
"அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும்போது சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். எவ்வாறாயினும், அரசாங்கம் முன்னெடுக்கும் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமையவேண்டியது அவசியமானது" என நிஷா பிஸ்வால் நழுவல் போக்கில் வழமைபோன்ற ஒரு பதிலைத்தான் தமது நிலைப்பாடாக கூட்டமைப்பின் தலைவர்களுக்குக் கூறிச்சென்றிருக்கின்றார். பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை அமைக்கப்படுவதற்கு முன்னதாக அது தொடர்பில் கருத்துக்களை வெளிப்படுத்துவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அவர் விளக்கிக் கூறியிருக்கின்றார். ஜெனீவா பிரேரணை நிறைவேற்றப்பட்டு பத்து மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, அதற்கு எதிரான கருத்துக்கள் மேலோங்கிவருவதைத்தான் அவதானிக்க முடிகின்றது. சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என ஜனாதிபதியும், பிரதமரும் போட்டிபோட்டுக் கூறிவருவது ஜெனீவா பிரேரணைக்கு எதிரான போக்கை மேலோங்கச் செய்வதாகவே அமைந்திருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
நிஷாவுடனான சந்திப்பின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்ந்து கொண்டு இருக்கின்றமை தொடர்பாகவும், பௌத்த மதத்தை பரப்பும் வகையிலான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றமை குறித்தும் , இராணுவத்தின் தேவைக்காக தொடர்ந்தும் காணிகள் அடையாளம் காணப்பட்டு திட்டமிட்ட முறையில் சுவீகரிக்கப்படும் நிலைமை முற்றுப்பெறாது இடம்பெற்று வருகின்றமை தொடர்பாகவும் தெரியப்படுத்தப்பட்டது. இதனைவிட, ஜெனீவா பிரேரணையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக கைதிகளின் விடுதலை வெறும் பத்திரிகை அறிக்கையாக மட்டும்தான் உள்ளது போன்ற விடயங்களும் தெரியப்படுத்தப்பட்டது. இவை தொடர்பில் அரச தரப்பினருடனான சந்திப்புக்களின் போதும் ஆராயப்படும் என வழமைபோல நிஷா பதிலளித்துச் சென்றிருக்கின்றார்.
ஆட்சி மாற்றத்தின்போது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டிருக்கின்றது. அபோல ஜெனீவாவில் கடந்த வருடம் வழங்கிய உறுதிமொழிகளின் நிலையும் உள்ளது. மகிந்த ராஜபக்ஷ உட்பட சிங்களத் தீவிரவாதிகளின் எழிச்சி இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்துகின்றது. அல்லது அதனைக்காணமாகக் காட்டி தமது உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றது. மறுபுறத்தில், தமிழர் தரப்பையும் சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக நிஷா போன்ற மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் கொழும்பு வந்து கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லும் முறைப்பாடுகளை அனுதாபத்துடன் கேட்டுக்கொண்டுக்கொண்டு விமானம் ஏறிச் சென்றுவிடுவதும் சகஜமாகவிட்டது. இதனால்தான், மேற்கு நாட்டு இராஜதந்திரிகளின் வருகை பத்திரிகைச் செய்திகளில் பெறும் முக்கியத்துவத்தை அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொள்வதில்லை.
(ஞாயிறு தினக்குரல்: 2016-07-17)

No comments:
Post a Comment