இலங்கை அரசியலில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் உருவாகியிருக்கும் குழப்பங்களைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பெயரும் தீவிரமாக அடிபடத் தொடங்கியுள்ளது. அரசாங்கத் தரப்பில் இப்போது உருவாகியிருக்கும் குழப்பங்கள் அனைத்துக்கும் சந்திரிகா குமாரதுங்கவே காரணம் என அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்க, ஒன்றும் தெரியாதவர் போல சந்திரிகா காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றார். சந்திரிகாவின் நிகழ்ச்சி நிரல் என்ன என அறியமுடியாமல் அரச தரப்பு திகைத்துப்போயிருப்பதாகவும் தெரிகின்றது.
கடந்த சில மாதங்களால் வெளிநாட்டில் தங்கியிருந்த சந்திரிகா இந்த விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில்தான் நாடு திரும்பியிருக்கின்றார். நாடு திரும்பியவுடனேயே அவரது பெயர் சூடான செய்தியாகியிருக்கின்றது. இந்தவாரச் செய்திகளில் பெரிதாக அடிபட்டவர் என்ற முறையில் சந்திரிகாவின் அரசியல், அவரது தற்போதைய இலக்கு என்பன தொடர்பாக இந்த வாரம் பார்ப்போம்.
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு அல்லது அதனை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்துவரும் ஒரு நிலையில்தான் சந்திரிகாவின் நகர்வுகளும் தீவிரமடைந்திருப்பதாக அரசு கருதுகின்றது. அரசுக்கு எதிராக அரசுக்குள் இருந்துகொண்டே முதலில் இந்த விடயத்தில் உரத்துக் குரல் கொடுத்தவர் அமைச்சர் ராஜித சேனாரட்ண. அவர் சந்திரிகாவுக்கு நெருக்கமானவர். விஜயகுமாரதுங்க சிறிலங்கா மக்கள் கட்சியை அமைத்தபோது அதில் இணைந்திருந்தவர். இப்போது 13 ஆவது திருத்தத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கும் அமைச்சர்களின் பின்னணியில் சந்திரிகா இருப்பதாக அரசு நம்புவதற்கு காரணம் உள்ளது.
இந்த நிலைமைகளைப் பயன்படுத்தி சுதந்திரக் கட்சியில் பிளவை ஏற்படுத்தவும், தன்னுடைய மகன் விமுத்தியை அரசியலுக்குக் கொண்டுவரவும் சந்திரிகா முயல்வதாக அரசு கருதுவதாகத் தெரிகின்றது. அரச உயர் மட்டத்தில் காணப்படும் இந்த சந்தேகத்தைத்தான் அமைச்சர் வீரவன்ச ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதிபலித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில் பண்டாரநாயக்க குடும்பத்துக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் இடையில் அதிகாரப் போட்டி ஒன்று இடம்பெற்று வருவது புதிதல்ல. அது இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளதா என்ற கேள்வி ஒரு புறம் எழுகின்றது.
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக சவால்விடக் கூடிய ஒருவரை அவர்கள் தேடிக்கொண்டுள்ளார்கள் என்பது உண்மை. ரணிலால் அது சாத்தியமாகவில்லை. பொன்சேகாவும் களத்தில் இறங்கித் தோற்றவர்தான். அதனால்தான் சந்திரிகா மீது நம்பிக்கை வைக்க வேண்டியவர்களாக எதிர்த்தரப்பினர் உள்ளார்கள். சநதிரிகாவைப் பொறுத்தவரையில் அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற முறையில் ஆளும் கட்சிக்குள்ளேயே அவருக்கு ஆதரவாளவர்கள் உள்ளனர். ராஜபக்ஷ குடும்ப ஆதிக்கத்தால் அதிருப்தியடைந்த சிலரும் சந்திரிகாவை ஆதரிக்கக்கூடும்.
சந்திரிகாவின் பெயர் தற்போது பரபரப்பாகப் பேசப்படுவதற்கு இவை மட்டும் காரணமல்ல. செப்டம்பரில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியில் தனது ஆதரவாளர்கள் சிலரை களம் இறக்க சந்திரிகா திட்டமிடுவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் ஏற்கனவே பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டன.
இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் கண்டிக்குச் சென்ற சந்திரிகா அங்கு மகாநாயக்கர்களுடன் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமாகப் பேசியிருக்கின்றார். அரசியல் தலைவர் ஒருவர் மகாநாயக்கர்களைச் சந்தித்துப் பேசுவது என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமானது. புதிய முயற்சி ஒன்றில் இறங்கும் போதுதான் அவர்கள் மகாநாயக்கர்களைச் சந்தித்து ஆசீர்வாதமும் ஆலோசனையையும் பெறுவதை வழமையாகக் கொண்டுள்ளார்கள். இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் எதனையுமே தெரிவிக்காமல் சந்திரிகா சென்றுவிடடார்.
சந்திரிகா வந்தால் ஏதோ சாதித்துவிடுவார் என்பது போன்ற கருத்துக்கள் சிலரிடம் காணப்படுகின்றது. மக்களுடைய அதிகளவு ஆணையுடன் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக வந்த சந்திரிகா குமாரதுங்க தன்னுடைய பதவிக்காலத்தில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதில் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை. ரணில் விக்கரமசிங்க மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தடையாக இருந்தவரும் அவர்தான். அதனைவிட 13 என்ற ஒரு ஆயுதத்தை மட்டும் வைத்துக்கொண்டு போரின் வெற்றிக் கோஷத்துடன் அதிகாரத்திலுள்ள ராஜபக்ஷ ஆட்சிக்கு சவால்விடுவது என்பது நினைத்துப் பார்க்கக்கூடியதல்ல.
ஆக, சந்திரிகா என்பது வெறும் சலசலப்புத்தான்!
தவசி.

(2013-06-30 ஞாயிறு தினக்குரல்)
No comments:
Post a Comment