ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட்டிருக்கின்றது. இனவாதக் கட்சிகளோ, பிரதான போட்டியாளரான கோத்தாபய ராஜபக்ஷ தரப்பினரோ சிங்கள மக்களைக் குழப்பிவிட முடியாதவாறு, சிறுபான்மையினருடைய நம்பிக்கையைப் பெறத் தக்கதாக சில விடயங்களை அவர் அதில் குறிப்பிட்டிருக்கின்றார். கோத்தபயவின் விஞ்ஞாபனத்துடன் ஒப்பிடும் போது, முன்னேற்றகரமான சில அம்சங்கள் இதில் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், ஐந்து தமிழ்க் கட்சிகளால் அண்மையில் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளிலிருந்து இது வெகு தொலைவில் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
தமது எதிர்காலத்துக்கான திட்டங்களை வெளிப்படுத்துவதற்காக இந்த விஞ்ஞானங்களை வேட்பாளர்கள் வெளியிடுவது என்பது சம்பிரதாயமாக மட்டுமே உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளைப் போல, இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களும் பின்னர் நிறைவேற்றப்படுவதில்லை. அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கான காரணங்கள் அடுத்த தேர்தல் காலத்தில் சொல்லப்படும். சந்தர்ப்பங்களைச் சமயோசிதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியலில் இவை சகஜம். ஆனால், வேட்பாளர்கள் பதவிக்கு வந்தால் என்னத்தைச் செய்வார்கள் என்பதற்கான வழிவரைபடத்தை இந்த விஞாபனங்கள் ஓரளவுக்குக் காட்டுவதாக அமையும் என்பதால்தான் அவை கவனிப்புக்குள்ளாகின்றன, விமர்சனத்துக்குள்ளாகின்றன.
கோதாபய ராஜபக்ஷவின் விஞ்ஞானம் தொடர்பாக கடந்த வாரத்தில் பார்த்திருந்தோம். நாட்டின் பிரதான பிரச்சினையாகவுள்ள இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்து எதுவுமே பேசாத ஒரு விஞ்ஞானமாக அது அமைந்திருந்தது. ஆனால், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பதை கோத்தாபய தெரிவித்திருக்கின்றார். ஒற்றையாட்சி என்பதும், பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதும் அவரது விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள். ஆக, அவர் ஜனாதிபதியானால் கொண்டுவரப்போகும் அரசியலமைப்பும் இனநெருக்கடிக்கு ஆக்கபூர்வமான ஒரு தீர்வைக் கொண்டுவருவதாக அமைந்திருக்காது.
இப்போது சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், "தற்போது முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் அதற்கான அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து தாமதமின்றி முன்னெடுக்கப்படும்" என்ற வகையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பதைப் போல, "அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் விட்ட இடத்திலிருந்து தொடரும்" என்பதைத்தான் சஜித் பிரேமதாச தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் என்றே கருத வேண்டும்.
பாராளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றி மூன்று வருடகாலமாக முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள், மற்றும் அது தொடர்பில் வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை என்பன தொடர்பில் தமிழ் மக்கள் சார்பில் பல விமர்சனங்கள் உள்ளன. இருந்தாலும், அதனைன அப்படியே கைவிட்டுவிட்டு புதிய முயற்சி ஒன்றை ஆரம்பிக்காமல் - அந்த இடத்திலிருந்து தொடர்வது காலதாமதத்தை ஏற்படுத்தாமல் தீர்வொன்றைக் காண்பதற்கு உதவலாம். அதனைவிட இரண்டாவது சபை தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சாதகமாகப் பரிசீலிக்கக்கூடிய விடயங்கள்தான்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தில் அரசாங்கத்தைவிட அதிகளவு அக்கறையாக கடந்த நான்கு வருடங்களில் செயற்பட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். அந்த முயற்சிகளை விட்ட இடத்திலிருந்து தொடர்வதென்பது கூட்டமைப்பைத் திருப்திப்படுத்த்தும் ஒரு உபாயமாக இருக்கலாம். சிங்களக் கடும்போக்காளர்களை சீற்றத்துக்குள்ளாககாமல், கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் சஜத் பிரேமதாசவின் விஞ்ஞானம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.
இரண்டு பிரதான வேட்பாளர்களும் வெளியிட்டுள்ள விஞ்ஞானங்கள் பெருமளவுக்கு சிங்கள வாக்காளர்களை இலக்கு வைத்தவையாகத்தான் இருக்கின்றன. இருவருக்கும் இடையேயான போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறுபான்மையினருடைய வாக்குகளும் அவசியம் என்பதை இருவரும் உணர்கின்றார்கள். அந்த வாக்குகளை இலக்கு வைத்து வாக்குறுதிகள் எதனையும் வெளிப்படையாகச் சொல்வதற்கும் அவர்கள் தயங்குகின்றார்கள். சஜித் பிரேமதாச தன்னுடைய விஞ்ஞாபனத்திலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் தமிழ் மக்களைக் கவர்வதற்காக சில விடயங்களைச் சொல்வதற்கு முற்படுகின்ற போதிலும் மிகவும் நிதானமாகத்தான் அவை குறித்து பேசுகின்றார். எதிர்த் தரப்பின் விமர்சனங்களுக்குள்ளாகக் கூடாது என்பதால் கத்திமேல் நடப்பது போலவே நடக்கின்றார்.
தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பதில் வெறுமனே தேர்தல் விஞ்ஞாபனங்களை மட்டும் கவனத்திற்கொண்டு தீர்மானித்துவிட முடியாது என்பதே கடந்தகால அனுபவங்கள் மூலம் பெற்றுக்கொண்ட உண்மையாகும். யதார்த்தமும் அதுதான். கல்முனையை தரமுயர்துவதாக கூட்டமைப்பின் தலைமைக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் காப்பாற்ற முடியவில்லை. இதற்காக பல போராட்டங்களும், பல சுற்றுப் பேச்சுக்களும் நடைபெற்றது என்பது வெறும் பத்திரிகைச் செய்திகளாகிப்போய்விட்டது. நிர்வாக ரீதியாகத் தீர்க்கப்படக்கூடிய இவ்வாறான ஒரு சிறிய விஷயத்தைக் கூட அரசாங்கத்தினால் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் பெரிய விஷயங்களை பதவிக்கு வரப்போகும் புதிய ஜனாதிபதியால் எப்படிச் செய்துமுடிக்க முடியும்?
இதனைவிட கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின்படி வரப்போகும் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கும். நிறைவேற்று அதிகாரங்களில் பெரும்பாலானவை பாராளுமன்றத்துக்கும், அமைச்சரவைக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விஞ்ஞானங்களில் சொன்ன அனைத்தையும் செய்வதற்கான அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்கப்போவதில்லை. குறிப்பாக அரசியலமைப்புச் சீர்திருத்தம் போன்றன பாராளுமன்றத்தினாலேயே கையாளப்படும். அதனை ஜனாதிபதியால் வழிநடத்த முடியாதிருக்கும். ஆக, மக்களைக் கவரும் வகையில் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டாலும், அடுத்துவரப்போகும் பாராளுமன்றமே தீர்க்கமானதாக இருக்கும்.
(ஞாயிறு தினக்குரல்: 2010-11-03)