ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை வியாழக்கிழமை அமெரிக்கா உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பித்திருக்கின்றது. இதன் மூலம் ஜெனீவா இராஜதந்திரக் களம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டையும் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரேணை விவாதத்துக்கு விடப்பட்டு, அதன் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும். அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையின் உள்ளடக்கம் எவ்வாறானது என்பதை நோக்கியே அனைவரது கவனமும் திரும்பியுள்ள இன்றைய நிலையில், இலங்கை இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பதும், இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறானதாக அமையும் என்பதும்தான் இப்போது கேள்விக்குறியாக இருக்கின்றது.
இலங்கை தொடர்பான பிரேரணையின் வரைபை அமெரிக்கா கடந்த வாரம் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடையே சுற்றுக்கு விட்டிருந்தது. அது தொடர்பில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. இலங்கைக்கு ஆதரவான பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கியூபா உட்ப பல நாடுகள் இந்தப் பிரேரணை மென்மைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தன. இதில் பல நாடுகளுக்கு மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா போன்ற நாடுகள் பிரேரணை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. இருந்தபோதிலும், இலங்கைப் பிரச்சினையுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள இந்தியா, இந்த விவாதங்களின் போது மௌனமாகவே இருந்துள்ளது.
இந்தப்பின்னணியில் தற்போது அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் தீர்மானம், ஏற்கனவே சுற்றுக்கு விடப்பட்டிருந்த நகல் பிரேரணைகளில் சிறுமாற்றங்கள் செய்யப்பட்டு சற்று மென்மைத் தன்மை கொண்டதாக மாற்றப்பட்டிருப்பதாக ஒரு கருத்து வெளியிடப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட நகல் பிரேரணையில் வலியுறுத்துவது அல்லது எச்சரிக்கின்றது என்ற சொற்பதங்கள் காணப்பட்டன. இருந்தபோதிலும், இறுதியாகச் சமர்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரேரணையில் அவற்றுக்குப் பதிலாக ஊக்குவிக்கின்றது என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது சொற்பதத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு மென்மைப்படுத்தலே தவிர, உள்ளடக்கத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு மாற்றமல்ல.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் பிரேரணை, அந்த அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதை ஊக்குவிப்பதாகவும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனைவிட முக்கியமாக, இலங்கையில் மனித உரிமைகளைப் பேணுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையை ஊக்குவிப்பதெனவும், இதன் முன்னேற்றம் தொடர்பான வாய்மொழிமூலமான அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் 24 ஆவது கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் என அமெரிக்க பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
25 ஆவது கூட்டத் தொடரில் இது தொடர்பான விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றைவிட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் சுயாதீனமான செயற்பாடுகளை வலியுறுத்துவதாகவே அமெரிக்காவின் பிரேரணை அமைந்திருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. இவை எதுவும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளக்கூடியவையல்ல என்பதால் இலங்கை இவற்றை கடுமையாக எதிர்க்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்.
இதேவேளையில், வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இடம்பெற்ற சர்வதேச காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தில் பங்குகொண்டு உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கையின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு முற்பட்டார். இலங்கையில் 30 வருடகாலமாக இடம்பெற்ற மோதல் மிகவும் மோசமானதாக இருந்தமையால், அதற்கு உடனடியாகத் தீர்வைக்கண்டுவிட முடியாது எனவும் இதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது இலங்கை அரசாங்கம் வழமையாகக் கடைப்பிடிக்கும் காலத்தைக் கடத்தும் உபாயமாகவே தோன்றுகின்றது. இலங்கையின் இந்த அணுகுமுறையை மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
போர் முடிவுக்கு வந்து இப்போது நான்கு வருடங்கள் பூர்த்தியாகப்போகின்றது. இக்காலத்தில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான செயன்முறைகள் எதனையும் அரசாங்கம் சுயமாக முன்னெடுக்கவில்லை. சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாகத்தான் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இது ஒரு உள்நாட்டுப் பொறிமுறையாக இருந்தாலும் கூட அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உளப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. பரிந்துரைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்பதை மனித உரிமைகள் அமைப்புக்களின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. அதற்குக் கூட சர்வதேச அழுத்தங்கள்தான் அவசியமானதாக இருக்கின்றது.
அமெரிக்க தொடர்ந்தும் இரண்டாவது வருடமாகக் கொண்டுவந்திருக்கும் பிரேணையைப் பொறுத்தவரையில் சில விடயங்கள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இது மேலும் காலத்தைக் கடத்துவதற்கான வாய்ப்பைக் கொடுப்பதாக இதுவும் அமைந்துவிடுமா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது. எதிர்வரும் 21 ஆம் திகதி பிரேரணை விவாதத்துக்கு விடப்படும் போது இதில் மேலும் திருத்தங்கள் செய்யப்படலாம். இதனை மேலும் கடினமானதாக்கும் வகையிலான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என தமிழகத்திலிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்களுக்குப் புதுடில்லி செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை. பிரேரணையின் இறுதிவாசகங்கள் வெளியான பின்னர் தமது நிலைப்பாடு அறிவிக்கப்படும் என இந்தியா தெரிவித்திருந்த போதிலும் தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கின்றது.
போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எதுவும் அரசாங்கத்தினால் உளப்பூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. உண்மையான நல்லிணக்க முயற்சி ஒன்றுக்கு பொறுப்புக்கூறல் அவசியம். அந்தவகையில்தான் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் அமெரிக்கப் பிரேரணையை வரவேற்றிருந்தன. இவ்விடயத்தில் மேலும் காலத்தைக் கடத்தும் உபாயத்தைக் கையாளாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரோக்கியமான செயற்திட்டம் ஒன்றை அரசு முன்வைப்பது அவசியமானதாகும்.
(ஞாயிறு தினக்குரல்: 2013-03-17)

No comments:
Post a Comment