- சபரி -
பொலிஸை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு உரியதா அல்லது மத்திய அரசுக்குள்ளதா?
வடமாகாண சபை உருவாகியிருக்கும் நிலையில் அதிகளவில் கேட்கப்படும் ஒரு கேள்வியாக இது உள்ளது. சர்ச்சைக்குரிய இந்தக் கேள்விக்கு பதிலைக் கூறுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ முற்பட்டிருக்கின்றார். இரு பக்கத்தையும் சமாளிக்க அவர் முற்பட்டிருப்பது தெரிகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.
கோதாபாய பாதுகாப்பு செயலாளராக இருந்தாலும், உண்மையில் ஒரு பாதுகாப்பு அமைச்சர் போன்றுதான் அவர் செயற்படுகின்றார். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலிதான் போரை நடத்தினார். ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரட்ணதான் போரை நடத்தினார். சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது அனுருத்த ரத்வத்தைதான் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்து போரை நடத்தினார்.
ஆனால், தற்போதைய பாதுகாப்புச் செயலாளரின் கடமைகளில் யாரும் தலையிடக் கூடாது என்பதற்காகத்தான் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிப்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தவிர்த்துக்கொண்டார். அதனால், ஒரு அதிகாரியாக இருந்தாலும் சக்திவாய்ந்த ஒரு அமைச்சர் போல கோதாபாய ராஜபக்ஷவினால் செயற்பட முடிகின்றது. ஒரு அமைச்சின் செயலாளர் என்பதைவிட நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய ஒருவர் என்ற வகையிலேயே அவரது கருத்துக்கள் இன்று முக்கியத்துவம் பெறுகின்றன.
கொழும்பிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை புதன் கிழமை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் சந்தித்துப் பேசிய போதே பொலிஸ் மற்றும் சட்டம், ஒழுங்கு அதிகாரங்கள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. வடபகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த கோதாபாய, 3 விடயங்களைக் குறிப்பிட்டார்.
1. வடபகுதியில் இருந்த இராணுவம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இராணுவச் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றவாளிகள் இலகுவாக நடமாட முடிகின்றது.
2. வடபகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு மாகாண முதலமைச்சரிடமே உள்ளது. அவர்தான் அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது சட்டம் ஒழுங்கு விடயத்தில் இராணுவத்தின் தலையீடு இல்லை. பொலிஸார்தான் இதனைப் பார்த்துக்கொள்கின்றார்கள்.
3. இவ்வாறான குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு மக்கள் வழிப்புக் குழுக்கள் போன்றவற்றை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
~~வடபகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு மாகாண முதலமைச்சரிடமே உள்ளது. அவர்தான் அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்|| என பாதுகாப்புச் செயலாளரே தெரிவித்ததுதான் பத்திரிகை ஆசிரியர்களுக்குப் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக தனக்குரிய அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்தபோது ஒரு விடயம் முக்கியமாக அவதானிக்கப்பட்டது. அவர் பொறுப்பேற்ற அமைச்சுக்களில் பிரதானமானதாக சட்டம் - ஒழுங்கு என்பதும் காணப்பட்டது.
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும் அல்லது மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என முதன் முதலாக குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை ஆரம்பித்து வைத்தவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாயதான். குறிப்பாக மாகாண சபைகளுக்கான காணி, கட்டம் ஒழுங்கு அதிகாரங்களுக்கு எதிரான போரை ஆரம்பித்து வைத்தவர் கோதாதான்! இது தனியான ஒரு அரசை அமைப்பதற்கான வழியை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்திருந்தார்.
வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக இதற்கான சட்டமூலம் ஒன்றைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதிலும், உள்ளிருந்தும் சர்வதேச ரீதியாகவும் உருவாகிய எதிர்ப்புக்களையடுத்து அந்தத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டிருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினையை முதலில் கிளப்பிய கோதாபாய ராஜபக்ஷவே இப்போது, ~~வடபகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு மாகாண முதலமைச்சரிடமே உள்ளது. அவர்தான் அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்" எனக்கூறியிருப்பது ஒரு திருப்பம் போல தெரியலாம்.
இது குறித்து அவர் தெரிவித்தபோது பத்திரிகை ஆசிரியர்கள் இரண்டு கேள்விகளை எழுப்பினார்கள்.
1. அப்படியானால் பொலிஸ் அதிகாரம் மாகாண சபைகளிடம் உள்ளதா?
2. பொலிஸாருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உள்ளதா?
இவைதான் அந்த இரண்டு கேள்விகளும்.
இதற்குப் பதிலளித்த கோதாபாய கொடுத்த விளக்கம் சமாளிக்கும் வகையில் இருந்ததே தவிர, சட்ட ரீதியானதாக இருக்கவில்லை.
“பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கும். மாகாண முதலமைச்சர் பொலிஸாருக்குக்கு உத்தரவிட முடியாது. ஆனால், மாகாண சபை பொலிஸ_டன் இணைந்து செயற்பட முடியும். உதாரணமாக மத்திய அமைச்சர்களிடம் பொலிஸாருக்கு உத்தரவிடுவதற்கான அதிகாரம் இல்லாவிட்டாலும், பிரச்சினைகள் வரும் போது பொலிஸாருடன் இணைந்து செயற்பட முடியும். அதேபோலத்தான் முலமைச்சரும் பொலிஸாருடன் இணைந்து செயற்பட முடியும்” என கோதாபாய விளக்கமளித்தார்.
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவை மத்திய அரசாங்கத்தினால் முடக்கப்பட்டவையாகவே உள்ளன. இதுவரையில் இருந்த மாகாண சபைகள் எதுவுமே அதிகாரப் பரவலாக்கலைக் கேட்காத - அதற்காகப் போராட மாகாண சபைகளாக இருந்தமையால் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், வடக்கு அதிகாரங்களைக் கோரும் ஒரு மாகாண சபை. குறிப்பாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுக்கான கோரிக்கையை முன்வைப்பதுடன், அதற்காக போராடும் ஒரு மாகாணமாகவும் இருக்கப்போகின்றது என்பதுதான் அரசுக்கு இப்போதுள்ள பிரச்சினை!
வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெளிவாகவே சொல்லிவிட்டார். மாகாண சபைகளுக்குரிய சட்டரீதியான அதிகாரங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதை அவர் உறுதியாகக் கூறியிருக்கின்றார். அதேவேளையில், அரசியலமைப்பிலுள்ள அதிகாரப் பரவலாக்கலை முழுமையாக வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை இந்தியாவும் வலியுறுத்தியிருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் வடக்கின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை கையாள வேண்டியவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனே என கோதாபாய ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். கோதாபாயவின் இந்தக் கருத்து ஒருவகையில், இந்தியாவையும் சர்வதேசத்தையும் திருப்திப்படுத்த கூறப்பட்ட கருத்தாக அமைந்திருக்கலாம். அவர்களுடைய அழுத்தங்கள் அதன் பின்னணியில் இருந்திருக்கலாம்.
ஆனால், பொலிஸ் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் தன்னுடைய கைகளில் வைத்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை முதலமைச்சர் பயன்படுத்திக்கொள்வது எவ்வாறு? கோதாவின் கூற்று எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்ற கேள்வி இங்கு எழுப்பப்படுகின்றது.
இதனைவிட, மாகாண அரசின் அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதற்கு எதிரான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள் எதுவும் 13 ஆவது திருத்தத்தில் இல்லை. பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களில் மத்திய அரசு நினைத்தபடி தலையிடுவதும், கைவைப்பதும் சாத்தியம் என்பதை கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஓற்றையாட்சி முறையின் பலவீனத்தைத்தான் இது பெருமளவுக்குப் புலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
இந்தப் பின்னணியில் வடக்கில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான் பொறுப்பு என கோதாபாய ராஜபக்ஷ சொல்வாராயின் அது எந்தளவுக்கு உண்மையானதாக இருக்கும்?
வடமாகாண சபையின் முதலாவது அமர்வில் கொள்ளை விளக்க உரையை நிகழ்த்திய விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அதிகாரத்துக்கான போட்டி இனித்தான் ஆரம்பமாகப் போகின்றது என்பதைக் காட்டியிருக்கின்றது. வடமாகாண சபை கோரும் அதிகாரங்களை வெறும் வார்த்தைகளால் வழங்கிவிட முடியாது. எழுத்து மூலமாக சட்டரீதியாக இந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

(ஞாயிறு தினக்குரல்: 2013-10-27)
No comments:
Post a Comment